உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ.,வில் இணைய முடிவா? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

பா.ஜ.,வில் இணைய முடிவா? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “திருமாவளவன் விமர்சனத்தை அறிவுரையாக பார்க்கிறேன். அவரிடமிருந்து கள அரசியலை நிறைய கற்றுள்ளேன். கொள்கை சார்ந்த அரசியலில் அவரை சார்ந்தே என் பயணம் இருக்கும்,” என, ஆதவ் அர்ஜுனா கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

திருமாவளவன் வார்த்தைக்கு நான் எப்போதும் கட்டுப்படுவேன், அவரது வாழ்த்து மற்றும் அறிவுரைகளை ஏற்று பயணிப்பேன். மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் அரசு நிவாரணம் குறித்து, தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக வருத்தப்பட்டு பேசியுள்ளார்.என்ன தான் கூட்டணி கட்சித் தலைவராக இருந்தாலும், இன்னும் சில நாளில், அவரையும் சங்கி என முத்திரை குத்தி விடுவர். வேல்முருகன் சொன்ன கருத்து, களத்தை பிரதிபலிக்கும் விஷயம். அதனால், அவரின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். எதிர்காலத்தில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தை வைத்து, தமிழகத்தில் புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்பது என் குறிக்கோளாக இருந்தது. அதைத்தான் என் கருத்தாக பதிவு செய்தேன். அதை உரக்கச் சொன்னதற்காக, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். இதை தண்டனையாகத்தான் கருத வேண்டும்.இதன் தொடர்ச்சியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என் மீது சில விமர்சனங்களை வைத்துள்ளார். அதை 'அட்வைஸ்' ஆக பார்க்கிறேன். அவரிடமிருந்து கள அரசியலை நிறைய கற்றுள்ளேன். கொள்கை சார்ந்த அரசியலில், அவரை சார்ந்தே என் பயணம் இருக்கும்.நான் பா.ஜ.,வில் இணையப் போவதாக தகவல் பரப்பப்படுகிறது. நான் யாருடன் இணையப் போகிறேன் என்பதை விட, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தே தீவிரமாக யோசித்து வருகிறேன். பா.ஜ.,வில் இணைவது குறித்த கேள்விக்கும், என் எதிர்கால அரசியல் பயணம் குறித்தும் நல்ல முடிவெடுத்து, அதை பத்திரிகையாளர்களை சந்தித்து சொல்வேன்.என்னை பா.ஜ.,வின் 'பி டீம்' என விமர்சித்தால், என்னைப் போலவே கருத்துகளை பதிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகனும் பி டீம் தானா?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Raj S
டிச 18, 2024 00:51

பேசாம கொஞ்ச நாள் விட்டா, இவரே கண்கள் பணித்தது கள்ள காதல் இனித்ததுனு அந்த திருட்டு திராவிட குடும்பத்துல சேர்ந்துவிடுவார்


Seeyeskay
டிச 17, 2024 22:06

எதிர் தரப்பில் இருந்து மற்றுமொரு கருப்பு ஆடு. எச்சரிக்கை, நம்ப வேண்டாம் அண்ணாமலை.


theruvasagan
டிச 17, 2024 21:54

கொள்கை சார்ந்த அரசியல் நடத்துபவரா. என்ன கொள்கை. கேவலம் 2 சீட்டுக்கு கட்சியை அடமானம் வைப்பதெல்லாம் கொள்கை கீழே வருமா என்ன.


நிக்கோல்தாம்சன்
டிச 17, 2024 21:24

உங்களின் பேச்சு உங்களின் முதிர்ச்சியை காட்டுகிறது , வாழ்த்துக்கள் , விசிக இழந்தது அதிகம் , அங்கிருக்கும் படித்த இளைஞர்கள்/இளைஞிகள் இதனை உணருவார்களா


sridhar
டிச 17, 2024 19:21

ஐயையோ , வேணாம் , வராதே .


Sudhakar
டிச 17, 2024 15:46

கொள்ளையடித்துவிட்டு கொள்கை சார்ந்த அரசியல் என்று தமிழ்நாட்டில் மட்டும் தான் பேச முடியும்.


வைகுண்டேஸ்வரன் V
டிச 17, 2024 11:25

ஏற்கனவே இவரு பாஜக தான். இனிமே என்னத்த இணைவது? ஒற்றையாக உலவும் சில குட்டி கட்சிகள் தான் விசிக, தவாக, தவெக. இதுகளையெல்லாம் ஒண்ணா முடிச்சு வுடத் தான் பொட்டிகளுடன் இருங்கியிருக்கிறார் என்பது வெட்டவெளிச்சம். வாங்கின காசுக்கு, ஆட்றா ராமா, ஆட்றா ராமா என்றதும் ஆடுகிற திருமா, வேல்முருகன் ஆட்டம் செம என்டர்டெயின்மென்ட். வரும் தேர்தலோடு 6 கட்சிகள் காலியாகும். அவை : பாமக, தேமுதிக, நாதக, விசிக, தவாக மற்றும் தவெக, unless these party heads listen to bjp and obey them.


ghee
டிச 17, 2024 12:14

இந்த கொத்தடிமைக் எவளோ அறிவு


Nallavanaga Viruppam
டிச 17, 2024 15:02

நல்ல ஒரு மனநலமறுத்தவரை அணுகவும்.


veera
டிச 17, 2024 16:45

திமுக தனித்து நிற்கும் என்று வைகுண்டம் சொல்வாரா.....


Raj S
டிச 19, 2024 03:50

இந்த ஒற்றையாக உலவும் சில குட்டி கட்சிகள் தயவு இல்லாம உங்க கோபால புற திருட்டு திராவிடர்கள் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது... நல்ல அப்பா அம்மாவுக்கு பிறந்திருந்தால் அவுனுங்கள தனியா நிக்க சொல்லுங்க பாப்போம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை