உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  சி.எஸ்.ஐ., டயோசீஸ் தேர்தலில் மோதல்: பாதிரியாரை மிரட்டிய கும்பலால் பரபரப்பு

 சி.எஸ்.ஐ., டயோசீஸ் தேர்தலில் மோதல்: பாதிரியாரை மிரட்டிய கும்பலால் பரபரப்பு

துாத்துக்குடி சி.எஸ்.ஐ., டயோசீஸ் திருமண்டல தேர்தலில் தோல்வியடைந்த கும்பல், பாதிரியார் வீட்டுக்குள் புகுந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விடுவதாக மிரட்டியும், ஒருவரை கத்தியால் குத்தியும் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துாத்துக்குடி, -நாசரேத் திருமண்டல சி.எஸ்.ஐ., டயோசீஸ் கிறிஸ்துவ அமைப்பை நிர்வகிக்கும் பிஷப், லே செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த, 2021ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2024 வரை பொறுப்பில் இருந்தனர். அதன் பிறகு தேர்தல் தள்ளிப்போனது. உயர் நீதிமன்ற உத்தரவில், ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் தற்போது புதிய பெருமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. லே செயலர் பதவிக்கு எஸ்.டி.கே.ராஜன் தலைமையில் ஒரு அணியினரும், டி.எஸ்.எப்.நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் இன்னொரு அணியினரும் போட்டியிடுகின்றனர். நவ., 9ம் தேதி அந்தந்த சர்ச்களில் தேர்தல் நடந்தது. துாத்துக்குடி அருகே நடுவக்குறிச்சியில் பலருக்கு ஓட்டு இல்லை என சர்ச்சை ஏற்பட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டது. செய்துங்கநல்லுாரில் பாஸ்டர் ஜோஸ்வா தலைமையில் நடந்த தேர்தலில், இரு அணியினரும் போட்டியிட்டனர். இதில், குறைவான ஓட்டுகள் பெற்ற துாத்துக்குடி மாவட்ட தி.மு.க., துணை செயலர் ஜெயகுமார் ரூபன் தலைமையில் மூன்று பேர் கும்பல், நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி அருகே வி.எம்.சத்திரத்தில் பாஸ்டர் ஜோஸ்வாவின் வீட்டிற்குள் புகுந்து, தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தகராறு செய்துள்ளது. பெட்ரோல் சிதறி, பாஸ்டர் ஜோஸ்வாவின் மகன் மீதும் பட்டது. இதில் பதற்றமடைந்த பாஸ்டரின் மனைவி, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வருவதற்குள், ஜெயகுமார் ரூபன் உட்பட மூன்று பேர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள், செய்துங்கநல்லுார் அருகே நாட்டார்குளத்தில் வசிக்கும் தங்கராஜ் என்பவரை கத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இவர், சி.எஸ்.ஐ., தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அணிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும், செய்துங்கநல்லுார் மற்றும் பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராஜா
நவ 13, 2025 20:21

நாசரேத் ரவுடிகள் சும்மாவே இருக்க மாட்டார்கள், யாரையும் எளிதில் ஏமாற்றி விடுவார்கள்.


நடராஜன்
நவ 13, 2025 18:56

அன்பே இல்லாத மதத்திற்கு அன்பு மதம் என்று பெயர். வன்முறையே உருவான அமைதியே இல்லாத இன்னொரு மதத்திற்கு அமைதி மார்க்கம் என்று பெயர். எல்லாம் ஆப்போசிட்டா தான் இருக்கும் போல இருக்கு. கேட்டா இந்து கடவுள் ஆயுதம் வச்சிருக்காங்க அப்படின்னு சொல்றாங்க. மொத்த மதங்களில் கடவுள் கிட்ட ஆயுதம் இல்லை. ஆனால் மக்கள் ஆயுதம் கொண்டு திரிகிறார்கள். இந்து மதத்தில் கடவுள்களிடம் ஆயுதம் இருப்பதால் பொது மக்களிடம் அமைதி இருக்கிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 13, 2025 16:11

இரும்புக்கர காமெடியனின் ஏவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் ......... பிரச்னை தீர பாடுபடும் .....


naranam
நவ 13, 2025 14:43

அடி சக்க! கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கு!


ராமகிருஷ்ணன்
நவ 13, 2025 13:13

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொல்லும் மத கும்பலுக்குள் கத்தி குத்து, பெட்ரோல் குண்டு வீச்சு நடக்குது. சிறப்பான வெளிப்பாடு.


Shekar
நவ 13, 2025 09:59

எனக்கென்னவோ இது சிறுத்தைக்குட்டிகளின் அடங்கமறு ஒத்திகையாய் இருக்கும்


கண்ணன்
நவ 13, 2025 09:57

நல்ல செய்தி அடித்துக் கொண்டு மாளட்டும்


சந்திரசேகர்
நவ 13, 2025 09:43

ஆக கோவில் சொத்தானாலும் சர்ச் சொத்தானாலும் ஆட்டைய போட வேண்டியது தான். ஆக வெள்ளை கெவுனுக்குள் குரோதம்.அன்பு மதம் ஊருக்கு உள்ளே எல்லாம் தலைகீழ்


Modisha
நவ 13, 2025 08:54

இந்த …..கள் தாங்களாகவே சண்டை இட்டு அழிந்தால் தான் உண்டு. ஒழியட்டும்.


Svs Yaadum oore
நவ 13, 2025 07:38

குறைவான ஓட்டுகள் பெற்ற துாத்துக்குடி மாவட்ட தி.மு.க., துணை செயலர் தலைமையில் மூன்று பேர் கும்பல், வீட்டிற்குள் புகுந்து, பெட்ரோல் ஊற்றி தகராறு செய்துள்ளதாம் .....அயோக்கிய அராஜக அருட்தந்தை கும்பல் இது ....பெண்களுக்கு இவனுங்கதான் பாவ மன்னிப்பு கொடுப்பானுங்க .....


புதிய வீடியோ