உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: நிதி அமைச்சருக்கு பாராட்டு!

டில்லி உஷ்ஷ்ஷ்: நிதி அமைச்சருக்கு பாராட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராஜ்யசபாவில் பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா, 'தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை' என, பெரிய பட்டியல் ஒன்றை படித்தார்.இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தபோது, தி.மு.க., - எம்.பி.,க்கள் குறுக்கிட்டனர். 'அமைதியாக உட்கார்ந்து கேளுங்கள்; அது உங்களது கடமை' என, ஒரு தலைமையாசிரியர் போல, மிரட்டும் தொனியில் பேசி, தி.மு.க., - எம்.பி.,க்களை உட்கார வைத்தார், நிதியமைச்சர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3jgp6yqa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'மெட்ரோ ரயில் உட்பட, தமிழகத்திற்கு மத்திய அரசு எவ்வளவு திட்டங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறது' என்று, விபரமான பட்டியல் ஒன்றை வெளியிட்டு, 'எதற்கெடுத்தாலும் மோடி என சொல்வதை முதலில் நிறுத்துங்கள்' என கூறியதுடன், 'தி.மு.க., தான் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகிறது' என்றும் தெரிவித்தார்.இதை பேசி முடித்த பின், சக அமைச்சர்கள், நிதியமைச்சரை பாராட்டினர். இதையடுத்து, ராஜ்யசபாவின் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அலுவலகத்திலிருந்து நிதி அமைச்சருக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்ற நிர்மலாவிற்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது; ஏனெனில், பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா அங்கிருந்தார்.'நீங்கள் மிகவும் தைரியசாலியான பெண்மணி. ஒளிவு மறைவில்லாமல் பேசக்கூடியவர். இன்று அருமையாக பேசினீர்கள்' என, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், நிர்மலா சீதாராமனை பாராட்டினாராம். அதேபோல் தன் பங்கிற்கு நட்டாவும் பாராட்ட, ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டாராம் நிர்மலா சீதாராமன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

முருகன்
பிப் 16, 2025 14:45

மிரட்டும் தொனியில் பேசும் இவர் மக்கள் மன்றத்தில் தேர்தலில் நிற்க பயப்படுவது ஏன்


ராஜ்
பிப் 16, 2025 13:29

உங்களுக்கு பாராட்டு கிடைப்பது இருக்கட்டும் பாரதப் பிரதமர் மோடியை இழிவு படுத்தி ஆனந்த விகடன் கார்ட்டூன் போட்டுள்ளது அதன் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் நீங்கள் என்றால் நீங்கள் அல்ல அமித்ஷா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரைக் கேளுங்கள்


venugopal s
பிப் 16, 2025 07:41

தானே ஆடி தானே மெச்சிக் கொள்வது போல் உள்ளது!


ஓவிய விஜய்
பிப் 16, 2025 08:41

UNESCO ல அவார்ட் குடுத்த மாதிரியா 21 ஆம் பக்கத்தை பாராட்டி?


கிஜன்
பிப் 16, 2025 06:32

மாண்புமிகு முன்னாள் நிதியமைச்சர்.. ப.சிதம்பரம் பேசும்போது.. அவையில் அப்படி ஒரு நிசப்தம்.. அனைவரும் அமைதியாக அமர்ந்து அவர் பேச்சை கேட்டனர். இவர் பேசும்போது ஒரே குழாயடி சண்டை ... ஏய் ...நீ நிறுத்து ... இல்ல நீ நிறுத்து .... என்பது தான் காதில் விழுந்தது ..... "empty vessel seldom noise"


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 16, 2025 08:18

பா.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது பாஜக எதிர்கட்சி. பாஜக கட்டு கோப்பான ஒழுக்கமான கட்சி. ஆகவே மந்திரி பேசும் போது எதிர் கட்சியினர் சபையின் கண்ணியம் மற்றும் ஒழுக்கம் காக்க அமைதியாக பேச்சினை கேட்டு ஒருமையில் பேசாமல் நாகரீகமான முறையில் கேள்வி கேட்டனர். இப்பொழுது நிர்மலா சீதாராமன் பாஜக மந்திரி. எதிர் கட்சியினர் காங்கிரஸ் திமுக திரிணாமுல் போன்ற ஒழுக்கம் இல்லாத பண்பாடு இல்லாத கட்சிகள். பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரான கட்சியினர். ஒரு பெண்ணிடம் சென்று நிதி கேட்பதா அது கேவலம் என்று நினைத்து நிர்மலா சீதாராமனை ஏசும் கட்சி திமுக. குழாய் அடி சண்டையில் ஒருமையில் பேசுதல் தமிழிலேயே கேவலமான சென்னை தமிழில் பாராளுமன்றத்தில் பேசும் கட்சி திமுக. நீங்கள் கூறியது போல திமுக empty vessel seldom noise


Jayaraman Rangapathy
பிப் 16, 2025 05:15

தமிழ் தமிழ் என்று வாய்க்கு வாய் முழங்கும் கழக உறுப்பினர்களுக்கு தமிழ் பெண் மணியின் சேவையை பாராட்ட துளியும் மனமில்லை


Jayaraman Rangapathy
பிப் 16, 2025 05:10

இவர்தான் இரும்பு பெண்மணி. விரல் நுனியில் தரவுகள்.