மாணவியரிடம் சில்மிஷம்: பாதிரியாருக்கு போக்சோ
அவிநாசி: திருப்பூர் மாவட்டம், மரியபுரம் சர்ச் வளாகத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ - மாணவியர் பயிலும் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. சர்ச்சுக்கு பாதிரியராகவும், பள்ளிக்கு தாளாளராகவும், கடலுார் மாவட்டம், நெய்வேலி, குணங்குறிச்சியை சேர்ந்த ராபர்ட், 56, பணியாற்றினார். நேற்று முன்தினம், அவசர போலீஸ் எண், 100க்கு அழைத்த அப்பகுதி மக்கள், மாணவியரிடம், ராபர்ட் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக புகார் தெரிவித்தனர். போலீசார், குழந்தைகள் நல அலுவலருடன் நேரில் சென்று விசாரித்தனர். அதில், ராபர்ட், மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதியானது. ராபர்ட்டை, அவிநாசி போலீசார், போக்சோவில் கைது செய்தனர்.