உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜயை அரசியலில் இறக்கியதே பா.ஜ.,தான்: சொல்கிறார் சபாநாயகர் அப்பாவு

விஜயை அரசியலில் இறக்கியதே பா.ஜ.,தான்: சொல்கிறார் சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி:''சிறுபான்மையினர் ஓட்டுக்களை பிரிக்க நடிகர் விஜயை அரசியலில் இறக்கியதே பா.ஜ.,தான்'' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.திருநெல்வேலியில் 'உங்களுடன் ஸ்டாலின் 'திட்டத்தில் மனுக்கள் பெறுவதை சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார்.நிகழ்வில் கலெக்டர் சுகுமார் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது:மஹாராஷ்டிர கவர்னர் ராதாகிருஷ்ணன்போல் ஒரு கவர்னர் இருந்தால் எந்த பிரச்னையும் வராது. தமிழக கவர்னர் தற்போது தமிழக சுகாதாரத்துறையை பாராட்டி உண்மையை சொல்லியுள்ளார்.இதனை கண்டுபிடிக்க அவருக்கு இவ்வளவு நாள் ஆகிவிட்டது. தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுவதால் தான் பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ளது.சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே தெரியாமல் ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசினார். யார் வசனம் எழுதி கொடுத்து இவர் வாசிக்கிறார் என்பது புரியவில்லை.நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை சரியா, தவறா என்பது இதுவரை தெரியவில்லை.அச்சோதனை செய்த அதிகாரி அருண்ராஜ், அதை டில்லி சென்று சரிசெய்த ஆனந்திற்கு அவரது கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பின்னால் விஜய் இருப்பதாக பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்று வருகிறது. விஜயின் தாயார் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மை ஓட்டுகளை பிரிக்க விஜயை அரசியல் களத்தில் பா.ஜ., இறக்கி உள்ளதாக தோன்றுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2025 22:13

விஜய்யை இறக்கியது திமுக என்று மக்களுக்குப் புரிந்து விட்டதால் பதறுகிறார் ........


D Natarajan
ஜூலை 16, 2025 20:57

தேவாலயத்தின் ஓட்டு இப்போது யாருக்கு


Ramesh Sargam
ஜூலை 16, 2025 20:19

அப்பாவு என்ன அரசியல் சாணக்கியரா? சில்லறைக்கு திமுகவினருக்கு ஜால்றா போடுபவர் அவர்.


வண்டு முருகன்
ஜூலை 16, 2025 18:56

இப்போதெல்லாம் வெயில் 40 டிகிரி இல் இருக்கு. ராபிஸ் ஊசி மருந்து அரசு மருத்துவமனையில் தட்டுப்பாடு நிலையில் உள்ளது. ஆகவே மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவும். கடித்தால் நாம் தான் கஷ்டப்பட வேண்டும்.


Saai Sundharamurthy AVK
ஜூலை 16, 2025 18:22

எப்படியும் திமுக தோற்று விடும் போலிருக்கிறதே !!!அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தேன். ஆனா இங்கேயும் செட்டில் ஆக விட மாட்டாங்க போலிருக்கிறதே !!!


ஆசாமி
ஜூலை 16, 2025 17:23

புளுகு. அதிமுக பாஜக ஓட்டை பிரிக்க திமுக களம் இறக்கின ஆளு தான் டளபதி்்தேரதல் முடிந்தவுடன் கமல் மாதிரி திராவிட பாசம் பொங்கும்


என்றும் இந்தியன்
ஜூலை 16, 2025 16:52

அப் பாவி என உன்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது உனது செயல்களினால்


உண்மை கசக்கும்
ஜூலை 16, 2025 16:41

கர்த்தரே.. அடுத்த தேர்தலில் உமக்கு ஒரு தொகுதியும் கிடையாது.


panneer selvam
ஜூலை 16, 2025 16:32

Appavu ji , your fear is found to be true . So far you have acted as spokesperson of all Christians and custodian of churches. Now it seems church followers are getting diverted to Joseph Vijay .


தொளபதி
ஜூலை 16, 2025 16:04

இயேசுவின் செல்ல குமாரர்களே நமக்குள் சண்டை வேண்டாம். நம்மவர்களின் ஓட்டு பிரிந்தால் எதிரிகளுக்கு சாதகமாகிவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை