உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தி.மு.க., கூட்டணியா த.வெ.க., கூட்டணியா? வரும் 15ல் காங்., மேலிடம் ஆலோசனை

 தி.மு.க., கூட்டணியா த.வெ.க., கூட்டணியா? வரும் 15ல் காங்., மேலிடம் ஆலோசனை

தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து, தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் 20 பேரிடம், நாளை மறுதினம், டில்லி மேலிட தலைவர்கள் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளனர்.த.வெ.க., தலைவர் விஜயை, சென்னையில் அவரது வீட்டில், அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=goqwxyyf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராகுல் துாதராக சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தியிடம், 'எங்கள் கொள்கைக்கு ஏதுவாக இருக்கும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார். எங்களுடன் கூட்டணி அமைத்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம்' என விஜய் கூறியுள்ளார். இதற்கிடையில், தமிழக காங்கிரசில் உள்ள தி.மு.க., ஆதரவு கோஷ்டியினர், பிரவீன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், கட்சி மேலிடம் கண்டுகொள்ளவில்லை. அதோடு, விஜயை சந்தித்து பேசியது குறித்து பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் அளித்தார். தமிழக காங்கிரசில் கூட்டணி விஷயத்தை பொறுத்தவரை, 'தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும்' என ஒரு கோஷ்டியும், 'விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும்' என மற்றொரு கோஷ்டியும் விரும்புகின்றன. இதனால், யாருடைய முடிவை ஏற்பது என்ற குழப்பம் மேலிடத்திற்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், காங்., கட்சியில் தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரிடம், 'ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் தந்தால், தி.மு.க., அணியில் நீடிக்கலாம்; இல்லையென்றால், த.வெ.க., அணியில் இணையலாம். தி.மு.க.,வுடன் இணைந்திருந்தால், காங்கிரஸ் வளர்ச்சி பெறாது' என தமிழக காங்., நிர்வாகிகள் சிலர் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில், டில்லியில் நாளை, ஓட்டு திருட்டை கண்டித்து, காங்., - எம்.பி., ராகுல் தலைமையில் பேரணி நடக்கிறது. அதில், தமிழக காங்., சார்பில், 1,000 பேர் பங்கேற்கின்றனர். நாளை மறுதினம், கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தும் ஐவர் குழுவினர், தமிழக காங்., முன்னாள் தலைவர்கள், எம்.பி.,க்கள் மற்றும் முன்னணி தலைவர்கள் என, மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர். அவர்களிடம் தனித்தனியாக கருத்து கேட்க, டில்லி மேலிட தலைவர்கள் திட்ட மிட்டுள்ளனர். அந்த கூட்டத்தில், 'தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா?' என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

bharathi
டிச 13, 2025 17:23

Let them ally with any useless and be defeated by TN voters. DMK...ADMK...TVK all same


Santhakumar Srinivasalu
டிச 13, 2025 14:16

காங். எங்க கூட்டணி வைத்தாலும் அந்த கட்சி முடிந்தது. உம். பீகார் மற்றும் டெல்லி!


பாலாஜி
டிச 13, 2025 13:18

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து 2026 தமிழக தேர்தலில் இரு கட்சிகளும் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்.


Venugopal, S
டிச 13, 2025 12:57

மத்தியில் அவனுக்கு இவன் அடிமை. மாநிலத்தில் இவனுக்கு அவன் அடிமை. ஒருத்தனை விட்டு ஒருத்தன் போகவே மாட்டான்


JAYACHANDRAN RAMAKRISHNAN
டிச 13, 2025 11:03

காங்கிரஸ் கட்சி அதன் தற்போதைய நிலையை எண்ணி பாருங்கள். ஒரு தேசிய கட்சி சுதந்திரத்திற்கு போராடியது என்று சொல்லி கொள்ளும் கட்சி 60 வருடங்கள் இந்திய தேசத்தை ஆண்ட கட்சி இன்றைக்கு யாருக்கு அடிமையாக இருக்கலாம் என்று யோசித்து கொண்டு உள்ளது.


duruvasar
டிச 13, 2025 11:02

திருடர்கள் கும்பல்கள் , ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. இது உறுதி. கூடும் நட்பு தோதாய் முடியும் என்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எண்ணம்


Gnana Subramani
டிச 13, 2025 10:55

எந்த காலத்தில் தேசிய கட்சிகள் மாநிலங்களை கேட்டு முடிவு எடுத்து உள்ளன. திடீரென்று டெல்லியில் இருந்து உத்தரவு வரும். உடனே மாநிலத்தில் இருப்பவர்கள் கேட்டுக் கொள்வார்கள். இந்த விஷயத்தில் காங்கிரஸ் & பிஜேபி இரண்டும் ஒரே விதம் தான்


Haja Kuthubdeen
டிச 13, 2025 10:36

என்ன நடந்தாலும் காங்கிரஸ் தற்சமயம் திமுக கூட்டணியை விட்டு விலகவே விலகாது.தொகுதிகள்..ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விசயத்தோடு நிறுத்திக் கொள்ளும்.அதிக தொகுதிகள் டிமான்ட் செய்வதற்காகவே விஜயை காங்கிரஸ் பயன்படுத்த பார்க்கிறது.விஜய் அரசியல்வாதி என்றால் அவருக்கு புரியும்.அவர் நடிகராச்சே...அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் ஒரு மண்ணும் தெரியாது.


ஆரூர் ரங்
டிச 13, 2025 09:16

எரியும் நெருப்பா? கொதிக்கும் எண்ணையா?. இரண்டில் எதில் குதித்தால் கரையேறலாம்?.


SIVA
டிச 13, 2025 08:28

காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என்று விஜய் அவர்களுக்கு கிளைமாக்ஸ் தான் .....


மேலும் செய்திகள்













புதிய வீடியோ