உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய்க்கு எதிராக அவதுாறு போஸ்டர்; தி.மு.க., நிர்வாகிகளுக்கு தலைமை டோஸ்

விஜய்க்கு எதிராக அவதுாறு போஸ்டர்; தி.மு.க., நிர்வாகிகளுக்கு தலைமை டோஸ்

முதல்வர் ஸ்டாலினை 'அங்கிள்' என விமர்சித்து பேசிய த.வெ.க., தலைவர் விஜயை கண்டித்து, அவதுாறு போஸ்டர்கள் ஒட்டிய மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளை, கட்சி தலைமை கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் கடந்த 21ம் தேதி, த.வெ.க., சார்பில் மாநில மாநாடு நடந்தது. இதில், 'அ.தி.மு.க.,வை பா.ஜ.,வின் அடிமை கட்சி' என்றும், தி.மு.க.,வை அரசியல் எதிரி என்றும் விஜய் விமர்சித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ofvigsff&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசுகையில், 'தி.மு.க., - பா.ஜ., உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது. ஒரு ரெய்டு வந்தால் போதும்; உடனே டில்லி சென்று, ரகசிய மீட்டிங் போடுறாங்க. ஸ்டாலின் அங்கிள், இது வெரி ராங் அங்கிள். 'தமிழகத்து பெண்கள், இங்கே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கதறிட்டு இருக்காங்க. இதெல்லாம் வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்' என, ஸ்டாலின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார். இது, தி.மு.க., தரப்புக்கு நடிகர் விஜய் மீது மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. அதுவரை விஜய் குறித்து பெரிதாக எதுவும் பேசாமல் இருந்து வந்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், விஜய்க்கு எதிராக கொந்தளிக்கத் துவங்கினர். இதன் தொடர்ச்சியாக, நடிகர் விஜயை கண்டித்து, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலரும், எம்.எல்.ஏ.,வுமான கோ.தளபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் சிந்து நாகேந்திரன், தமிழ்சந்திரன், வீரமணி ஆகியோரின் படத்துடன், மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அவற்றில் இடம் பெற்றிருந்த வாசகங்கள் விபரம்:

திராவிடம் வெறும் சிந்தனை அல்ல; வாழ்வியல். தி.மு.க., வெறும் அரசியல் கட்சி அன்று. அது, தமிழக மக்களின் சொத்து. ஜனநாயக போர்க்களத்திற்கு கொள்கை வாளையும், சனாதனத்தை அறுத்தெறியும் வேலையையும், பகுத்தறிவென்னும் சுயமரியாதை ஈட்டியையும், சமூக நீதிக்கான கேடயங்களையும் வடித்து தந்திட்ட, திராவிட பெருவேந்தரான உதயநிதியாரின் உடன் பிறவாத தம்பிகள் உயிரோடு இருக்கும் வரை, த.வெ.க., அணில் கூட்டத்தினரால் ஒரு ம...யும் புடுங்க முடியாது என அச்சிடப்பட்டுள்ளது. இது மக்களிடம் முகச் சுளிப்பையும் ஏற்படுத்தியது. இத்தகவலை, தி.மு.க., தலைமைக்கு உளவுத்துறையினர் தெரிவிக்க, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுக்கு, கட்சி தலைமையால் டோஸ் விடப்பட்டுள்ளது. மதுரையில் த.வெ.க., தலைவர் விஜயை விமர்சித்து தி.மு.க.,வினர் ஒட்டிய போஸ்டர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ganapathy
ஆக 27, 2025 21:32

கிறிஸ்தவ ஓட்டாச்சே....இதுக்கு வழக்கம்போல ஸனாதனத்தை திட்டி சமாளிக்க முடியாதே..ஏன்னா விஜய் "ஜோஸப்" ஆச்சே...


B டீம்
ஆக 27, 2025 19:48

விஜயை ஒண்ணும் சொல்லாத்திங்க, அவரு நம்ம ஆளு. 2021ல் பீலா நாயகன். 2026க்கு இவரு.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 27, 2025 14:18

உதயநிதி யார் என்று கேட்கும் அளவுக்கு இந்த கும்பல் உள்ளது , இது சரி இல்லை ,அழகிரியின் எடுபிடிகள் ,விடியல் ஸ்டார் கண்டித்து டோஸ் விட்டது அதுக்கு தான்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 27, 2025 14:13

நமக்கு நாமே போஸ்டர் ஓட்டுவது சரி இல்ல ஆபீசர்


Nellai Baskar
ஆக 27, 2025 10:08

ஆமாம் ஆமாம் இப்படி எல்லாம் விஜயை எதிர்த்து போஸ்டர் ஒட்டாதிங்க எப்படியும் நம்மிடம் தான் வந்து சேருவார் என்று தலைமை நினைப்பது புரிகிறது. டிவி யை உடைச்சவரே வந்துட்டார்.


Ganapathy
ஆக 27, 2025 09:44

தமிழகத்தில் புதிய கட்சிகளை நடிகர்கள் துவங்குவதே ஸன் குழுமத்தை எதிர்கத்தான்...ஸனாதனத்திற்கும் பகுத்தறிவிற்கும் இதில் துளி கூட தொடர்பில்லை...ஹிந்துக்கள் இவர்களின் சதியில் சிக்க வேண்டாம்..


Ganapathy
ஆக 27, 2025 09:37

பிரச்சனை உண்மையில் ஸன் பிஃக்சர்ஸ் கம்பெனிக்கும் விஜய்க்கும் இடையில்...இதை வச்சு பிறந்த கட்சிதான் தவெக....ஆனால் இந்த பிரச்சனையில் தேவையில்லாமல் ஸனாதன வெறுப்பு இடம் பெற்றுள்ளது. கிறிஸ்தவ விஜய் ஜோஸப்பும் கிறிஸ்தவ ஸ்டாலினும் ஸனாதனத்தின் பொது எதிரிகள் ஆவர்.. ஸனாதனம் அந்த அளவுக்கு இருவரையும் பாதித்துள்ளது. இரண்டுபேரும் சம்பந்தமில்லாமலேயே ஸனானதனத்தை வெறுப்பதே இதன் அடையாள வெளிப்பாடு. ஹிந்துக்கள் இந்த சதியில் மாட்டக்கூடாது.


தமிழ்வேள்
ஆக 27, 2025 09:22

திராவிட பெருவேந்தர் - அப்படீன்னு பெத்தும்மா சொல்லிச்சா?


ஆரூர் ரங்
ஆக 27, 2025 09:18

திராவிஷமென்பது கொள்கையல்ல.


Vaduvooraan
ஆக 27, 2025 08:46

இது திமுகவின் பாரம்பரியத்தில் ஊறிப்போன தொண்டர்களின் வழக்கமான செயல்பாடு பொதுவாழ்க்கையில் ஆபாசப் பேச்சு, வசை மாரி என்பது அவர்கள் மரபணு சம்பந்தப்பட்ட விஷயம் அந் நாட்களில் காந்தி, நேரு, காமராஜர், அனந்தநாயகி, கம்யூனிஸ்ட் ராமமூர்த்தி, இந்திரா, மோகன் குமாரமங்கலம், பக்தவத்சலம் எம்ஜியார் என்று யாரையுமே விட்டு வைக்காதவர்களிடம் இன்னும் நாகரீகமான அரசியலை எதிர்பார்ப்பது மடமை அராஜகம், அலங்கார ஆபாசப் பேச்சு, இரட்டை நிலைப்பாடு, ஈனப் பிழைப்பு, உணர்ச்சியை தூண்டுதல், ஊழல் .இதுவே திமுகவின் அரிச்சுவடி