உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 2026ல் கூட்டணி ஆட்சி: அ.தி.மு.க., - பா.ஜ., பேச்சு

2026ல் கூட்டணி ஆட்சி: அ.தி.மு.க., - பா.ஜ., பேச்சு

பா.ம.க., நாம் தமிழர், தே.மு.தி.க., போன்ற கட்சிகள், தே.ஜ., கூட்டணியில் சேர, தேர்தலில் வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி என அறிவிக்கும்படி, அ.தி.மு.க., தலைமையிடம், பா.ஜ., தலைமை பேசி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்துப் பேசிய பின், 'தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி மலரும்' என, அமித் ஷா அறிவித்தார். அதன்பின் சென்னை வந்த அமித் ஷா, பழனி சாமியுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, ''2026 சட்டசபை தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்,'' என்றார்.அதைத் தொடர்ந்து, கூட்டணி ஆட்சிக்கு அ.தி.மு.க., ஒப்புக்கொண்டதாக, தகவல் பரவியது. இதை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மறுத்தார். 'அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றுதான் அமித் ஷா கூறினார். அதை தவறாக சித்தரிக்கின்றனர். கூட்டணி ஆட்சி' என்று அவர் கூறவில்லை என, விளக்கம் அளித்தார்.ஏற்கனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த பா.ம.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. நாம் தமிழர் கட்சி மட்டும், தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இருந்தாலும், பா.ஜ.,வுடன் மறைமுகமாக பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், கூட்டணி ஆட்சிக்கு, அ.தி.மு.க., சம்மதம் தெரிவித்தால், பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், தே.ஜ., கூட்டணிக்கு வந்துவிடும் என, பா.ஜ., கருதுகிறது. இதை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் தெரிவித்து, அவரை சம்மதிக்க வைக்க, பா.ஜ., தலைமை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சென்னைக்கு, இன்று இரவு வரும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அ.தி.மு.க., தலைமையிடம், கூட்டணி ஆட்சி குறித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
மே 02, 2025 19:49

ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாக ஆகப் போகிறது!


thehindu
மே 02, 2025 17:06

இந்து மதவாதிகளின் படையெடுப்புக்கு பெயர் பேச்சுவார்த்தையா? மிரட்டல்கள் தொடர்கிறது


அப்பாவி
மே 02, 2025 16:52

ஒண்ணு இ.பி.எஸ் தமிழ்நாட்டை இந்திக்காரனுங்களுக்கு வித்துருவாரு. இல்லே சீக்கிரமே கூட்டணி பூட்டணியாயிடும்.


Haja Kuthubdeen
மே 02, 2025 12:10

குடும்ப கட்சியான தேமுதிக போன்றவை ஒரு சதவீத வாக்குககள் கூட இல்லை...அமித்சா மோடி போன்றோர் நேரில் வந்து கூட்டணி பேசனும்..எடப்பாடி தேடி வரனும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கு..


Oviya Vijay
மே 02, 2025 06:54

இப்படி எல்லாம் பேசுறதுக்கு மொதோ ஜெயிக்கணும்... அதுக்கே வழியில்லை... தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு... கண்டிப்பா தோக்கப் போறீங்க... உங்கள விட விஜயோட தவெக அதிக ஓட்டு வாங்கப் போகுது. பார்த்துகிட்டே இருங்க... தேர்தல் ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் உங்க ரெண்டு கட்சிககாரங்களும் உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட... அப்படின்னு சொல்லிக்கிட்டு தலையில தூண்ட போட்டுக்கிட்டு உக்காரப் போறீங்க... இது தான் நடக்கப் போகுது...


முருகன்
மே 02, 2025 09:44

அருமையான பதிவு


vivek
மே 02, 2025 10:10

இந்த ஆர்டிஸ்ட் தொல்லை தாங்கமுடில.....யாப்பா 200 ரூபாய்க்கு இது ரொம்ப அதிகம் ஒவியர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை