உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., நெருக்கடி: பணிந்தார் திருமா

தி.மு.க., நெருக்கடி: பணிந்தார் திருமா

வரும் டிச., 6ல் சென்னையில் நடக்க திட்டமிட்டிருக்கும் அம்பேத்கர் தொடர்புடைய புத்தக வெளியீட்டு விழாவில் வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவனும், த.வெ.க., தலைவர் நடிகர் விஜயும் கலந்து கொள்வர் என்ற தகவல் பரவியது.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்ய வந்திருக்கும் நடிகர் விஜயோடு, எப்படி ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக கேள்வி எழுப்பினர்.

பெரும் பங்கு

இந்நிலையில், நேற்று திருச்சியில் பேட்டி அளித்த திருமாவளவன், 'தி.மு.க., கூட்டணியில் தான் தொடருகிறோம்' என அடித்துக் கூறியிருக்கிறார். ஆனால், டிச., 6 நிகழ்ச்சி குறித்து, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்தப் பேட்டிக்குப் பின், இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், 'தி.மு.க., நெருக்கடிக்குப் பணிந்தே, திருமாவளவன் இப்படி கூறியிருக்கிறார்' என கருத்துச் சொல்லி உள்ளனர்.திருமாவளவன் அளித்த பேட்டி: கடந்த ஏழு ஆண்டுகளாக தி.மு.க., தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம்; வெற்றிகரமாக இயங்கி வருகிறோம். அகில இந்திய அளவில், 'இண்டியா' கூட்டணியிலும் இடம் பெற்று இருக்கிறோம். இந்த கூட்டணியை உருவாக்கியதில் வி.சி., கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. எனவே, நாங்களும் இணைந்து உருவாக்கிய இந்த கூட்டணியை வலுப்படுத்தி, அதை முன்னெடுத்து செல்வதில் தான் எங்கள் கவனம் உள்ளது. இந்த கூட்டணியை விட்டு, வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.வி.சி., கட்சி மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். இதனால், வி.சி.,க்கள் மீதான நம்பகத்தன்மை குறைகிறது. எங்களுக்கு எப்போதும் ஊசலாட்டம் இருந்ததில்லை. வரும், 2026 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தான் வி.சி., இடம்பெறும். இதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில, இனி யாரும் என்னிடம் கேள்விகள் கேட்கக் கூடாது.அம்பேத்கர் தொடர்புடைய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது தொடர்பாக ஓராண்டுக்கு முன் பேசினர். அதில் கலந்து கொள்வது என முடிவெடுத்தோம். அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்., 14ல் முதல்வர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிடுவார் என்று சொல்லி இருந்தனர். ராகுலையும் அழைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சொன்னார்கள்.

கலந்து பேசுவோம்

புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என என்னிடமும் கட்டுரை கேட்டிருந்தனர். 40 தலைவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. ஏப்., 14ல் நடக்க வேண்டிய வெளியீட்டு விழா தள்ளிப்போனது. அதன்பின் த.வெ.க., மாநாடு நடைபெறும் முன், நடிகர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது, அவர் நிச்சயம் நிகழ்ச்சிக்கு வருவார் என்றும் தெரிவித்தனர். நடிகர் ரஜினி பங்கேற்பதாகவும் கூறினர்.தற்போது புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகி இருக்கும் சூழலில், நிகழ்வில் வி.சி.,க்கள் பங்கேற்பது குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு அரண் திராவிடம்!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் பஞ்சமி நிலங்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மீண்டும் இயங்க வேண்டும் என்று தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கட்சியின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் கட்சியில், 234 தொகுதிகளிலும் மாவட்டச் செயலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். தொகுதிக்கு, இரண்டு மாவட்டச் செயலர்கள், இரு தாலுகாவுக்கு மாவட்டச் செயலர் என, 144 மாவட்ட செயலர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியை பலப்படுத்த, நுண்ணிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதால், கட்சி நிர்வாகத்துக்கென ஏராளமான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிராக பேசப்பட்ட ஒரு அரசியல். நுாறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மண்ணில் இந்த கருத்தியல் பேசப்பட்டிருக்கிறது. தமிழ் தேசியம் என்பது, திராவிடம் என்ற கருத்தியலில் இருந்து வளர்ச்சி அடைந்திருக்கிறது. திராவிடம் என்ற கருத்தியல் இல்லையென்றால், எப்போதோ சனாதனம் நம்மை விழுங்கி இருக்கும். ஹிந்தியும், சமஸ்ஹிருதமும் தமிழை விழுங்கியிருக்கும். தமிழ் பேசும் தமிழரினம் இருக்கிறது என்றால், அதற்கு பாதுகாப்பு அரணாக இருப்பது திராவிடம் என்ற கருத்தியல் தான்.

பாதுகாப்பு அரண் திராவிடம்!

- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Subash BV
நவ 07, 2024 13:50

TAMILS, THINK SERIOUSLY.


sundaran manogaran
நவ 06, 2024 23:14

விலைவாசி உயர்வு காரணமாக சூட்கேஸ் கனமாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை தி.மு.க ஏற்றுக்கொண்டு இருக்கும்.


Ahamed Rafiq
நவ 06, 2024 17:26

விஜய் திமுக வை எதிர்ப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி 2026 தேர்தலில் விஜய் க்கு என்னுடைய ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். Ahamad


lakshmikanthan S.B
நவ 06, 2024 16:44

திருமாவிற்கு 300 ஸ்வீட் பாக்ஸ் வந்ததாக கேள்விப்பட்டேன்.


Ms Mahadevan Mahadevan
நவ 06, 2024 15:40

சும்மா அஸ்டியன் திராவிடன் என்று இன்றைய வாழ்கைக்கு சற்றும் பயன் தராத - பழங்கதை, போலி கருத்து - சொல்லி நேரத்தை வீணடிக்காமல் உருப்படியா எதையாவது செய்ய பாருங்கள்


R.MURALIKRISHNAN
நவ 06, 2024 13:08

கருத்தியல் முக்கியமல்ல, கமிஸ்ஸன் தான் முக்கியம்.பிளாஸ்டிக் சேர் கூட வேணாம்பா - திருமா மைண்ட் வாய்ஸ்


theruvasagan
நவ 06, 2024 11:42

இங்க காலம் பூரா ஒடஞ்ச பிளாஸ்டிக் சேர்தான். எங்ககியாவது ஒரு நல்ல நாற்காலிய பார்த்தா உட்காரணும்னு நப்பாசை வராதா. அதுக்குதான் கர்சீப் போட்டு வைக்கிறது.


theruvasagan
நவ 06, 2024 11:33

பாரதத்தில் ஆயிரக்கணக்கான வருடங்களாக தமிழும் சமஸ்கிருதமும் உள்ளன. மற்ற எண்ணடங்காத மொழிகளும் பிராந்திய உள்ளன. இதுநாள் வரை ஒரு மொழியால் இன்னொரு மொழி அழிந்ததாக தகவல் உண்டா. சொல்லப்போனால் ஆங்கிலத்தின் தாக்கத்தால்தான் பிற மொழிகளின் தனித்தன்மையில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வேற்று மொழிகளை மதிக்காத கற்க துப்பில்லாத தற்குறிகள்தான் மொழிப்பிரச்சனை கிளப்பி குளிர் காய்வார்கள்.


SRIDHAAR.R
நவ 06, 2024 14:13

சரியாக சொன்னீர்கள் அய்யா


Kanns
நவ 06, 2024 10:41

Opportunists& Violent Arsonists inclArmstrong Murder Lives in Fools Paradise Greedy despite getting BlackMoney Suitcases &SeatsShameful Vote Politics


வைகுண்டேஸ்வரன்
நவ 06, 2024 09:08

திமுக நெருக்கடி அல்ல. திருமா வின் கட்சிக்காரர்கள் குடுத்த நெருக்கடி தான் காரணம். 3 வருடம் முன்னாடி கட்சியில் சேர்ந்தவனுக்கு பதவி குடுத்து, அவன் வாய்க்கு வந்ததையெல்லாம் உளற வைத்து, thiruma 4 காசு பண்ணப் பார்த்தார். கட்சிக்காரர்களே ஆப்பு அடிச்சானுங்க. ஆதவ் அர்ஜுனை கட்சியை விட்டு துரத்தி விட்டால்தான் கட்சி உருப்படும்.


புதிய வீடியோ