உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  முதல்வராக விஜயை ஏற்றால் மட்டுமே கூட்டணி: செங்கோட்டையன்

 முதல்வராக விஜயை ஏற்றால் மட்டுமே கூட்டணி: செங்கோட்டையன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் தான் கூட்டணியில் இணைய முடியும், ஜனவரி முதல் வாரத்தில் அனைத்தும் தெரியும்,'' என, கோவையில் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக வெற்றி கழக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவையில் அளித்த பேட்டி: த.வெ.க., தலைவர் மலேசியா சென்றிருந்தார். உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது மலேசிய நிகழ்ச்சி. மலேசியாவில் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களுக்கு மட்டும்தான் ரோடு ஷோ அனுமதி வழங்கப்படும். ஆனால் விஜய்க்கு ரோடு ஷோ அனுமதி வழங்கி உள்ளது. இளம் வயது 18 முதல் பெண்கள், பெரியவர்கள் வரை விஜய்க்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆர்ப்பரித்து வருகின்ற, அலை மோதுகிற கூட்டம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின் விஜய்க்கு வந்துள்ளது. தமிழகத்தில் உருவாகியுள்ள இந்த மாற்றம், மக்கள் சக்தியோடு இணைந்து முதல்வர் ஆவது நிறைவேறும். காங்., கட்சியுடன் தொடர்ந்து கருத்துகள் பரிமாறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கிறது. பொதுவாக ஒரு புதிய இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் தான் கூட்டணியில் இணைய முடியும். பொறுத்திருங்கள், ஜனவரி முதல் வாரத்தில் அத்தனையும் தெரியும். எல்லோரும் வாழ வேண்டும், எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

N Sasikumar Yadhav
டிச 30, 2025 19:42

நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான் ஜோசப்பு வுஜி . இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி கட்டாமலிருக்க நீதிமன்றத்தை நாடியவர் எப்படி நேர்மையான ஆட்சியை கொடுப்பார் .


T.sthivinayagam
டிச 30, 2025 18:40

புள்ளையார் சுழி போட்டவர்களுக்கும் சிபிஐ கேட்டவர்களுக்கும் கொழுக்கட்டை தானா


என்றும் இந்தியன்
டிச 30, 2025 17:20

குழந்தாய் 10ஆவது கூட படிக்காதவன் மருத்துவ / பொறியியல் படிப்பு படித்தானாம் என்று சொல்வது மாதிரி இருக்கின்றது இந்த உளறல்.


சோழநாடன்
டிச 30, 2025 15:57

செங்கோட்டை இப்படியே பேசிக்கிட்டு இருங்க. ஒரு ஆள் கூட்டணிக்கு வராது. தேர்தலில் தோல்வி உறுதி. விஜய் மீண்டும் நடிப்பதும் உறுதி. போய் புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கப்பா....


sasidharan
டிச 30, 2025 15:10

கடைசியில் சொம்பு தூக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டார் . பாவம் எப்படி கௌரமாக இருந்த மனுஷன் .


Anand
டிச 30, 2025 15:08

சோசப்பின் சீடர் டையன் செங்கோட் வாங்குன கூலிக்கு மேல ஓவரா கூவிக்கொண்டிருக்கிறான், ஏதோ என நினைத்து கல்லை எடுத்து வீசப்போகிறார்கள்.


HoneyBee
டிச 30, 2025 14:45

பாவம் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு.. அதுக்கு தான் சேரும் இடம் அறிந்து சேர் என்பது..


angbu ganesh
டிச 30, 2025 14:23

ஏர்வாடிக்கு ஆள் சேக்கறார் இவர் பனையூர் மனநில மருத்துவமனை சீப் அணிலாண்டி அவர்களே மலேசியாவில் நடத்தின கூத்து பார்த்த இவன ஒரு முதல்வர் என யோசிக்கவேய தோணல ஏற்கனவே ஒண்ணு 4.5 வருசமா முதல்வர்ன்ற போர்வைல ஷூட்டிங் போயிட் டு வருது அதுவே இன்னும் எங்களால ஜீரணக்க முடியல இதுல இன்னொன்னா


bharathi
டிச 30, 2025 11:02

No Malaysian can vote in TN election.


Madras Madra
டிச 30, 2025 10:54

இதெல்லாம் ரொம்ப ஓவர் நடந்தால் தமிழகத்தின் சாப கேடு


மேலும் செய்திகள்







புதிய வீடியோ