உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 9 சீட் தர தி.மு.க., உறுதி; 12 சீட் கேட்டு பிரேமலதா பிடிவாதம்

9 சீட் தர தி.மு.க., உறுதி; 12 சீட் கேட்டு பிரேமலதா பிடிவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., கூட்டணியில் ஒன்பது 'சீட்' வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில், 12 சீட் கேட்டு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அடம் பிடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=851t90mf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் - வி.சி., - ம.தி.மு.க., - இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - ம.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளை கைப்பற்ற, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.அதே நேரம், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பலமானால், தி.மு.க.,வின் வெற்றி இலக்கு குறைய வாய்ப்புள்ளது. இதை தடுக்க முடிவு செய்த தி.மு.க., தலைமை, கூட்டணிக்குள் மேலும் சில கட்சிகளை கொண்டு வர வியூகம் வகுத்துள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க.,வை இழுக்க பேச்சு நடக்கிறது. உடல்நலக் குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் ஆகியோர் சமீபத்தில் சந்தித்தனர்.இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என தே.மு.தி.க., விளக்கம் அளித்தது. ஆனால், இந்த சந்திப்பின் போது, கூட்டணி பேச்சு நடந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு ஒன்பது தொகுதிகள் வழங்க முதல்வர் ஸ்டாலின் முன் வந்துள்ளார்.ஆனால், பிரேமலதா முதலில் 15 தொகுதிகள் கேட்டு, பின்னர் 12 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளார். கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால், அவ்வளவு தொகுதிகள் ஒதுக்க இயலாது.எனினும், உள்ளாட்சி தேர்தலில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை தருவதாக முதல்வர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், 12 தொகுதிகள் வேண்டும் என்பதில் பிரேமலதா பிடிவாதமாக இருந்ததால், அடுத்த சந்திப்பில் தொடர்ந்து பேசலாம் என கூறி, அவர்களை முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.இதற்கிடையே, சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் துவக்கிய பிரேமலதா, 'தமிழகத்தில் போதை கலாசாரம், பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன' என பட்டியல் வாசித்துள்ளார். இது, தி.மு.க., தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, தே.மு.தி.க.,வை தி.மு.க., கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்ட மூத்த அமைச்சர் ஒருவரை அழைத்து, முதல்வர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.உடனே, அந்த அமைச்சர், பிரேமலதாவை தொடர்பு கொண்டு, 'கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, சற்று அடக்கி வாசியுங்கள்' என கூறி உள்ளார்.இவ்வாறு தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Anantharaman Srinivasan
ஆக 07, 2025 00:28

பதவியும் பணமும் படகும் துடுப்பும் போல. இந்த லட்சணத்தில் மக்கள் பணியே மகேசன் பணியென்று பீத்திக்கொள்ள வேண்டியது. குடும்பம் தழைத்தால் போதும்.


கூத்தாடி வாக்கியம்
ஆக 06, 2025 10:54

நீ இந்த 12 தொகுதி கேட்டு என்னா பண்ண போர. இப்போ இந்த காங்கரஸ் மற்றும் கூட்டணி என்னா பன்னுச்சோ ஆத பண்ணலேன்னா என்னா


Mani . V
ஆக 06, 2025 04:05

கேப்டன் பாடுபட்டு உருவாக்கிய கட்சியை நிர்மூலம் ஆக்கிய பெருமை பிரேமலதாவையும், சுதீசையும் சேரும்.


ரங்ஸ்
ஆக 06, 2025 03:45

தேமுதிக கொள்கை காற்றில் பறக்கிறது. எதற்காக கட்சி தொடங்கப் போட்டது? தொண்டர்களுக்கு குழப்பம்


Suresh Sampath
ஆக 06, 2025 00:02

திரு. விஜயகாந்த் தி. மு. க. கூட்டணியை ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். இது விஜயகாந்திற்கு செய்யும் துரோகம். தன்னுடைய கல்யாண மண்டபத்தை இடித்த தி. மு. க. உடன் கூட்டணியா? கேவலம்.


Suresh Sampath
ஆக 06, 2025 00:03

திரு. விஜயகாந்த் தி. மு. க. கூட்டணியை ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். இது விஜயகாந்திற்கு செய்யும் துரோகம். தன்னுடைய கல்யாண மண்டபத்தை இடித்த தி. மு. க. உடன் கூட்டணியா? கேவலம். s://www.youtube.com/shorts/5Fp-xIRqXzs s://timesofindia.indiatimes.com/city/salem/dmk-is-doing-politics-with-neet-premalatha-vijayakanth/articleshow/121322398.cms Demolition of Andal Alagar Thirumana Mandapam: A major portion of Vijayakanths marriage hall Andal Alagar Thirumana Mandapam, which also served as the headquarters of his party DMDK, was demolished during the DMK regime for the construction of a flyover near Koyambedu, Chennai. This incident is considered one of the reasons that fueled Vijayakanths animosity towards the DMK and prevented a potential alliance between the two parties.


Venkatesh
ஆக 05, 2025 22:17

12 சீட்டு உருட்டு மாடல் கொடுத்தால் , மாடல் தலைவன் நல்லவராக மாறி விடுவாரா என்பதை தேமுதிக கட்சியின் ஓனர் தெளிவு படுத்த வேண்டும்


Bala
ஆக 05, 2025 20:44

Intha Lady um ithukka thampi um thaan Captaion ku Yeman ah irunthathu . Greedy lady iva


Easwar Kamal
ஆக 05, 2025 18:49

இவரும் இவரின் தம்பியும் சேர்ந்துதான் விஜயகாந்தை காலி பண்ணினது. இப்போ 9–10 சீட்டுகள் கொடுப்பானுங்க.கொடுத்ததில் 5 ஜெயித்தால் அந்த 5–ஐ அப்படியே தங்கள் பக்கம் இழுத்து கொள்வானுங்க.பேராசை பிடித்த இவர்களை, இந்த திமுக மொத்தமாக அழித்து விடும்.


Muthu Krishnan
ஆக 05, 2025 18:07

வேண்டும் தேமுதிக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை