உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒப்பந்தம் போட்டது 1,000 தனியார் பஸ்களுக்கு ஒப்புதல் கிடைத்தது 650க்கு; இயக்கியது வெறும் 300

ஒப்பந்தம் போட்டது 1,000 தனியார் பஸ்களுக்கு ஒப்புதல் கிடைத்தது 650க்கு; இயக்கியது வெறும் 300

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'அரசு ஒப்பந்த பஸ் இயக்கத்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு, போக்குவரத்து துறை அதிகாரிகளே காரணம்' என, தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தீபாவளியை ஒட்டி, 'அரசு ஒப்பந்த பஸ்' என்ற பெயரில், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கின. ஒப்பந்தத்தின்படி, 1,000 பஸ்கள் இயக்க முடிவு செய்து, சில அதிகாரிகளின் குளறுபடி காரணமாக, 300 பஸ்களே இயக்கப்பட்டன.

இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:

பயணியர் தேவையை கணக்கிட்டு, 650 தனியார் பஸ்கள் இயக்க, போக்கு வரத்து துறை அனுமதி அளித்தது. தனியார் பஸ்கள் இயக்க, ஒரு கி.மீட்டருக்கு 51.25 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சென்னையில் இருந்து திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வழித்தடங்களில், 300 தனியார் பஸ்களை இயக்கினோம். அரசு அனுமதி அளித்தபடி, 650 பஸ்களை இயக்க முடியவில்லை. போக்குவரத்து துறையை சேர்ந்த சில அதிகாரிகள், அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தனியார் பஸ்கள் உள்ளே வந்து விடக் கூடாது என்ற நோக்கில் குளறுபடி செய்தனர். பயணியர் தேவைக்காக, அரசின் தற்காலிக ஏற்பாடு இது என்பதை, அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதுகுறித்து, போக்குவரத்து துறை அமைச்சரிடம் புகார் கொடுத்தோம்; பொங்கல் பண்டிகையின்போது, இதுபோன்ற பிரச்னை இருக்காது என்றும், அவர் உறுதி அளித்து உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Palanivel Palanivel
நவ 11, 2024 20:46

அரசுப் பேருந்து சிறப்பியக்கத்தில் கிமீக்கு30ரூபாய் வரவில்லை என்று ஓட்டுநர் நடத்துநருக்கு நோட்டீஸ் கொடுக்கும் நிர்வாகம் தனியாருக்கு 51.25 வழங்குகிறது


lana
நவ 07, 2024 16:32

ஆனால் பணம் கொடுத்தது எத்தனை பேருந்து க்கு


Subash BV
நவ 07, 2024 12:41

SUITCASES POLITICS DIDNT WORK SATISFACTORILY. INSTEAD PRIVATISE THE ENTIRE GOVT PUBLIC SERVICE. BECAUSE. DOING BUSINESS NOT GOVTS BUSINESS. INSTEAD CONCENTRATE ON REVENUE COLLECTION. PUT TAMIZAGAM FIRST.


sugumar s
நவ 07, 2024 12:09

பொங்கல் போது எதிர்பார்க்கும் கமிஷன் கிடைத்தால் தனியார் பஸ் ஓடும். நாங்க கமிஷன் தான் எதிருப்பார்க்கரோம் . மக்கள் தேவையை அவங்களே பார்த்துக்குங்க . அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் மைண்ட் வாய்ஸ்


நிக்கோல்தாம்சன்
நவ 07, 2024 10:23

போக்குவரத்து துறை அதிகாரிகள் என்பவர்கள் எல்லாம் ஊழல் பேருச்சாளிகளோ ?


ராமகிருஷ்ணன்
நவ 07, 2024 09:09

போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆட்சியில் உள்ளவர்கள் கேட்ட கமிஷன் தொகை கேட்டு பஸ் அதிபர்கள் திகைத்து, பைத்தியம் பிடித்து போய் விட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை