உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வுக்கு போட்டி அ.தி.மு.க., தான்: சொல்கிறார் துணை முதல்வர் உதயநிதி

தி.மு.க.,வுக்கு போட்டி அ.தி.மு.க., தான்: சொல்கிறார் துணை முதல்வர் உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அ.தி.மு.க., தான் எங்களுக்கு போட்டி,'' என தி.மு.க., இளைஞரணி தலைவரும் துணை முதல்வருமான உதயநிதி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி: நீண்ட காலமாக தி.மு.க., வின் பிரதான போட்டியாளராக அ.தி.மு.க., இருந்தாலும், தற்போதைய நிலையில் தி.மு.க.,வுக்கு பலம் வாய்ந்த போட்டியாளர் யாரும் இருப்பதாக நான் கருதவில்லை. அதே நேரத்தில், பலவீனமான நிலையில் அ.தி.மு.க., இருந்தாலும், அவர்களைத்தான் பிரதான எதிர்க்கட்சியாக பார்க்கிறோம். அவர்கள் தான் எங்கள் போட்டியாளர். பா.ஜ., மற்றும் அதன் அனைத்து 'பி டீம்'களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழகத்தில், மதசார்பற்ற சக்திகளை பலவீனப்படுத்த பா.ஜ., அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்பதை அறிந்தே இருக்கிறோம். ஆனால், தமிழக மக்கள் பா.ஜ., சதியை அறிந்து அதை தோற்கடிப்பர். எங்கள் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியையும் மதித்து, அவர்களது கருத்துகளை உள்வாங்கி கொள்கிறோம். ஆனால், தே.ஜ., கூட்டணியில் அனைத்து முடிவுகளும் டில்லியில் எடுக்கப்பட்டு தமிழக கட்சிகளின் மீது திணிக்கப்படுகின்றன. அதை, கூட்டணி கட்சிகளும் சந்தோஷமாக ஏற்பதுதான் வேடிக்கையாக உள்ளது. எங்கள் கட்சி தலைவர் ஸ்டாலின், தி.மு.க., இளைஞர் அணியை துவக்கி நீண்டகாலம் வழிநடத்தியவர். அந்த வகையில் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து எதிர்காலத்திற்கு அவர்களை தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தை புரிந்தே இருக்கிறார். கட்சியின் அனைத்து அமைப்புகளிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க நான் குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Palanisamy T
ஜன 02, 2026 19:24

முதலில் நீங்கள் போட்டிப் போட்டுக் கொண்டா துணைமுதல்வராக தேர்வுச் செய்யப் பட்டீர்கள். பொட்டியைப் பற்றி தயவுச் செய்து பேசவேண்டாம்.


vidhu
ஜன 02, 2026 13:30

அதிமுக திமுக இரண்டும் பங்காளிகள் இங்க எங்கே முதல் இடம் இரண்டாம் இடம்


பாலாஜி
ஜன 02, 2026 13:20

திமுகவுக்கு போட்டியாக முதல் இடம் பிடித்திருப்பது தவெக. இரண்டாவது இடத்தில் அதிமுக.


vivek
ஜன 02, 2026 15:14

கடைசியில் திமுக தோற்றுவிடுமா பாலாஜி


Palanisamy T
ஜன 02, 2026 19:28

பொறுப்பில்லாத ரசிகர்களை நம்பி தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக அழிவுப் பாதைக்கு போய்க் கொண்டிருக்கின்றது.


சந்திரன்
ஜன 02, 2026 11:45

ஆக இவரே அதிமுகவை அரியணையில் உட்கார வைப்பார்


என்னத்த சொல்ல
ஜன 02, 2026 10:46

எதிர்க்கட்சி, போட்டி இருக்குங்கிறத ஒத்துக்கிட்டார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிரிகளே கண்ணுக்கு தெரியலைனு ஆணவத்தில் சொல்லவில்லை.


Natchimuthu Chithiraisamy
ஜன 02, 2026 10:43

இந்த செய்தி இந்து மக்களுக்கு புரியுமா? இல்லை எதுவுமே புரியாதா? இது வெற்றி வியூகம் அதிக வாக்கு கொண்ட ஒரு தர மக்களை பிரித்தெடுக்க.


angbu ganesh
ஜன 02, 2026 09:32

உண்மையான ஹிந்துக்கள் யாரும் உன் கட்சிக்கு வோட்டு போட மாட்டாங்க அப்படி போட்டா அவனுங்க ........


Sankar
ஜன 02, 2026 11:30

திருட்டு தீமுகதான் மதவாத கட்சி, மக்களிடையே பிரிவினை ஏட்படுத்தி ஓட்டு வாங்கிறது, ஆனால் இந்த சிருபான்மை மக்களுக்கு அது தெரியவில்லை,


ram
ஜன 02, 2026 13:41

2g ராசா சொன்னவங்க


Srinivasan M
ஜன 02, 2026 09:28

பயந்துட்டாப்பல .


பேசும் தமிழன்
ஜன 02, 2026 08:06

நீங்கள் பெரிய கட்சி என்றால் தனித்து போட்டியிடலாம் அல்லவா.... தனித்து தேர்தலில் நின்றால் டப்பா டான்ஸ் ஆடி விடும்.... அத்தனை தொகுதிகளிலும் தோல்வி மட்டுமெ கிடைக்கும்.


vivek
ஜன 02, 2026 08:05

உண்மையில் திமுகவிற்கு போட்டி தமிழக மக்கள் தான்.. கடைசி வாய்ப்பு..


மேலும் செய்திகள்