உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மின் இணைப்பு வழங்க லஞ்சம்; இன்ஜினியருக்கு 4 ஆண்டு சிறை

மின் இணைப்பு வழங்க லஞ்சம்; இன்ஜினியருக்கு 4 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: மின் இணைப்பு வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைதான மின்வாரிய இளநிலை இன்ஜினியருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.துாத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியை சேர்ந்த திருப்பதி,60, வல்லநாடு மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2010ல் இளநிலை இன்ஜினியராக வேலைபார்த்து வந்தார். வல்லநாட்டில் உலர் சலவையகம் அமைக்க மின் இணைப்பு கேட்டு திருநெல்வேலி மகாராஜ நகரை சேர்ந்த சிவபாரதி என்பவர் விண்ணப்பித்தார். விரைந்து பரிசீலித்து மின் இணைப்பு வழங்க 35,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என திருப்பதி கேட்டுள்ளார்.இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். முதல்கட்டமாக சிவபாரதியிடம் இருந்து 2010 மே 7ல் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது திருப்பதியை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.போலீசாரை கண்டதும், பணத்தை வாயில்போட்டு விழுங்கிய திருப்பதி, சிகிச்சைக்கு பின், சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்த திருப்பதி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன் திருப்பதி ஓய்வு பெற்ற நிலையில், வழக்கு நிலுவையில் இருந்ததால் அவருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் இருந்தது.வழக்கின் விசாரணை துாத்துக்குடி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி வசீத்குமார் குற்றம்சாட்டப்பட்ட திருப்பதிக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Venkatesan Srinivasan
மே 14, 2025 00:26

இவ்வாறு லஞ்ச ஊழல் குற்றவாளிகளுக்கு " ஹார்ட் லேபர்" சிறை தண்டனை வழங்க வேண்டும். இலவச உணவு கொடுக்க கூடாது.


D Natarajan
மே 13, 2025 18:35

15 ஆண்டுகள் . கடவுளே, இது என்ன நீதி துறை. இவருக்கு 4 ஆண்டுகள் சிறை, 10000 லஞ்சம் வாங்கியதற்கு. அணிலுக்கு எத்தனை ஆண்டுகள்.


சூரியா
மே 13, 2025 15:07

எங்கள் பெசன்ட் நகர் பக்கம் வாங்களேன் போலீஸ்! இங்குள்ள AD ஒரு சர்வீசிற்கு ₹ 1 லட்சத்திற்குக் கீழே தொடவே மாட்டார்.


Ragupathy
மே 13, 2025 10:16

பாராட்டப் படவேண்டிய தீர்ப்பு...அரசு ஊழியர்கள் இந்த லட்சணத்தில் போராட்டம் வேறு... தினமும் கைதாகிறார்கள்.. சிறைத்தண்டனயுடன் எந்த வித அரசு பலனையும் வழங்கக்கூடாது...அப்போதாவது லஞ்சம் வாங்க யோசிப்பார்கள்... அமைச்சர்கள் மீது சிறைத்தண்டனை உடன் சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும்... ஆறு மாதங்களில் இவற்றை முடிக்கவேண்டும்... அப்பீலுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது..


SUBBU,MADURAI
மே 13, 2025 08:04

இந்த நாட்டில் லஞ்சம் வாங்காத அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளே இல்லையா? இதெல்லாம் அநியாயம் அதுவும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அவர் செய்தது தப்புதான் அதற்காக அவருக்கு சில மாதங்களோ அல்லது அபராதமோ பதவியை விட்டு நீக்கியோ தண்டனை விதித்து இருக்கலாம் அதை விட்டு நான்காண்டு சிறை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது தமிழகத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர்கள் ஜாமீனில் வெளியே சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் அந்த குற்றவாளிகளுக்கு எந்த அடிப்படையில் இந்த நீதியரசர்கள் ஜாமீன் வழங்கினார்கள்? சமீபத்தில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக் கணக்கான பணம் கைப்பற்றப் பட்டதே அந்த நீதிபதிக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்? அவரை வேறு மாநிலத்துக்கு டிரான்ஸ்பர் செய்ததுதான் அவருக்கான தண்டனையா? இந்தியாவில் இது போன்ற கொலீஜிய நீதிபதிகளுக்கு கடிவாளம் போடும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை