உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்பனையில் இறங்கும் மாணவர்கள்!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்பனையில் இறங்கும் மாணவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்பனையில் இறங்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தால் அந்த கஞ்சா வியாபாரியை போலீசார் எளிதாக கண்டறிந்து விடுவர். தற்போது, ஒரே பகுதியில் பலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தவிர, பணத்திற்காக, போதைப் பழக்கத்தால் கஞ்சா விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். கல்லுாரி மாணவர்கள் மத்தியில் போதை பயன்பாடு மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.அதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் அடிக்கடி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முதல் முறை குற்றவாளிகளுக்கு கவுன்சிலிங் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன், பீளமேடு பகுதியில் மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சிட்ரா அருகில் இருந்த ஒரு அபார்ட்மென்டில் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்ட போது, ஒரு காருக்கு இரண்டு நம்பர் பிளேட்கள் இருந்ததுள்ளது.சந்தேகம் அடைந்த போலீசார் அறையில் இருந்த தனியார் கல்லுாரி மாணவர்கள், பிரனேஷ், 19, சபரிஷ், 20 மற்றும் கவின் குமார், 22 ஆகியோரிடம் விசாரித்தனர்.மேலும், இங்கு தங்கியிருக்கும் மாணவர்கள், வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முதல் தர கஞ்சா வாங்கி இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து, கஞ்சா விற்பனை செய்த பணத்தில் பெங்களூரு சென்று அங்கு, போதை ஸ்டாம்ப், போதை மாத்திரைகள் போன்ற வித்தியாசமான போதைப்பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வந்ததாக தெரிவித்தனர்.இதையடுத்து, போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் அறையில் இருந்து, கஞ்சா, போதை மாத்திரை, போதை ஸ்டாம்ப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.வெளியில் அறை எடுத்து தங்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை கல்லுாரி நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும். மேலும் பெற்றோர் மாணவர்கள் அறைகளுக்கு சென்று பார்க்க வேண்டும். அவர்களுடன் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அல்லாதவர்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் சேர்ந்து செயல்பட்டால் தான் மாணவர்கள் மத்தியில் உள்ள போதை பொருள் பழக்கத்தை ஒழிக்க முடியும்.

போலீசாருக்கு சிரமம்

''பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் தங்களின் போதை அனுபவத்திற்காக இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும், கல்லுாரி வளாகம், மாணவர்கள் வட்டாரத்தில் போதைப்பொருட்களை விற்பனை செய்வதால் வெளியில் தெரிவதில்லை. இதனால் தான் மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் கல்லுாரிகளில், வெளியூர்களில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு கல்லுாரி விடுதிகள் கட்டாயம் ஆக்கப்பட்டால் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும்,'' என்றார் போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
நவ 01, 2024 18:05

வேடிக்கை என்னவென்றால் இதில் லஞ்சம் வாங்கி இதை அனுமதிக்கும் போலீஸ் அரசியல் வியாதிகள் நிச்சயம் இருப்பதனால் இது வெளியே வருவதில்லை. வருடத்திற்கு இந்த போதை மருந்து வியாபாரம் நம்ம டாஸ்மாக் போதை சரக்கு மாதிரி நிச்சயம் ரூ 50,000 கோடி இருக்கும்???


அப்பாவி
நவ 01, 2024 03:37

அசாம், மிசிரம், மேகாலயா பொருளாதாரம் அபார வளர்ச்சியாம். தமிழ்நாட்டில் அவிங்க பொருளுக்கு ஏக டிமாண்ட்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை