உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அங்கீகாரம் இன்றி இயங்கும் 8,000 மெட்ரிக் பள்ளிகள்

அங்கீகாரம் இன்றி இயங்கும் 8,000 மெட்ரிக் பள்ளிகள்

மதுரை : தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல், 'பைல்'கள் நிலுவையில் உள்ளதால், இயக்குநரகம் மீது தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் 13,000க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளில், 62 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது நடைமுறை. இதற்காக கட்டட உறுதித்தன்மை, கட்டட உரிமம், தீயணைப்பு, தடையில்லா சுகாதார சான்றுகள் பெற்று, டி.இ.ஓ., அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். டி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து இயக்குநர் அலுவலகம் செல்வதற்குள், பல்வேறு இடையூறுகளை தனியார் பள்ளி உரிமையாளர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, அங்கீகாரம் புதுப்பிக்க டி.இ.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பித்தாலும், பள்ளி நிர்வாகிகள், இயக்குநர் அலுவலகம் சென்று பார்க்க வேண்டியவர்களை பார்த்தால் தான், டி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்தே 'பைல்'கள் நகரும். இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தகவல் வராத எந்த பள்ளியின் 'பைல்'களையும், இணை இயக்குநர், இயக்குநருக்கு அனுப்பி வைக்கக்கூடாது என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு, 2018 முதல் உள்ளூர் திட்டக் குழும ஒப்புதல் பெற வேண்டும் என்ற உத்தரவு பெரும் சவாலாக உள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்து ஏழு ஆண்டுகளாகியும், டி.டி.சி.பி., இதுவரை உரிய வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை. இதனால், நகர்ப்புற பள்ளிகள் கடும் பாதிப்பை சந்திக்கின்றன. இது குறித்து, அமைச்சர், இயக்குநர் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும், நடவடிக்கை இல்லை என்பது தனியார் பள்ளிகளின் குற்றச்சாட்டு. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: தற்போதைய நிலையில் 8,000 பள்ளிகள் 2022, 2023ல் இருந்து அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இயங்குகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு மண்டல வாரியாக முகாம் நடத்தி, அங்கீகாரம் புதுப்பிப்பை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேரில் வழங்கினர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஒரு முறை தான் அதுபோன்ற முகாம் நடத்தப்பட்டது. தற்போது, தனியார் பள்ளிகள் இயக்குநர் அலுவலகம் ஏன் தாமதப்படுத்துகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. முறையான புதுப்பித்தல் இல்லாத பள்ளிகளில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால், நிர்வாகம் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கடைசியாக, 'அங்கீகாரம் இல்லாத பள்ளி' என்ற பெயருடன் அதிகாரிகள், 'சீல்' வைத்து விடுகின்றனர். ஆனால், அதே அதிகாரிகள் தான் அங்கீகாரம் புதுப்பித்தல் நடவடிக்கைகளை இழுத்தடிக்கின்றனர் என்பது வெளியே தெரிவதில்லை. எனவே, இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

adalarasan
ஆக 11, 2025 19:27

கொடுக்க வேண்டியதை கொடுத்தால் சீக்கிரம் approval ,,,கொடுத்துடுவாங்க . .


Sudha
ஆக 11, 2025 11:28

மருத்துவ இன்ஜினியரிங் சேர்க்கைகளின் பணம் குறைந்துள்ளது .இனி மெட்ரிக், பிறகு நர்சரி துறைகள். அப்பப்போ ரொட்டேஷன் தான்


Sudha
ஆக 11, 2025 11:25

மெட்ரிக் பள்ளிகள் பெரும்பாலும் கிறிஸ்துவ பள்ளிகள். விஜய் கட்சி ஆரம்பித்ததும் இதற்கும் தொடர்பு இருக்காது. தமிழகம் அமைதிக்கும் நேர்மைக்கும் கடமைக்கும் கண்ணியத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் பேர் போன நாடு. இது தவிர காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற கொள்கை வாதிகளின் கூடாரம்


Sudha
ஆக 11, 2025 11:20

தேர்தல் வருதுங்க கட்டிங் தொகை முடிவு செய்யலீங்க போன ரவுண்டை விட 20% கூட ஒதுக்கி வச்சிட்டு வேலைய பாருங்க


Dv Nanru
ஆக 11, 2025 10:51

தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல், பைல்கள் நிலுவையில் உள்ளதால், இயக்குநரகம் மீது தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.திமுகவை தட்டி எழுப்புங்க தேர்தல் நெருங்கி விட்டது இன்னுமா சுறுசுப்பு வரல ...


பாரத புதல்வன்
ஆக 11, 2025 10:09

கல்வி நிலையங்களை இன்ப நிதி அறிவாலயமாக அறிவித்து உத்திரவிடலாம்...


D Natarajan
ஆக 11, 2025 08:41

சீக்கிரமாக பெட்டிகளை அனுப்பி வையுங்கள். அனுமதி கிடைத்து விடும்.


VENKATASUBRAMANIAN
ஆக 11, 2025 07:50

அன்பில் மகேஷ் என்று ஒருவர் உள்ளார்.


Jay Al
ஆக 11, 2025 05:13

சிறு பான்மை மதத்தவர்கள் கையில் கல்வி அதான் கல்வி சீரழிந்து இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை