உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முடிந்த வழக்குகளுக்கு உயிர் கொடுத்த வாக்குமூலம்: 10 கொலைகளை செய்தோம் என்கின்றனர் கொடூரர்கள்

முடிந்த வழக்குகளுக்கு உயிர் கொடுத்த வாக்குமூலம்: 10 கொலைகளை செய்தோம் என்கின்றனர் கொடூரர்கள்

ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் கைதான மூவர், ஒன்பது ஆண்டுகளாக, 19 கொலைகளில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதால், போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.இவர்கள் செய்ததாக சொல்லும் பல கொலைகளில், ஏற்கனவே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பதால், அவர்கள் போலிகளா என்ற கேள்வி எழுகிறது. இந்த வழக்குகளை முறையாக விசாரிக்காமல், இழுத்து மூடிய அதிகாரிகளுக்கு, அடுத்தடுத்து பெரிய சிக்கல் காத்திருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rrtl8w2v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ராக்கியப்பன், 72 - பாக்கியம், 63 தம்பதியை, ஏப்., 28ம் தேதி அடித்துக் கொன்று, 10.5 சவரன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பினர். இதுதொடர்பாக, அறச்சலுாரை சேர்ந்த ஆச்சியப்பன், 48, மாதேஸ்வரன், 52, ரமேஷ், 54 மற்றும் திருட்டு நகையை வாங்கிய ஞானசேகரன், 48 என, நான்கு பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.2024 நவ., 28ல் திருப்பூர் மாவட்டம், பல்லடம், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் இருந்த தெய்வசிகாமணி, 78, அவரது மனைவி அலமேலு, 75 தம்பதியரின் மகன் செந்தில்குமார் ஆகியோரையும், இந்த கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.

9 ஆண்டு; 19 கொலை

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2015ல் அறச்சலுாரில் நடந்த திருட்டு வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின் வெளியே வந்து, அவ்வப்போது கொலைகளை அரங்கேற்றி, நகை, பணத்தை திருடியுள்ளனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, கையில் கிளவுஸ் அணிவது, காலணி அணியாமல், அமாவாசையையொட்டி உள்ள நாட்களை தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டையொட்டி நீரோடை உள்ளதை பார்த்து கைவரிசை காட்டியுள்ளனர்.வெவ்வேறு, 12 சம்பவங்களில், 19 கொலைகள் வரை ஒன்பது ஆண்டுகளாக அரங்கேற்றி போலீசாரிடம் சிக்காமல் இருந்த மூன்று பேரும், தற்போது சிவகிரி கொலையில், 'சிசிடிவி' மற்றும் கால் தடயம் வாயிலாக சிக்கினர்.2022ல் சென்னிமலையில் முதிய தம்பதி, 2023ல் ஒட்டன்குட்டையில் முதிய தம்பதி கொலையையும், தாங்கள் தான் செய்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என, 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையடித்த நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.அப்படியென்றால், யார் நிஜமான குற்றவாளிகள் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் தான் உண்மையான குற்றவாளிகள் என்றால், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 11 பேரும் குற்றமற்றவர்கள் ஆகின்றனர். உண்மையான குற்றவாளிகளை, 2022க்கு முன்பாக கைது செய்திருந்தால், அடுத்தடுத்து ஆதாயத்துக்காக நடந்த கொலைகளை தடுத்திருக்கலாம்.இந்த வழக்குகளை பொறுத்த வரை, ஏற்கனவே நடந்த கொலைகளுக்காக, 11 பேரை கைது செய்த டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன், தவறான நபர்களை கைது செய்திருந்தால், அவருக்கான தண்டனை என்ன என்ற கேள்வி எழுகிறது. இதில் முக்கியமான ஒரு விஷயத்தை அனைவரும் கவனிக்க வேண்டும்.ஒரு கொலையில், இருவேறு தரப்பினர் குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, வழக்குகள் நடக்கும் போது, இந்த முரண்பாட்டை தங்களுக்கு சாதகமான வாதமாக கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் வைத்தால், சந்தேகம் மற்றும் குழப்பத்தையே, குற்றம் சாட்டப்பட்டோருக்கு சாதகமாக கோர்ட்டு எடுத்துக் கொள்ளும்.குற்றம்சாட்டப்பட்டோருக்கு சந்தேகத்தின் பலனை அளித்து, அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கும். ஆக, குற்றம்சாட்டப்பட்டோர் தண்டனையில் இருந்து எளிதில் தப்புவதோடு, நியாயம் வெளிவராமல் போய்விடும். சில ஆண்டுகளில் ஆதாயத்துக்காக நடந்த முதியோர் கொலைகளில் பல்லடம் வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.அந்த கொலையையும் தாங்கள் தான் செய்தோம் என, ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோர் ஒப்புக் கொண்டிருப்பதால், அவர்களை கோர்ட்டில் ஒப்படைக்கும் முன், சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் விசாரித்திருக்க வேண்டும். லோக்கல் போலீஸ், சி.பி.சி.ஐ.டி., விசாரணை என, இருவேறு கோணங்களில் கொலைகளில் விசாரணை நடக்கும்போது, அதில் ஏற்படும் முரண்களை சுட்டிக்காட்டியும், மொத்த வழக்குகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டோர் தப்பிக்கவும் வாய்ப்புள்ளது.இதே மாதிரியான குழப்பம் நிறைந்த வழக்கு விசாரணைகள், தமிழக போலீசில் ஏற்கனவே நடந்திருக்கிறது. ஹிந்து அமைப்பை சேர்ந்த வேலுார் மருத்துவர் அரவிந்த் ரெட்டி, கடந்த 2012ல் கொல்லப்பட்டார். வழக்கை விசாரித்த வேலுார் போலீசார், உதயகுமார், தங்கராஜ், சின்னா, ராஜ்குமார், பெருமாள், தரணி குமார் என்ற ஆறு பேரை கைது செய்தனர். அவர்களும், தாங்கள் தான் கொலை செய்தோம் என, போலீசில் வாக்குமூலம் அளித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது.

இயற்கை மரணம்

பின்னர், மத பயங்கரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது, அரவிந்த் ரெட்டியை கொலை செய்தது உள்ளிட்ட பல கொலைகளை செய்திருக்கிறோம் என, வாக்குமூலம் அளித்தனர். இதை அறிந்ததும், அப்போதைய டி.ஜி.பி.,யான ராமானுஜம் அதிர்ச்சி அடைந்தார்.உடனே, முன்னதாக போலியான குற்றவாளிகளை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததோடு, கோர்ட்டுக்கும் இந்த விபரங்களை தெரியப்படுத்தி, போலியானவர்களுக்கு ஜாமின் வழங்க ஏற்பாடு செய்தார். தற்போது, பிலால் மாலிக் மற்றும் போலீஸ் பக்ருதீன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அரவிந்த் ரெட்டி வழக்கு நடந்து வருகிறது. அதனால், சென்னிமலை -- சிவகிரி போன்ற இடங்களில் ஆதாயத்துக்காக நடத்தப்பட்ட முதியோர் கொலை வழக்குகளில், சரியான முறையில் போலீஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்.போலியான குற்றவாளிகளை வழக்குகளில் இருந்து விடுவிப்பதோடு, உண்மையான குற்றவாளிகள், தண்டனையில் இருந்து தப்பிவிடாத அளவுக்கு வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். சிவகிரி, சென்னிமலையில் நடந்த கொலை வழக்குகள் தவிர, ஈரோடு மாவட்டத்தில், முதியவர்கள் சிலர் திடீரென இறந்துள்ளனர். அது இயற்கையான மரணம் என்று கருதி, குடும்பத்தினர் புகார் கொடுக்கவில்லை.கொலை செய்யப்பட்டு தான் இறந்துள்ளனர் என, சிவகிரி வழக்கில் பிடிபட்டிருக்கும் கொலையாளிகள் தெரிவித்திருக்கும் தகவல்களையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும். கடைசியாக பிடிபட்ட ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் கொடுத்திருக்கும் வாக்குமூலம், தமிழகத்தின் மேற்கு மாவட்ட கொலைகளில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முழு விபரம் தெரியும்: ஏ.டி.ஜி.பி.,

சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்திடம் கேட்டபோது, ''சிவகிரி மற்றும் பல்லடம் வழக்குகளில் மூவருக்கும் தொடர்பு இருப்பது உறுதிபட தெரியவந்துள்ளது. ''மற்ற வழக்குகளில் உள்ள தொடர்பு குறித்து, அவர்களை கஸ்டடி எடுத்து விசாரிக்கும் போது தான் தெரியவரும். அந்த வழக்குகளில், இவர்களுடைய தொடர்பு குறித்த ஆதாரங்களும் தேவைப்படுகின்றன,'' என்றார்.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Natarajan Ramanathan
மே 30, 2025 21:21

டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் கூட ஒரு க்ரிமினல் போலவே இருக்கிறார்...விசாரணை தேவை.


Ganapathy Subramanian
ஜூன் 03, 2025 14:49

கிரிமினல் போல இல்லை, கிருமினல்தான். அவர்தான் இலங்கை தமிழருக்கு நூற்றுக்கணக்கில் இந்திய பாஸ்போர்ட் கொடுத்த வழக்கில் குற்றம் சாற்றப்படுபவர். மதுரையில் இருந்தபோது கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்தவர். வாராகி என்பவற்றின் முயற்சியால் இந்த விஷயம் வெளியே வந்தது. ஆனால் விடியல் ஆட்சியில் நடவடிக்கை இல்லை.


Natchimuthu Chithiraisamy
மே 30, 2025 17:08

இந்த மூவர் அணைத்து கொலைகளையும் செய்ய வாய்ப்பே இல்லை. சிலர் வெளீயே வர இது நாடகம். சேமக்கவுண்டம் பாளையம் கொலை கேஸையும் முடிக்க வேண்டும். கொங்கு மக்கள் குழம்புட்டும். மிக பெரிய குரூப் தோட்டது பெரியவர்களை கொல்கிறது ஒரே வழி பிள்ளைகள் கட்டாயம் கேமரா மாட்டுவது பெற்றோரை காப்பாற்றலாம். இல்லை தொழிலதிபர்களுக்கு தோட்டத்தை விற்றுவிட நாடகம் நடக்கிறது


சிந்தனை
மே 29, 2025 17:42

லஞ்சம் வாங்கும் போலீசாருக்கும் பொய் வழக்கு நடத்தும் வக்கீல்களுக்கும் தூக்கு தண்டனை கொடுக்காத வரை இந்த நாடு உருப்படுவது கஷ்டம் தான்


ஆரூர் ரங்
மே 29, 2025 13:21

யாராவது மாட்டிக் கொண்டா அவர்கள் மீது (அவர்கள் சம்பந்தப்படாத?) வெகுநாட்களாக தீர்க்கப்படாமலிருந்த பல குற்றங்களை போட்டு வழக்கு பைல்களை மூடுவது புதிதல்ல.


KayD
மே 29, 2025 11:19

அடுத்த ஒரு பெரிய ஹீரோ படத்துக்கு கதை களம் ரெடி. படம் பேரு சென்னிமலை சம்பவம்..


Padmasridharan
மே 29, 2025 08:48

கொடூரர்கள் யார்.. கொலை செய்தவர்களா.. உண்மையை மறைத்து பொய் பேசுபவர்களா.. அய்யா.. திருவான்மியூர் கடற்கறையில் ஒரு சில காவலர்கள் பார்ப்பவரையெல்லாம் மொபைல் ஃபோனில் ஃபோட்டோ, வீடியோ எடுத்து கொண்டு அங்கு வரும் ஒரு சிலரை உன்னை 2 முறை பார்த்து எடுத்துவிட்டேன், அடுத்த முறை உன்னை கிரிமினல் லிஸ்டில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி, அடித்து கூறுகிறார்கள்.. மற்ற சிலர் மொபைல் ஃபோனை புடிங்கி, பெட்டி கேஸ் போடுகிறேன் பணம் கொடுத்துப்போ என்று அடித்து மிரட்டுகின்றனர். இந்த மாதிரி காவலர்கள் இருக்கும்வரை இப்படிப்பட்ட நிஜ குற்றவாளிகள் வெளியிலும் மற்றவர்கள் காக்கிச்சட்டை போட்டு உள்ளேயும் இருக்கத்தான் செய்வார்கள். கண்டுபிடிச்சா suspension / transfer, Dismiss செய்யமாட்டார்கள் என்கிற தைரியம்தான்.


N Annamalai
மே 29, 2025 07:25

முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் ஜோடிக்கப்பட்ட குற்றவாளிகளா?.முழு விசாரணை தேவை .


Nada Rajan
மே 29, 2025 06:54

கொடூரர்களுக்கு கடும் தண்டனை கொடுங்கள்


சமீபத்திய செய்தி