உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வெளியேறும் வங்கதேசத்தினர்: பஸ், ரயில்களில் கண்காணிப்பு

வெளியேறும் வங்கதேசத்தினர்: பஸ், ரயில்களில் கண்காணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து, வங்கதேசத்தினர் வெளியேறுவதால், அவர்களை கைது செய்ய, பஸ், ரயில் நிலையங்களில், போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள வங்கதேசத்தினர், மேற்கு வங்க மாநிலத்தவர் போல், போலி ஆவணங்கள் தயார் செய்து, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், பெரும்பாலானோர் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதும், பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டி வருவதும் தெரிய வந்துள்ளது. இதனால், மாநிலம் முழுதும் வங்கதேசத்தினருக்கு எதிராக, உள்ளூர் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 63 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, வங்கதேசத்தினர் வெளியேறி வருகின்றனர். அவர்களை கைது செய்ய, பஸ், ரயில் நிலையங்களில், போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறுகையில்,' பிப்., மாத இறுதிக்குள் வங்கதேசத்தினர் ஒருவர் கூட தமிழகத்தில் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Thiyagarajan S
பிப் 02, 2025 18:58

தமிழகத்தில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் மட்டுமல்லாமல் பர்மாவிலிருந்து ஊடுருவிய ரோகிங்கியா பயங்கரவாதிகளும் பரவலாக இருக்கின்றனர் அமைதி மார்க்கத்தினர் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளில் காவல்துறையினர் கொஞ்சம் தீவிரமாக விசாரித்தால் ஏராளமானோர் பிடிபடுவர்... அவனுங்க தான் இவனுங்களுக்கு இருக்கிற இடமும் சோறும் துணியும் கொடுக்கிறார்கள்....


PANRUTI RAMASAMY M
ஜன 29, 2025 08:16

நான் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த வட இந்தியர்கள் என்று நினைத்து விசாரித்த போது அவர்கள் நேபாளம் மற்றும் வங்கதேசம் என்று கூறினார்கள் அவர்களிடம் ஆதார் கார்ட், ரேசன் கார்ட் வைத்து உள்ளனர் சில அதிகாரிகள் பணம் வாங்கி கொண்டு அவர்களுக்கு இது போன்ற ஆவணங்களை கொடுத்துள்ளனர்


Roshan Hilmee
ஜன 28, 2025 13:51

அவர்களை கைது செய்து பங்களாதேசுக்கு நாடு கடத்த வேண்டும்


R.THIRUMALAIKUMAR
ஜன 28, 2025 05:22

இங்கேயே நிரந்தரமாக ஒழிக்க எடுக்கிற செயல்நிரந்தரமாக இருக்க வேண்டு்ம் தென்மாவட்டத்திலும் எரலமானவர்கள் இருக்கிறார்கள் அவங்களையும் நாடு கடத்த வேண்டும்


Ram Moorthy
ஜன 27, 2025 22:10

வட சென்னை பகுதியில் குடும்பம் கும்பலாக குடியிருந்த வருகிறார்கள் அவன்களை எப்போது வெளியேற்றுவார்கள் காவல்துறை வீடுவீடாக சென்று சோதனை செய்ய வேண்டும்


C G MAGESH
ஜன 27, 2025 19:37

விடியல் துறையை நம்பி பலனில்லை. சென்ட்ரல் கவர்ன்மெண்ட் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்


RG GHM
ஜன 27, 2025 16:28

திருப்பூர் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் உள்ளனர்.


ஆரூர் ரங்
ஜன 27, 2025 15:15

சில நாட்களாக கள்ளக்குடியேறிகளை அமெரிக்கா தாட்சண்யமின்றி துரத்தி வெளியேற்றுகிறது. இனிமே எந்த நாடும் இந்திய பாஜக அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை குறை சொல்ல முடியாது.


Ganesh Subbarao
ஜன 28, 2025 16:19

CAA க்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 2014 வரை நாட்டில் தஞ்சம் அடைந்த அண்டை நாடுகளின் minority மக்களுக்கு குடியுரிமை கொடுப்பதே CAA. அதில் மொத்தம் 30000 பேர் கூட கிடையாது.


Rajasekar Jayaraman
ஜன 27, 2025 13:47

தமிழக போலீஸ் தானே நம்பிட்டோம்.


N.Purushothaman
ஜன 27, 2025 13:45

இவனுங்களுக்கு போலி ஆவணங்கள் தயார் செய்ய மேற்கு வங்கத்தில் பல ஏஜென்ட்டுகள் உள்ளனர் ..அவர்களுக்கு அரசியல்வியாதிகளுடன் தொடர்பும் உள்ளது ...அவனுங்களை சிறையில் அடைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை