உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்

தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பின், த.வெ.க., தலைவர் விஜயை குறிவைத்து, கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதேநேரம், தி.மு.க., குறித்த பேச்சில் கடும் சொற்களை தவிர்த்து வருகிறார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிக்கை, மேடை பேச்சு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் தி.மு.க.,வினர் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக, ஈ.வெ.ரா.,வுக்கு எதிராகவும், தி.மு.க.,வுக்கு எதிராகவும் சீமான் பேசி வந்தார். இந்த பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்பட்டது. தி.மு.க., மற்றும் ஈ.வெ.ரா., குறித்து சீமான் தொடர்ந்து பேசியதால், அது பிடிக்காத அவரது கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிலர் விலகி, தி.மு.க.,விலும், இதர கட்சிகளிலும் சேர்ந்தனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து விசாரிக்க, கடந்த மாதம் முதல்வரை, அவரது இல்லத்தில் சீமான் சந்தித்து பேசினார். 'இந்த சந்திப்பு, அரசியலுக்கு அப்பாற்பட்ட அன்பு' என சீமான் தெரிவித்து இருந்தார். ஆனால், அதன்பின்னர் சீமானின் அரசியல் நடவடிக்கைகளில் மாற்றம் தென்படத் துவங்கிவிட்டது. அறிக்கைகள், மேடை பேச்சு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில், முதல்வர் மற்றும் தி.மு.க.,வினரை சீமான் விமர்சித்தாலும், கடும் சொற்களை தவிர்த்து வருகிறார்; பழைய ஆக்ரோஷமான குற்றச்சாட்டுகள் இல்லை. நாம் தமிழர் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சீமானின் இந்த திடீர் மாற்றம், தி.மு.க.,வுக்கு லாபகரமானதாக இருக்கும் என அக்கட்சியினர் கூற துவங்கி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தனித்து போட்டியிட வேண்டும் என்பதில், தான் உறுதியாக இருப்பதாக சீமான் சொல்லி வருவதும், தி.மு.க.,வினரிடம் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தான், தி.மு.க., மீதான மோதலை குறைத்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சித் தொண்டர்களை கடுமையாக, சீமான் மேடை தோறும் விமர்சிக்கத் துவங்கியுள்ளார். இந்த மாற்றத்தால், நா.த.க., - த.வெ.க., தொண்டர்கள், சமூக வலைதளங்களில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தி, வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, நா.த.க.,வினர் கூறியதாவது:

எல்லாரையும் ஒரே மாதிரியாகத்தான் விமர்சிக்கிறார் சீமான். விஜயின் செயல்பாடுகள் விமர்சிக்கும்படியாக உள்ளதால், அவரையும் விமர்சிக்கிறார். இது தனிப்பட்ட மோதல் இல்லை; கொள்கை அடிப்படையிலான அரசியல் மோதல். விஜய் கட்சியினரும் நாம் தமிழர் தொண்டர்களை விமர்சிக்கின்றனர். அக்கட்சியின் செயல்பாடுகளை பொறுத்து, நாம் தமிழர் கட்சியின் செயல்பாடும் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

MAHADEVAN NATARAJAN
ஆக 21, 2025 22:29

சைமனுக்கு பணம் கொடுத்தா போதும் அமைதியா இருப்பார். சொரிஞ்சுகிட்டே இருக்கணும் மூஞ்சிய. மத்தபடி உளறல் தான்.


raja
ஆக 21, 2025 21:40

இப்படி போய் நுனி இருக்கையில் அமர்ந்தாயே பிரபாகரன் தாய்க்கு மருத்துவம் வழங்க அனுமதிக்காத கூட்டம். உன் தமிழ் இன வெறி எங்கே வீர முழக்கம் எங்கே எல்லாம் தம்பிகளுக்கு தானா. நீங்க போனது தவறில்லை ஒரு அடிமை போல் நுனி இருக்கையில் அமர்வது சரியா. அந்த அளவுக்கு நீங்க தரம் தாழ்ந்து விட்டீர்களா?


Ramesh Sargam
ஆக 21, 2025 21:12

பொதுக்கூட்டங்களில் திமுகவை அப்படி கண்டபடி விமர்சித்தவர், இப்பொழுது ஸ்டாலின் முன்பு பவ்யமாக, பெட்டிப்பாம்புபோல உட்கார்ந்து இருக்கிறார் சீமான். இவருடைய வீரப்பேச்சுக்கள் வெறும் வாய் சவடால்தானா...?


Ramesh Sargam
ஆக 21, 2025 20:46

ஆக இந்த இரண்டு கால் பிராணிக்கும் ஸ்டாலின் பிஸ்கட் போட்டு அடக்கிவைத்திருக்கிறார்.


Mohan
ஆக 21, 2025 16:52

என்ன பெட்டிஹிட்டி வாங்கிட்டார் ..


திகழும் ஓவியன், Ajax Ontario
ஆக 21, 2025 12:51

பீ டூ இஜட் டீம் எல்லாம் இந்த எட்டப்ப கூலிகள்


Saai Sundharamurthy AVK
ஆக 21, 2025 11:59

சீமான், திமுகவின் பி.டீம் என்பதும் கிறித்துவ மிசினரிகளின் விசுவாசி என்பதும் ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி !!!!!


Muralidharan S
ஆக 21, 2025 12:34

ஆளும் திமுகாவிற்கு எதிராகத்தான் பெரும்பாலான அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களின் மனநிலை இருக்கிறது. இந்த திராவிஷ கூட்டத்தின் ஆட்சி அகற்றப்படவேண்டிய ஆட்சி என்பது மக்கள் முடிவு. அதற்க்கு மாற்றாக இருக்கும் கட்சிக்கு வாக்குகளும் ஆட்சியையும் போய்விடக்கூடாது. எதிர்க்கும் ஓட்டுக்கள் பிளக்கப்பட்டால், திமுக ஜெயிப்பது மிகவும் சுலபம். இதற்காக மிஷனரிகளால் வாரி இறைத்து உருவாக்கப்பட்ட கட்சிகள்தான் கமல், சீமான் மற்றும் விஜய் கட்சிகள். கமலின் திராவிஷ / மிஷனரி முகம் இப்பொழுது வெட்ட வெளிச்சமாகி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.. மீதி இருவரின் உண்மையான முகங்களும் காலப்போக்கில் மக்களுக்கு தெரியவரும்.. ஆனாலும் எப்பொழுதும் போல பண கொள்கையில் உறுதியாக இருக்கும் மக்கள் இதை புரிந்து கொள்ள அல்லது தெரிந்தாலும் தெரியாத மாதிரி தமிழகத்திற்கு வளர்ச்சிக்கு பிரியோஜனமே இல்லாத கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள்.


Muralidharan S
ஆக 21, 2025 11:46

உலகத்தையே விலைக்கு வாங்கும் அளவிற்கு திராவிஷ கட்சியிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது.. எல்லா மாநிலங்களும் மத்தியில் ஊழலற்ற பாஜக ஆட்சிக்கு வாக்களிக்கும் போது தமிழகத்தில் இருந்து மட்டும் எப்பொழுதும் 40க்கு 40 திரவிஷன்கள் ஜெயித்து டில்லி சென்று தமிழகத்திற்கு ஒரு பயனும் இல்லாமல் சீட்டை தேய்க்கின்றனர். இப்படி இவர்களால் ஒரு பிரயோஜனமும் தமிழகத்திற்கு இல்லை என்றாலும் கூட, இவர்கள் எப்படி ஜெயிக்க முடிகிறது? எல்லாம்.. காசு, பணம்.. துட்டு... மணி, மணி... படுத்தும் பாடு மக்களுக்கும் மணி..., எதிர்க்கும் கட்சிகளுக்கும் மணி... எதிர்த்து கட்சி ஆரம்பித்து நடத்தவும் மணி.. திராவிஷத்தை எதிர்த்து தேர்தலில் தோற்ற பிறகு, அதே திரவிஷத்திடம் சீட்டு வாங்கிக்கொண்டு ராஜ்ய சபா செல்லவும் மணி.. மணி.... சீற்றமாக முழக்கமாக கத்தவும் மணி.. இப்படி எல்லாவற்றிக்கும் மணி.. மணி.. அரசியல் என்பது அரசியல்வியாதிகளுக்கு வியாபாரம்.. தேர்தல் திருவிழா மக்களுக்கு வியாபாரம். இங்கு எல்லாமே வியாபாரம் பணம் சம்பாரித்து, சொத்துக்குவிப்பு.. இவைகள்தான் நோக்கம் எல்லோருக்குமே நேர்மையற்ற ஊழல் அரசியல்வியாதிகளுக்கு ஓட்டுப்போடும் மக்களுக்கும்


ராமகிருஷ்ணன்
ஆக 21, 2025 11:34

வாங்குன கூலிக்கு மேலே கூவக்கூடாது அடக்கி வாசிக்கனும் என்ன புரியுதா


Natchimuthu Chithiraisamy
ஆக 21, 2025 10:38

விஜய்யும் சீமானும் கண்டிப்பாக ஸ்டாலினை பற்றி பேசுவார்கள் இதனால் பழனிசாமிக்கு தான் நாட்டம் ஸ்டாலினிக்கு அல்ல. மூவரும் ஒரு இனமாக ஆங்கிலேயருடன் சேருகிறார்கள் ஸ்டாலின் வெற்றி பெற பல நாடகங்கள் தேவை ஏனெனில் அறியாத இ மக்கள் இருக்கும் வரை. அவர்கள் புத்தி பெறும்போது ....


புதிய வீடியோ