உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராணுவ நடவடிக்கை; ரகசியம் காத்தார் மோடி: டில்லி உஷ்ஷ்...

ராணுவ நடவடிக்கை; ரகசியம் காத்தார் மோடி: டில்லி உஷ்ஷ்...

புதுடில்லி: காஷ்மீரில் சுற்றுலா பயணியரின் படுகொலைகளுக்கு பின், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்க முடிவெடுத்தார் மோடி. இதற்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' எனவும் பெயரிட்டார். ஆனால், இந்த ஆப்பரேஷன் மிகவும் ரகசியமாக இருந்ததாம்; சக அமைச்சர்களுக்கு கூட இதுகுறித்து பிரதமர் சொல்லவே இல்லையாம்.யார் யாருக்கு இந்த விஷயம் தெரியும் என்றால், பாதுகாப்பு குறித்த அமைச்சரவைக் குழுவில் பிரதமர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உள்ளனர்.இவர்களில் அமித் ஷா, ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு மட்டும் இந்த ஆப்பரேஷன் குறித்து தெரியும்; ஆனால், அதுவும் என்ன செய்ய போகின்றனர் என்பது குறித்து இந்த அமைச்சர்களுக்கு முழுமையாக தெரியாதாம்.அதேநேரம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், முப்படை தளபதிகளுக்கு மட்டுமே முழு விபரங்கள் தெரியுமாம்; அவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம், ஆப்பரேஷன் சிந்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V GOPALAN
மே 12, 2025 02:55

மீண்டும் தீவிரவாதிககள் அப்பாவி மக்களை கொல்லம் மாட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதா . வேர் முழுமையாக அறுக்கவில்லை


Barakat Ali
மே 11, 2025 14:12

ரகசியம் காக்கத்தான் வேண்டும் ..... இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை .......


C G MAGESH
மே 11, 2025 13:12

மற்ற அமைச்சர்கள் பொறாமை பட இது தி மு க அல்ல, பீ ஜே பீ


lana
மே 11, 2025 10:43

அதனால் தான் இது சரியாக நடந்து முடிந்தது


Varadarajan Nagarajan
மே 11, 2025 10:11

இதற்குப்பெயர்தான் ராணுவ ரகசியம். பத்திரிகையாளர்களை அழைத்து தொலைக்காட்சி நிருபர்களின் கேள்விகளுக்கு கேமராக்களின் முன் ராணுவ நடவடிக்கைகளை கூறமுடியாது. உலக நாடுகள் யாரும் குறைசொல்லமுடியாத அளவிற்கு சரியான திட்டமிடல் மிகச்சரியான தாக்குதல். மோடியின் தலைமையில் உள்ள புதிய இந்தியா இது என பாகிஸ்தானுக்கு ஆயுத தளவாடங்களை கொடுத்த நாடுகளுக்கும் சேர்த்து சொல்லப்பட்ட செய்தி. ஒருகாலத்தில் ராணுவ தளவாடங்களை நாம் இறக்குமதி செய்து கொண்டிருந்த நாம் மேக் இன் இந்தியா திட்டத்தின்மூலம் அவற்றை விட தரமான ஆயுதங்களை நாமே உற்பத்திசெய்து நமக்கும் பயன்படுத்தி மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகின்றோம்.


ராஜ்
மே 11, 2025 09:59

இந்த ரகசியத்தை ரகசியத்தை ஏன் இப்போது போட்டு உடைக்க வேண்டும் சக அமைச்சர்கள் எநன்ன த நினைப்பார்கள்.


Barakat Ali
மே 11, 2025 14:15

நடந்த பிறகு சொன்னால் எப்படி ரகசியத்தைப் போட்டு உடைத்ததாக ஆகும் ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை