உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விசாரணையை மறைத்தாரா அதானி?: ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா செபி

விசாரணையை மறைத்தாரா அதானி?: ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா செபி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அதானி குழுமம் மீது அமெரிக்க நீதித்துறையில் விசாரணை நடப்பதை, இந்திய பங்குச்சந்தை மற்றும் முதலீட்டாளர்களிடம் தெரிவிக்காமல் மறைத்தது, இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதை தொடர்ந்து, அதானி குழுமம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

லஞ்சம்

இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்கார ரான தொழிலதிபர் கவுதம் அதானி, தன் தொழில் திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலை பெறுவதற்காக இந்திய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுத்துஉள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.இந்த தகவலை மறைத்து, அமெரிக்கர்களிடமிருந்து கணிசமான முதலீடுகளை கவுதம் அதானி திரட்டியுள்ளார். இது, தண்டனைக்குரிய குற்றம் என்று அமெரிக்க அரசு வழக்கு பதிவு செய்து உள்ளது. அதன்படி, அதானியை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் வாரன்ட் பிறப்பித்துள்ளது.அதானியின் உறவினரும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவன செயல் இயக்குநருமான சாகர் அதானி, அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது மோசடி, சதி குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன. இந்த விவகாரம் குறித்து, 'புளூம்பர்க்' ஊடகம் கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியிட்டது.

கடமை

ஆனால், 'எங்கள் நிறுவன தலைவர் மீது எவ்வித விசாரணையும் நடக்கவில்லை' என, அதானி குழுமம் மறுத்தது. அமெரிக்க நீதித்துறையிடம் இருந்து எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் அளிக்கப்பட வில்லை என்றும் தெரிவித்தது.இந்நிலையில், உள்நாட்டில் பங்கு வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய நிறுவனம் மீது அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்துவதை, பங்குச் சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் முறையாக தெரிவிக்க வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை.அவ்வாறு தெரிவிக்காதது, பங்குச்சந்தை விதிகளை மீறும் செயல். எனவே, செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, அதானி குழுமம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துஉள்ளது.

ஊழலை விசாரிக்க ஆந்திரா தயார்

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து ஆந்திரா உட்பட பல்வேறு மாநில அரசுகளும் மின்சாரம் வாங்கி உள்ளன. தற்போது, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அம்மாநில சட்டசபையில் நேற்று பேசியதாவது:அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை நகல் என்னிடம் உள்ளது. அதை முழுமையாக படித்துவிட்டு, தவறு செய்துள்ள ஆந்திர அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த 2019 - 24 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில் நடந்த ஊழல்களை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருகிறோம். அதில், இந்த ஊழல் குறித்தும் விசாரிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர்.காங்., திட்ட வட்டமாக மறுத்துள்ளது. அதானி குழுமத்துடன், மாநில அரசு நேரடி யாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை என, தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஜெய்ஹிந்த்புரம்
நவ 24, 2024 05:21

விசாரணையை மறைத்தாரா அதானி?: ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா செபி - ஹை காமெடி நல்லாருக்கே


S S
நவ 23, 2024 19:10

லஞ்சம் என்றாலே பிஜேபிக்கு அலர்ஜி ஆயிற்றே. இப்போது சிக்கலில் மாட்டியவர்கள் எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள்தானே. அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தார்கள்.


அப்பாவி
நவ 23, 2024 19:37

வாங்குனது எதிர்கட்சி மாநிலங்கள். குடுத்தது பா.ஜ வின் ஜிகிரி தோஸ்த். அணில்கள் மேலே ஏதாவது நடவடிக்கை விசாரணைன்னு வந்தா பெரியவர் இமேஜ் டேமேஜ் ஆயிரும். பொறுத்துப் பாருங்க. ஊத்தி மூடிருவாங்க. எல்லோரும் தப்பிச்சுருவாங்க. ரொம்ப நல்லவங்க.


ஆரூர் ரங்
நவ 23, 2024 10:21

போபால் விஷவாயு குற்றத்திற்காக இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய அமெரிக்க குடிமகனான ஆண்டர்சன் மீது அங்கு எந்த வழக்கும் போடவில்லை. கொல்லப்பட்டவர்கள் ஆப்டர் ஆல் அப்பாவி இந்தியர்கள்தானே? ஆனா இந்திய நிறுவனம் இந்தியாவில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிகாவில் அமெரிக்க சட்டத்துறை பொய் வழக்கு. வேறென்ன? பாரத அரசுக்கு ராஜீய நெருக்கடி தரத்தான்.


அப்பாவி
நவ 23, 2024 18:04

அமெரிக்கர்களின் பணத்தை பெறுவதற்கு இந்திய மாநில அரசுகளுக்கு லஞ்சம் குடுக்கப்பட்டது. அதுக்கும் போபாலுக்கும் முடிச்சுப் போடாதே. முடிஞ்சா அணில்கள் மேலே கை வெச்சுப்பாக்கச் சொல்லு. கை வெச்சா அவுரு மாட்டிக்குவாரு தெரியுமில்லே.


அப்பாவி
நவ 23, 2024 04:23

செபி லயும் எங்களுக்கு ஆளுங்க இருக்காங்க.


ஜான் அமேரிக்கன்
நவ 23, 2024 04:22

ஊழல் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த ஒரு ஆளுடன் அதானி நேரிலோ/மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடத்தி லஞ்சம் குடுத்து மின்சார சளை காண்டிராக்ட் வாங்கியுள்ளதாக அமெரிக்க குற்றப் பத்திரிக்கையில் சொல்லப் பட்டுள்ளது. அதனால் அந்த அணிலை மாநில ஆளும் கட்சி விழுந்து விழுந்து சப்போர்ட் செயவதும், மத்திய கட்சி அதானி மேல் உள்ள பாசத்தால் அணிலை ஒன்றும் செய்ய முடியாமல் திணறுவதையும் பார்க்க முடிகிறது.


சமீபத்திய செய்தி