உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் மீது கைது நடவடிக்கை பாய்ந்தால் த.வெ.க.,வுடன் கைகோர்க்க அ.தி.மு.க., தயார்

விஜய் மீது கைது நடவடிக்கை பாய்ந்தால் த.வெ.க.,வுடன் கைகோர்க்க அ.தி.மு.க., தயார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

த.வெ.க., தலைவர் விஜய் கைது செய்யப்பட்டால், தி.மு.க., அரசை எதிர்த்து, அக்கட்சி தொண்டர்கள் நடத்தும் ஆர்ப் பாட்டங்களில், அ,தி.மு.க., வினரும் பங்கேற்க திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக, அம்மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4hgjm8iy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தள்ளுபடியானதால், அவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்நிலையில், கரூர் உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரிக்க, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று, தன் விசாணையை கரூரில் துவக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, கரூர் போலீசாரிடம் உள்ள வழக்கு ஆவணங்கள், சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் அடிப்படையில், விசாரணை துவங்கப்பட்டு உள்ளது. பொது மக்களின் நேரடி சாட்சிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விஜயிடம் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின், அவர் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு, அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. 'விஜயை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால், ஆதாரம் இருந்தால், கண்டிப்பாக கைது செய்யப்படுவார்' என, தி.மு.க., அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். எனவே, விஜய் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டால், அதை எதிர்த்து, மாநிலம் முழுதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போராட்டங்கள் நடத்த, த.வெ.க., மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், த.வெ.க., நடத்த திட்டமிட்டுள்ள அந்த போராட்டங்களில், அ.தி.மு.க., தொண்டர்களும் பங்கேற்று, விஜய்க்கு ஆதரவாக அணிவகுக்க உள்ளனர். அதன் வாயிலாக, அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி உருவாக அச்சாரம் போடப்படும் என, அ.தி.மு.க., தரப்பு நம்புகிறது.

பழனிசாமி மகன்

பேச்சு

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மகன் மிதுன், சமீபத்தில் விஜய்க்கு நெருக்கமான ஒருவரிடம், கூட்டணி குறித்து பேச்சு நடத்தி உள்ளார். கரூர் சம்பவத்தின் போது, 'பாதுகாப்பு குறைபாடு தான் காரணம்; தி.மு.க., அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்' என, முதன்முதலில் பழனிசாமி தான் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதன் காரணமாக, தர்மபுரி, அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் , பழனிசாமி நடத் திய பிரசார கூட்டங்களில், த. வெ.க., வினர் தங்கள் கட்சி கொடி களுடன் பங்கேற்றனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Srprd
அக் 06, 2025 22:17

At last Palani is showing some courage to oppose the DMK.


Rajasekar Jayaraman
அக் 06, 2025 18:26

தமிழகத்தைப் பற்றி எவருக்குமே கவலை இல்லை பதவியும் பணமும் தான் முக்கியம்.


Haja Kuthubdeen
அக் 06, 2025 11:10

எடப்பாடியார் தாமதம் செய்யாமல் விஜயுடன் நேரடியாக ஒரு சந்திப்பை செய்வது மிகப்பெரிய பலனை உண்டாக்கும்.அவர் அரசியல் தெரியாதவர் அல்ல..


Venugopal S
அக் 06, 2025 11:09

இ பி எஸ் ஸுக்கு இருக்கும் பதவி மோகத்துக்கு ட்ரம்ப் புடன் கூட கூட்டணி வைப்பார் போல் உள்ளதே!


Haja Kuthubdeen
அக் 06, 2025 12:25

உங்களின் கவலை புரியுது.. வெற்றி பெற கூட்டணி அமைக்க கொள்கைகள் பார்த்தா செய்கிறார்கள்.கொள்கை பார்த்திருந்தா மாறன் பிஜெபி மந்திரி சபையில் இருந்தா இருப்பார்.எடப்பாடி சீன அதிபர் கூடவும்பேச்சு நடத்தினாலும் நடக்கும்.


ramesh
அக் 06, 2025 10:53

பிஜேபி உடன் விஜய் மற்றும் எடப்பாடி கூட்டணி அமைத்த பிறகு 2 தொகுதியில் வெற்றி பெற்று இருந்தாலும் மற்ற இரண்டு கட்சிகளையும் அழித்து விட்டு முதல்வர் நாற்காலியில் பிஜேபி அமரும். விஜய் கட்சி மலர்வதற்குள் கருக செய்யப்படும். எடப்பாடிக்கு வழக்கம் போல அடிமை சாசனம் மட்டுமே கொடுக்கும் பிஜேபி


Haja Kuthubdeen
அக் 06, 2025 12:27

உங்களுக்கு விஜய் மீதும் அஇஅஅதிமுக மீதும் உள்ள கரிசணம் புரியுது.


ராமகிருஷ்ணன்
அக் 06, 2025 09:38

பி ஜே பி, அதிமுக வுடன் த வே காவும் சேர்த்து விட்டால் திமுக 1 சீட் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை. முழுமையாக அழித்து ஒழிக்கப்படும். எல்லா DMK FILESம் விசாரணைக்கு வந்து விடும். மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு வராது


ramesh
அக் 06, 2025 10:08

உங்களுக்கு பகல் கனவு காண முழு சுதந்திரம் உண்டு


Haja Kuthubdeen
அக் 06, 2025 11:13

பகல் கணவு கூட பலித்து விடும்.பிஜெபி கூட்டணியிலோ காங்கிரசுடனோ விஜய் கூட்டணி அமைத்து விட்டால் திமுக மூன்றாம் இடத்துக்கு போய்விடும்.


Natchimuthu Chithiraisamy
அக் 06, 2025 11:31

12 லட்சம் கோடி இந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி இருக்கிறது அனைவர் வாயிலும் பணம் தான் நோ விசாரணை


angbu ganesh
அக் 06, 2025 09:35

த.வெ.க., தலைவர் விஜய் கைது செய்யப்பட்டால், தி.மு.க., அரசை எதிர்த்து, அக்கட்சி தொண்டர்கள் நடத்தும் ஆர்ப் பாட்டங்களில் ஏம்ப்பா கரூர்ல வெறும் கூட்டத்துக்கே 41 பலி வாங்கிட்டேன் அணில் இப்போ ஆர்ப்பாட்மினா 100 confirm


pakalavan
அக் 06, 2025 08:24

அப்போ பாஜக காரனுக்கு ஆப்பு தயாரா இருக்கு


Haja Kuthubdeen
அக் 06, 2025 11:16

ஆப்பு விஜயின் முடிவைப் பொறுத்தே!!!காங்கிரஸ் விஜயுடன் சேர்ந்தாலும்.. பிஜெபியில் சேர்ந்தாலும் கத கந்தல் ஆயிடும்.2011 ரிட்டர்ன்....


Ranganathan
அக் 06, 2025 08:21

இந்த எடப்பாடி தான் வாழ, அதிமுக வையே காவு தர தயங்க மாட்டார் போல...


Haja Kuthubdeen
அக் 06, 2025 11:18

இதில் அஇஅதிமுகவை காவு வாங்க என்ன அப்படி இருக்கு....விஜயும் அஇஅதிமுகவும் இனைந்தால் 2011முடிவு கன்பார்ம்.


Sun
அக் 06, 2025 07:44

த.வெ.க கொடியை வேண்டுமானால் அ.தி.மு.க கொடியுடன் சேர்த்து கட்டலாம். நடந்த கரூர் துயர சம்பவத்திற்கு நான்தான் காரணம் என பொறுப்பேற்று விஜய் மன்னிப்பு கோராத வரை மக்கள் த.வெ.கவுடன் சேர்த்து அ.தி.மு.கவிற்கும் டின் கட்டி விடுவார்கள்.


Haja Kuthubdeen
அக் 06, 2025 11:21

விஜய் மீது தவறா மற்றவர்கள் மீது தவறா என்பதை மக்கள் அல்ரெடி தீர்மாணித்து விட்டார்கள். விஜய் மன்னிப்பு கேட்டால் அனைத்துக்கும் காரணம் அவர்தான் என்ற மாயத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.


Haja Kuthubdeen
அக் 06, 2025 11:23

எந்த மக்கள் யாருக்கு டின் கட்ட போகிறார்களோ....பார்ப்போம் தேர்தலில்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை