உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., - அ.தி.மு.க., மோதல் சந்திரபாபு நாயுடு மகன் பதில்

தி.மு.க., - அ.தி.மு.க., மோதல் சந்திரபாபு நாயுடு மகன் பதில்

சென்னை: உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றாக, கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, ஆந்திராவில் பெரிய அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9njyri14&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், 15 பில்லியன் டாலர் அதாவது, 1.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், கூகுள் நிறுவனம் 'ஏஐ' மையம் அமைக்க உள்ளது' என, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரி வித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார், ''அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் செய்யக்கூடிய மிகப்பெரிய முதலீடு இதுதான். ''கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். மதுரை மண்ணின் மைந்தர். உலகளாவிய அளவில், தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். அவரை அணுகி முறைப்படி அழைப்பு கொடுத்திருந்தால், தமிழகத்திற்கு இந்த மையம் வந்திருக்கும். ''தமிழகத்திற்கு வர வேண்டிய, 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை, தி.மு.க., அரசு கோட்டை விட்டது. அந்த மையம் செயல்படத் துவங்கினால், வருடத்துக்கு 10,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அந்த வாய்ப்பை, தமிழகம் பறிகொடுத்திருக்கிறது,'' என்றார். இதற்கு தி.மு.க., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்து கூறுகையில், ''மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன. ''இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதில், பா.ஜ.,-வின் அழுத்தம் உள்ளது. அதனால் தான் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு எதிராக பா.ஜ., உள்ளது,'' என்றார். கூகுள் ஏஐ மையம் குறித்து, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் நார லோகேஷ் கூறுகையில், ''சுந்தர் பிச்சை தமிழக மண்ணை பூர்வீகமாகக் கொண்ட வரா க இருக்கலாம். ஆனால், அவர் இந்தியர். ''அந்த வகையில் தான், தங்கள் நிறுவன 'ஏஐ' மையத்தை நிறுவ இந்தியாவின் அங்கமான ஆந்திர மாநிலத்தை தேர்வு செய்துள்ளார். இதில் யாரும் அரசியலை நுழைக்கக் கூடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Chandru
அக் 26, 2025 16:09

லோகேஷ் என்பவர் நரன் இளங்கோவன் என்பவன் அசுரன் . அவ்ளோதான் வித்யாசம்


C.SRIRAM
அக் 23, 2025 20:19

இதிலும் பா ஜ அழுத்தம் என்ற திருட்டு திராவிட உளறல் . ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம். துப்பில்லையென்றால் துப்புள்ளவர்க்கு வழி விட்டு அரசியலில் இருந்து விலகுவது நல்லது


S.V.Srinivasan
அக் 23, 2025 09:06

திராவிட மாடல் கும்பல் தங்கள் தவறை ஒருபொழுதும் ஒப்பு கொள்ள மாட்டார்கள். அவங்க செய்யலையா, இவங்க செய்யல்லயான்னு எதிர் மறையா பேசி தங்கள் தவறை நியாய படுத்த கூறிய இருப்பாங்க.


Haja Kuthubdeen
அக் 22, 2025 21:19

சுந்தர் பிச்சை தமிழர் என்ற காரணத்திற்காக மட்டும் அவர் விருப்பம்போல செய்துவிட முடியாது.தன் நிறுவனத்திற்கு எது உகந்தது எது லாபமானது என்பதை ஆராய்ந்தே முடிவு எடுத்து இருப்பார்.


Sun
அக் 22, 2025 17:53

நீங்களும் நாங்களும் ஒரே ஊர்தான், ஒரே வீதி தான். உங்கள் வீடும் எங்கள் வீடும் ஒரே வீதியில்தான் உள்ளது .ஆனால் சுந்தர் பிச்சை பிறந்தது எங்க வீட்டுல . அவர் பிறந்த வீட்டை விட்டுட்டு பக்கத்து வீட்டுக்கு ஏன் போனார்? என்பதுதான் கேள்வியே?


முருகன்
அக் 22, 2025 19:21

அதற்கு காரணமாக யார் இருந்தது என்பதை யோசிக்கவும் சந்திரபாபு ஆதரவு இல்லை என்றால் மத்தியில் மெஜாரிட்டி இல்லை அதுவும் காரணமாக இருக்கலாம்


ஆரூர் ரங்
அக் 22, 2025 19:56

திராவிஷ ஆட்கள் ஆரிய வந்தேறின்னு இன்னும் நாலு தடவ திட்டினா இன்னும் வடக்கே போய் முதலீடு செய்வார்.


நான்
அக் 22, 2025 22:40

திருட்டு திராவிடம், ஒரு வேளை இந்த திருட்டு திராவிடம், ப்ராஜக்ட் என்ன விலைனு கேட்டிருக்கும்.


Manian
அக் 22, 2025 08:01

The location is not a matter qualified Tamilians will be employed in good numbers


Nagercoil Suresh
அக் 22, 2025 07:28

தெலுங்கு பேசும் மக்கள் அமெரிக்காவில் அதிகம் உள்ளனர். மனிதர்கள்பணி செய்யும் எல்லா நடைமுறை டேட்டாக்களையும் பிற நாடுகளுக்கு கொடுத்துவிட்டு வரும் கால தலைமுறைகளை அமெரிக்கர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளாமல் இருந்தால் இது நல்ல திட்டம் தான். மருத்துவத்துறை மற்றும் இன் பர்மேசன் டெக்னாட்லெட்ஜ் துறைகளுக்கு மிக சவாலாக அமையும்.. யூடூப் , வாட்சாப் ஆப்புகளுக்கு மக்கள் எவ்ளவு நேரத்தை விரயம் செய்கிறார்கள் என்பதும் கவனம் கொள்ளவேண்டும். அடுத்த தலைமுறைகளிலாவது சீனாவை போல் இந்தியாவும் தன் சொந்த காலில் நிற்க முயற்சிக்க வேண்டும்..


sankaranarayanan
அக் 22, 2025 07:19

தி.மு.க., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்து கூறுகையில், மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன.இப்படியே உங்கள் இவருடைய சண்டையினால் பாதிக்கப்படுவது தமிழகம்தான் தமிழக மக்கள்தான் ஆதலால் இந்த இரு திராவிட கட்சிகளுமே ஒழிந்தால்தான் தமிழக மக்கள் நிம்மதியாக வாழ முடியும் தொழிற்சாலைகளும் பெருகும் வேலை வாய்ப்புகளும் உண்டாகும்


mohana sundaram
அக் 22, 2025 07:15

இங்கு தொழில் துவங்கினால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்பட்ட நிலைமை இவர்களுக்கும் உண்டாகும் என்று பயம். மேலும் இப்பொழுது சாம்சங் நிறுவனம் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறது இதையெல்லாம் ஆலோசித்து வெளிநாட்டு முதலீடுகள் நம் தமிழகத்திற்கு வரப்போவதில்லை. அதற்காக மத்திய அரசை குறை சொல்வது நல்லதல்ல.


அருண், சென்னை
அக் 22, 2025 06:38

கமிசன், கரப்ஷன், கலெக்ஷன்..3C s தமிழ்நாட்டில் வேலை செய்யவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை