உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜாதிக்கு ஒரு துணை முதல்வர்: காங்கிரசில் சலசலப்பு

ஜாதிக்கு ஒரு துணை முதல்வர்: காங்கிரசில் சலசலப்பு

பெங்களூரு : ஜாதிக்கு ஒரு துணை முதல்வர் பதவி கேட்பதால், கர்நாடகா காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக சிவகுமார் உள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு முதல்வர் மாற்றம் நடக்கும், சிவகுமார் முதல்வர் ஆவார் என்று, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும்; சித்தராமையாவே ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பார் என்று, அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களும் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.

கண்டிப்பு

ஒரு படி மேலே சென்று, சிவகுமாரை கட்டிப்போடும் வகையில், ஜாதிக்கு ஒருவருக்கு என, மூன்று பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என, சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்கள் மஹாதேவப்பா, சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா ஆகியோர், இரண்டு மாதங்களுக்கு முன்பு கொளுத்திப் போட்டனர். இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், காங்கிரஸ் மேலிடம் கண்டித்தது.

பின்பற்றவில்லை

அதன்பின்னர், அமைதியாக இருந்த அமைச்சர்கள், தற்போது மீண்டும் துணை முதல்வர் பதவி விவகாரத்தை, கையில் எடுத்துள்ளனர்.அமைச்சர் ராஜண்ணா பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும் வகையில், ஜாதிக்கு ஒருவர் என மூன்று பேருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கினால் நல்லது. இதன் மூலம் கட்சிக்கு அனுகூலம் கிடைக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து. முடிவு எடுக்க வேண்டியது மேலிடம்.சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல்களில், பா.ஜ., மூன்று இடங்களில் வென்றது. அந்த மூன்று மாநிலங்களிலும், ஜாதி அடிப்படையில் தலா 2 துணை முதல்வர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், லோக்சபா தேர்தலில் அதிக வெற்றி பெற முடியும் என்பது, பா.ஜ.,வின் கணக்கு. அவர்கள் பாணியை பின்பற்ற, நாங்கள் நினைக்கவில்லை. ஆனாலும் கர்நாடகாவிலும் கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டியது, அவசியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க, வழக்கம்போல் சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால், கர்நாடகா காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Nandakumar Naidu
ஜன 05, 2024 20:33

0 /////


DVRR
ஜன 05, 2024 16:42

ஜாதிக்கு ஒரு துணை முதல்வர்???என்ன ஒரு எருமையான செகுலர் சிந்தனை இது???. இந்த முஸ்லீம் காங்கிரஸ் கருமாதிகள் தான் சொல்வது பிஜேபி ஜாதிமதம் என்று பிரித்து பார்க்கின்றது என்று. சொரியான் இதே வழியில் தான் சென்றான் இவர்கள் இதே வழியில் செல்கின்றனர்.


அப்புசாமி
ஜன 05, 2024 16:38

ராவணனுக்கு 9 எக்ஸ்ட்ரா தலைகள் மாதிரி.இதெல்லாம் உருப்படாத தலைவலி.


Kanakala Subbudu
ஜன 05, 2024 15:13

எதுக்கு ஜாதிக்கு ஒரு துணை முதல்வர். காங்கிரஸில் இருக்கும் அத்தனை MLA வும் துணை முதல்வர் ஆக்கினால் ஜோலி முடிஞ்சுது


ஆரூர் ரங்
ஜன 05, 2024 14:47

சாதிக்கணக்கெடுப்பு நடத்தினாலும் அங்கு 500 சாதிகளும் குறைந்தது 20000 உட்பிரிவுகளும் இருப்பது தெரிய வரும். அவரவர் சதவீதத்துக்கு ஏற்றபடி ஐந்தாண்டு முதல்வர் பதவியைக் கூறு போட்டு ஒவ்வொரு உட்பிரிவுக்கும் தலா இரண்டு மணிநேரம் வாய்ப்பளிக்கலாம்????. நாள்முழுவதும் பதவியேற்பு விழான்னு ஜாலியா இருக்கும்.


duruvasar
ஜன 05, 2024 11:56

இந்த லட்சணத்தில் வெற்றிக்காக இரவு பகலாக வேலை செய்யவேண்டும் என கார்கே கூறியிருக்கிறார். நான் புரிந்துகொண்ட வகையில் காங்கிரஸ் ஒரு மன்னாரன் & கோ.


Sampath Kumar
ஜன 05, 2024 09:39

intha நிலைமை காங்கிரஸுக்கு மட்டும் இல்லை பிஜேபிக்கு வரும் அப்போ தான் தெய்ரயும் சாதி என்ற ஓன்று தான் அரசியிலில் முதுகு ஏலும்பு என்ற இனி ஏவனாவது சாதியை ஒழிப்போம் என்று சொன்னால் அவன் முட்டாள்


sankaranarayanan
ஜன 05, 2024 08:22

ஏன் கர்ணாடகாவில் இரண்டு முதல்வர்கள் தேர்ந்தெடுத்தால் என்ன குடியா முழுக்குப்போகிறது எப்படியும் ஆட்சி செய்பர்கள் தில்லி தலைமை கழக ஆட்சியாளர்கள்தான்


Ramesh Sargam
ஜன 05, 2024 08:11

பேசாம இப்படி செய்தால் என்ன "வீதிக்கு ஒருவரை முதல்வர்" ஆக்கிவிட்டால், எல்லோரும் சமாதானமாகி விடுவார்கள். எப்படி இருந்தாலும் அவர்கள் பணியெதுவும் செய்யமாட்டார்கள். அவர்களின் கீழ் பணிபுரியும் IAS அதிகாரிகள் தான் எல்லாவேலையையும் செய்யப்போகிறார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜன 05, 2024 06:56

கர்நாடகாவில் நடப்பதை பார்தால் டூபாகூர் சமூக நீதியில் விடியாத விடியலை மிஞ்சி விடுவான்கள் போல இருக்கு. எல்லாத்துக்கும் மூலம் சரியா இருக்கனும். இல்லையே


மேலும் செய்திகள்









புதிய வீடியோ