உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கமான சிவ்ராஜ் சிங் சவுகான்!

டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கமான சிவ்ராஜ் சிங் சவுகான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா அமைச்சரானதால், வேறொருவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். இதற்கு, இப்போது மத்திய அமைச்சராக உள்ள, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் பெயர் அடிபட்டது. ஆனால், இப்போது அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார் பிரதமர் மோடி. இதனால் அவர், பா.ஜ.,வின் தேசிய தலைவராக மாட்டார் என்பது உறுதியாகி விட்டது.தான் அறிவித்த திட்டங்கள் எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பதை கண்காணிக்க, ஒரு குழுவை அமைத்துள்ளார் மோடி; இதன் தலைவராக சிவ்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மோடி அடிக்கல் நாட்டிய திட்டங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை ஆய்வு செய்வதுடன், அவற்றை விரைவுபடுத்தவும், இந்த குழு உத்தரவுகள் பிறப்பிக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aezjrral&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் அலுவலக அதிகாரிகளும் இந்த குழுவில் உள்ளனர். மத்திய அமைச்சகத்தின் செயலர்கள், இந்த குழுவின் ஆலோசனையில் பங்கேற்பர்.மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி, சரியான முறையில், சம்பந்தப்பட்ட திட்டங்களுக்காக செலவிடப்படுகிறதா என்பதையும் இந்த குழு கண்காணிக்கும்.தான் துவங்கிய பல திட்டங்கள், நிறைவேற்றப்படாமல் இருப்பதால், இப்படி ஒரு கண்காணிப்பு குழுவை நியமித்துள்ளாராம் மோடி. இந்த குழு, பிரதமர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் கூடி, திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தும்.'மூன்றாவது முறையாக மத்திய பிரதேசத்தில் பா.ஜ., வெற்றி பெற, சிவ்ராஜ் காரணம் என்பதை நன்கு அறிந்துஉள்ளார் மோடி. அதனால் தான் இந்த புதிய பதவியாம். அத்துடன், இப்போது மோடிக்கு நெருக்கமானவர் சிவ்ராஜ் தான்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
அக் 27, 2024 11:54

அவரை முதலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அவர்களால் நாட்டப்பட்ட அடிக்கல்லை வந்து பார்க்கச் சொல்லுங்கள்! புண்ணிய மாகப் போகும்!


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 27, 2024 09:32

பிரதமர் அலுவலக அதிகாரிகளும் இந்த குழுவில் உள்ளனர். மத்திய அமைச்சகத்தின் செயலர்கள், இந்த குழுவின் ஆலோசனையில் பங்கேற்பர். இத்தனை வெட்டிஸ் இருக்குதுங்களா ???? திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்துச் சொல்ல அந்தந்த அமைச்சரவையில் ஏற்கனவே இருக்கும் மைச்சர்களும், அவர்களது அதிகாரிகளும் சரிப்பட்டு வரமாட்டார்களா ???? மக்கள் வரிப்பணத்தில் மஞ்சக்குளிக்குது பாஜக .....


ஆரூர் ரங்
அக் 27, 2024 10:31

தவறு. ஜப்பானியர்களின் மதிப்பீட்டுப் படி இந்தியாவில் சம்பளச் செலவு குறைவு. ஆனால் மேற்பார்வை செலவு அதிகம். ஆக மொத்த செலவில் மிச்சம் எதுவும் கிடைக்காது. பணி செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் ஆட்கள் இருக்கும் வரை மாற்றமுடியாத ஒன்று.


Kalyanaraman
அக் 27, 2024 08:15

மிக எளிமையான, பண்புமிக்க மனிதர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை