உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உயிருடன் இல்லாதவர் தொடர்பான வழக்கு: உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

உயிருடன் இல்லாதவர் தொடர்பான வழக்கு: உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: உயிருடனே இல்லாத ஒருவர் தொடர்புடைய வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிப்பது எனக்கூறி, 10 ஆண்டு பழைய வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.தமிழக பத்திர பதிவுத்துறையில் பணியாற்றியவர் அனுசியா அண்ணாமலை; 1997ல் பணி ஓய்வு பெற்றார். 2015ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு மூன்று ஆண்டு கால பதவி உயர்வை, தமிழக அரசு வழங்கவில்லை என்றும், அதற்கு உண்டான பண பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனிநபர் அமர்வு, மனுவை தள்ளுபடி செய்த நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. மேலும், மனுதாரருக்கு அவர் இழந்த மூன்று ஆண்டுகளுக்கான பணபலன்களை வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.இதற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விவகாரத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும்' என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'சம்பந்தப்பட்ட மனுதாரர், தனக்கு பதவி உயர்வு கிடைத்தால், வேறு இடத்திற்கு பணி மாற்றப்படலாம் என்ற காரணத்துக்காக, பதவி உயர்வே வேண்டாம் என்றார். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.'இதை, ஒரு தனி நபர் சார்ந்த விவகாரம் என, எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த ஒரு தீர்ப்பை வைத்து மேலும் பலர் இது போன்று மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது' என்றனர்.அப்போது ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மனுதாரர் தற்போது உயிருடனே இல்லை என்பதை அறிந்தனர். இதையடுத்து, 'ஒருவர் உயிருடன் இல்லாத சூழலில், அவர் தொடர்பான வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்' எனக்கூறி, வழக்கை முடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Chandrasekaran
மார் 19, 2025 10:08

பணப்பயன் அவரது வாரிசுக்கு உதவக்கூடும். நீதி மன்றம் தகுதி அடிப்படையிலான தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். தவிரவும் பதவி உயர்வு வழக்குகளில் தீர்ப்பு தாமதத்தால் பிந்தய ஆண்டுகளில் திருத்திய பட்டியல் வெளியிடும்போது பலர் ஓய்வுக்குப்பின் பட்டியலில் இடம்பெரும்போது இதே நிலை ஏற்படுகிறது. அதுபோன்ற தீர்ப்புகளில் ஒய்வு பெற்றவர்கள் திருத்திய ஓய்வூதியத்தை மனு பெறாமல் திருத்திய ஓய்வூதியம்வழங்கதீர்ப்பில் குறிப்பிடவேண்டும்.அவர்கள் திருத்திய பட்டியலின் அடிப்படையீல் மேல்முறையீடு திருத்திய ஓய்வூதிய முன்மொழிவு காலச்செலவு.


theruvasagan
மார் 18, 2025 16:07

வழக்கு தொடுத்து18 ஆண்டுகள் கழிந்த பிறகு வந்த சொத்து சேர்ப்பு வழக்கு தீர்ப்பில் முன்னரே இறந்து போன ஜெ.யை குற்றவாளி என அறிவித்து அவர் சொத்துக்களை முடக்கவில்லையா. அதேபோல மனுதாரர் இறந்து போயிருந்தாலும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய நிவாரணம் அவருடைய வாரிசுகளுக்கோ குடும்பத்துக்கோ போய் சேருவதுதானே நியாயம். அதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாதது மறுக்கப்பட்ட நீதிதானே


அசோகன்
மார் 18, 2025 12:46

கேஸ் போட்டவர்களே இறந்துபோய்வினர் அவ்வளவு காலம் கேசை வெட்கமே இல்லாமல் இழுத்தடிக்கும் நீதிபதிகள்...... இவர்களவுக்கும் டார்கெட் வைக்கவேண்டும் ஆண்டுக்குள் கேஸ்களை முடிக்க உத்தரவிடவேண்டும்


Ramesh Sargam
மார் 18, 2025 12:35

ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மனுதாரர் தற்போது உயிருடனே இல்லை என்பதை அறிந்தனர். இதையடுத்து, ஒருவர் உயிருடன் இல்லாத சூழலில், அவர் தொடர்பான வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக்கூறி, வழக்கை முடித்தனர். இந்த அவலத்துக்கு காரணமே நீதிமன்றங்கள்தான். வழக்குகள் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, மனுதாரருக்கு நீதி அவர் வாழ் நாளிலேயே கொடுத்திருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டது நீதிமன்றம். இப்பொழுது நீதிமன்றமே, ஒருவர் உயிருடன் இல்லாத சூழலில், அவர் தொடர்பான வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி கேட்கின்றனர். வெட்கம். வேதனை.


Karthik
மார் 18, 2025 19:01

பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள் இருந்தால் என்ன இல்லைன்னா என்ன..?? வாழ்க வக்கீல்கள்.. வாழ்க கொலீஜியம்..


Padmasridharan
மார் 18, 2025 10:12

கற்பழித்து கொலை செய்யப்படுபவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள். அதனால் எந்த உத்தரவும் கொடுக்கமாட்டார்களா என்ன சாமியோவ்


Ramesh Sargam
மார் 18, 2025 12:36

சரியாக கேட்டீர்கள்.


Ramkumar Ramanathan
மார் 18, 2025 07:23

good decision. SC judges must dismiss all these type of cases, which are instigated by unknown persons.


முக்கிய வீடியோ