உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வுக்கு எதிரான பிரசார பீரங்கியாக களம் இறக்கப்படுகிறார் அண்ணாமலை

தி.மு.க.,வுக்கு எதிரான பிரசார பீரங்கியாக களம் இறக்கப்படுகிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஏழு மாதங்களே இருப்பதால், தி.மு.க., அரசின் மீதான குற்றச்சாட்டுகளை மக்களிடம் தெரிவிப்பதுடன், மத்திய அரசின் திட்டங்களை பொது வெளியில் சேர்க்கும் பணியில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையை, கட்சி மேலிடம் ஈடுபடுத்த உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dfbqjwa8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் மட்டுமே, 'இண்டி' கூட்டணி பலமாக இருந்தது. அதற்கு ஏற்ப, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மத்தியில் பா.ஜ.,வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனதற்கு, தி.மு.க.,வுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதற்கு, பா.ஜ., கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., பிரிந்து சென்றதே, முக்கிய காரணமாக பா.ஜ., தலைமையால் பார்க்கப்படுகிறது. கூட்டணி முறிவுக்கு, அப்போதைய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணா மலையே காரணம் என, அவர் மீது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டினார். இருந்தாலும், அது குறித்து கவலைப்படாத அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் ஒரு கூட்டணியை கட்டமைத்து, லோக்சபா தேர்தலை சந்தித்தார். 'அந்த கூட்டணி எப்படியும் ௧௦ தொகுதிகளிலாவது நிச்சயம் வெற்றி பெறும்' என, தேசிய தலைமைக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், பா.ஜ., கூட்டணி 18.4 சதவீத ஓட்டுகளை பெற்றாலும், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. இது, அண்ணாமலை மீது தேசிய தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அடுத்தாண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், லோக்சபா தேர்தலுக்காக தமிழக பா.ஜ., அமைத்த கூட்டணி போதாது என கட்சியின் தேசிய தலைமை முடிவெடுத்தது. இதற்காக, மீண்டும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, பா.ஜ., தரப்பில் அணுகினர். அப்போது, 'அண்ணாமலை தலைவராக இல்லாத பா.ஜ., வுடன் கூட்டணி அமைக்கலாம்' என பழனிசாமி தரப்பில் தெரிவித்தனர். அதனால், அண்ணாமலைக்கு பதிலாக, தமிழக பா.ஜ., தலைவராக பழைய அ.தி.மு.க.,காரரான நாகேந்திரனை நியமித்தனர். இது, கட்சியில் அண்ணாமலைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இருந்தபோதும், தன்னுடைய தி.மு.க., எதிர்ப்பை கொஞ்சமும் குறைக்காமல் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால், முன்பு போ ல கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கினார். குடும்ப சுற்றுப்பயணம், பொது நிகழ்ச்சிகள் என காலத்தைக் கழித்தார். இந்நிலையில், பா.ஜ., கூட்டணியில் இருந்த முன் னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனை பா.ஜ., தேசிய தலைமை அங்கீகரிக்க மறுத்தது. இதனால், இருவரும் கூட்டணியில் இருந்து விலகி னர். இது, பா.ஜ., கூட்டணிக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் அண்ணாமலை இருப்பதாக, பா.ஜ., தேசிய தலைமைக்கு சிலர் எடுத்துச் சொல்ல, அவர்கள் அண்ணாமலை மீது மீண்டும் கோபம் அடைந்தனர். இதற்கிடையே, தமிழக பா.ஜ.,வின் சிந்தனை அமர்வு கூட்டத்துக்காக தமிழகம் வந்த, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், அண்ணாமலையை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, காரசார விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், மொத்த பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்படுத்தும் வகையில், அண்ணாமலையை தி.மு.க.,வுக்கு எதிரான தீவிர பிரசாரத்தில் களம் இறக்கிவிட பா.ஜ., தேசிய தலைமை முடிவெடுத்துள்ளது. அதற்காக, பிரசார பயண திட்டம் வகுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டா ரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Murugesan
செப் 22, 2025 21:03

பாஜக காரனே ஓட்டு போட மாட்டான்


pakalavan
செப் 22, 2025 00:51

அன்னாமலை பேசினா திமுகா சுலபமா வெற்றிபெரும், அன்னாமலையாலதான் 39/39 ம் திமுகா சுலபமா ஜெயிச்சது, திமுக கூட்டணி வெற்றி பெற்றதுக்கு காரனம் அன்னாமலை கூறிய பொய் பித்தலாட்டங்கள் தான்


Murugesan
செப் 22, 2025 21:00

மண்டையில மூளையற்ற ஊபி ,திமுக காரன் எல்லாரும் கொள்ளைக்காரன்கள் உழைக்க வக்கற்ற அயோக்கியனுங்க


Sadananthan Ck
செப் 24, 2025 08:16

அண்ணாமலை ஒருவரால் தான் திமுக கூடாரம் காலியாக போது இது கொத்தடிவைகளுக்கு தெரியாது


Sun
செப் 21, 2025 23:36

தி.மு.கவுக்கு எதிரான மனநிலை தமிழக மக்களிடம் இதுவரை இல்லை என்று ஏற்கெனவே சொல்லித்தான் தி.மு.கவுக்கு எதிரான பிரச்சாரத்தை அண்ணாமலை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டாரே?


Oviya Vijay
செப் 21, 2025 22:54

ஞாபக மறதியில் பழக்க தோஷத்தில் பிரச்சார மேடையில் நம் தற்குறி அண்ணன் எடப்பாடி அவர்களை ஆதரித்து நான் இங்கு பேச வந்துள்ளேன் என ஆரம்பித்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்... ஏனென்றால் உள் மனதில் உள்ளது சில நேரங்களில் உதட்டின் வழியே வெளிப்பட வாய்ப்பிருக்கிறது... ஜாக்கிரதை மல...


ஜெய்ஹிந்த்புரம்
செப் 21, 2025 19:40

அண்ணாமலை வசூலித்த சில ஆயிரம் கோடிகளை செலவு செய்ய வைக்க ஜண்டா பிளான் போட்டு இருக்கிறார் போல


bharathi
செப் 21, 2025 17:00

Annamalai ji please start a new party to save TN


bharathi
செப் 21, 2025 17:00

BJP must face NOTA as they have removed Annamalai ji.


முருகன்
செப் 21, 2025 16:22

இவர் அதிமுக விற்கு எதிராக பேசிய பேச்சுகளை திமுக கையில் எடுக்கும் அது மக்கள் மன்றத்தில் வெற்றியும் பெறும்


Nagendran,Erode
செப் 21, 2025 20:42

செந்தில் பாலாஜியை உன்னோட தத்தி முதல்வர் ஸ்டாலின் பேசாத பேச்சா அது இப்போது மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்றதா?


pakalavan
செப் 21, 2025 16:05

அன்னாமலைய வச்சு அதிமுக மற்றும் எடப்பாடிய முடிப்பதுதான் பஜக முயற்சி செய்யும், இனி அதிமுக சிதறிவிடும்்


Manaimaran
செப் 21, 2025 13:29

பிராடு


செல்வேந்திரன்,அரியலூர்
செப் 21, 2025 14:57

யோவ் என்னய்யா திமுக காரனுங்களை பொசுக்குன்னு பிராடுன்னு சொல்லிப்புட்ட பாத்துய்யா ஒனக்கு டோக்கன் போட்றப் போறானுக...


சமீபத்திய செய்தி