உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: நடிகையை நம்பினால்...?

டில்லி உஷ்ஷ்ஷ்: நடிகையை நம்பினால்...?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர். காங்கிரசை கடுமையாக விமர்சித்து வந்தார்.எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் இந்திரா வேடத்தில் நடித்திருந்தார். 2024 பார்லிமென்ட் தேர்தலில், ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில், பா.ஜ., இவரை வேட்பாளராக அறிவித்தது; இவரும் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். இதையடுத்து தான் பிரச்னை ஆரம்பித்தது பா.ஜ.,விற்கு!விவசாயிகள் போராட்டம் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார்; இதனால், பா.ஜ., மேலிடம் அதிர்ச்சி அடைந்தது.தற்போது, ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம், மழை காரணமாக, 85 பேர் இறந்துள்ளனர். கங்கனாவின் மண்டி தொகுதியிலும் வெள்ளம், நிலச்சரிவு என, பல பேரழிவுகளால் மக்கள் தவித்து வருகின்றனர்; ஆனால், தன் தொகுதிக்கு போகாமல் மும்பையிலேயே இருந்தார்.'உடனே உங்கள் தொகுதிக்கு செல்லுங்கள்' என, கட்சி மேலிடம் சொல்ல, வேண்டா வெறுப்பாக மண்டிக்கு சென்றார் கங்கனா. மக்கள் இவரிடம் குறைகளைச் சொல்ல, 'நான் எந்த பொறுப்பிலும் இல்லை; அமைச்சர் பதவியிலும் இல்லை; என்னிடம் பணமும் கிடையாது. அப்படியிருக்க, நான் என்ன செய்ய முடியும்?' என, அவர்களிடம் கூறினாராம். உடனே, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது; வெறுத்துப் போனது பா.ஜ., மேலிடம்.கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமாக இருப்பவர் ஜெ.பி. நட்டா; இவரும் ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.இவர் மண்டிக்கு சென்றார். உடன் மாநில எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்களும் சென்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, இரண்டு எம்.எல்.ஏ.,க்களை நியமித்தார்; ஆனால், தொகுதி எம்.பி.,யான கங்கனாவை நட்டா அழைத்துச் செல்லவில்லை.சினிமா மோகத்தை நம்பி, இதுபோன்றவர்களை எம்.பி.,யாக்கினால் இந்த கதிதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Muralidharan S
ஜூலை 13, 2025 19:35

மோடிக்கு பிறகு பாஜகவும் தேயும்.. மாற்று கட்சியினரை எல்லாம் உள்ளே நுழைத்து, கான்-cross போல போலி மதசார்பின்மை வழியிலும் செல்லத்தொடங்கி இருக்கிறது..ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பவே மக்கள் பாஜகவை தேர்ந்து எடுத்தார்கள். ஆனால் 12 வருட பாஜக ஆட்சியில் ஒரு ஊழல்வாதியும் , ஊழலில் சொத்துக்குவித்தவனும், இது வரை தண்டனை பெற்று சிறைக்கு செல்லவில்லை. அதனால், அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி அமைந்து நாடும் படி படியாக தேய்ந்து மீண்டும் கான்-cross / திமுக இருள் கால ஆட்சி செல்லும். சென்ற தேர்தலில் சீட்டுக்கள் குறைந்ததே இதற்க்கு சாக்ஷி.


ஆரூர் ரங்
ஜூலை 13, 2025 19:03

அங்கு நடப்பது காங்கிரஸ் ஆட்சி. மாநில அரசு நான்கு எம்.பி.,க்களையும் மதிப்பதில்லை.


RRR
ஜூலை 13, 2025 15:44

இல்லவே இல்லை... தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரை. கங்கனா ரெணாவுத் ஒரு தீவிர ஹிந்துத்துவ போராளி. அவர் ஒரு வீரப்பெண்மணி... ஆனால் பாஜக அவரை மதிக்காமல் மிதித்துத் தள்ளியது... உண்மையான தேசியவாதிகளை, ஹிந்துத்துவவாதிகளை ஆதரிக்காமல் அரவணைக்காமல் வோட்டுக்காக போலி மதச்சார்பின்மையையே கையில் எடுக்கிறது பாஜக. பாஜகவில் இருந்து சமீபத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் டைகர் ராஜா, கங்கனா, நூபுர் ஷர்மா, அண்ணாமலை என பட்டியல் நீள்கிறது...


மனிதன்
ஜூலை 13, 2025 15:14

பாஜகவின் பொழுதுபோக்கே சினிமா நடிகர் நடிகைகளிடம் செல்ஃபி எடுப்பதும் அவர்களை கட்சியில் சேர்ப்பதும்தானே?? தன்மீதும்,தன் திட்டங்களின்மீதும், தன் கொள்கைகளின்மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இப்படித்தான் கூத்தாடிகளை நம்பி மோசம் போவார்கள்...


Ramesh Sargam
ஜூலை 13, 2025 12:52

சினிமா மோகத்தை நம்பி, இதுபோன்றவர்களை எம்.பி.,யாக்கினால் இந்த கதிதான் உண்மையான வார்த்தைகள்.


Seekayyes
ஜூலை 13, 2025 08:46

கூத்தாடிகளை நம்பி கரைந்து கொண்டிருக்கிறது பஜக.


Balasubramanian
ஜூலை 13, 2025 07:04

அப்ப மய்யம் எம்பி எதுக்கும் உதவாத 40 எம்பிக்கள் செய்யும் வேலை அதுதானே?


சமீபத்திய செய்தி