உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுரை மேயரை தேர்வு செய்ய முடியாத தி.மு.க.,

மதுரை மேயரை தேர்வு செய்ய முடியாத தி.மு.க.,

மதுரை மக்களின் பிரச்னைகளை சட்டசபையில் பேசினால், அமைச்சர் மூர்த்தி சிரித்துக் கொண்டிருந்தார். தி.மு.க., மீது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருப்பதால் மூர்த்தியை முற்றுகையிடுகின்றனர். மதுரை மாநகராட்சியில், 69 கவுன்சிலர்களை வைத்துள்ள தி.மு.க.,வால் புதிய மேயரை தேர்வு செய்ய முடியவில்லை. தி.மு.க., கவுன்சிலர்களின் கலக் ஷன், கரப்ஷனே காரணம். புதிய மேயர், மண்டலத் தலைவர்களை தேர்வு செய்ய முடியாதது மதுரைக்கு ஏற்பட்ட சோதனை. அ.தி.மு.க.,வை யாரும் அடிமைப்படுத்த முடியாது. திருமாவளவனால், அவரது கட்சியினரையே ஒருமுகப்படுத்த முடியவில்லை; அவரே மாற்றி மாற்றி பேசுகிறார். அரசியல் அடையாளத்துக்காக, ஏதாவது பேசிக் கொண்டு இருக்கும் தினகரனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. விஜயின் த.வெ.க.,வை, தி.மு.க., வளர விடாது. தி.மு.க.,வுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும். - செல்லுார் ராஜு முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vasan
அக் 28, 2025 18:03

ஐயா, கன மழையை எதிர்பார்த்து சென்னை செம்பரம்பாக்கம் போன்ற நீர்த்தேக்க ஏரிகளை திறந்து நீரை கடலுக்கே திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை பெய்யவில்லை. நாளை முதல் வெயில் அடிக்க போகிறது. இந்த நீர் நிலைகளில், வெய்யிலினால் நீர் ஆவியாக மாறாமலிருக்க, அறிவியல் பூர்வமாக ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்.


A.Gomathinayagam
அக் 28, 2025 14:09

துணை மேயர் நன்றாக நிர்வாகம் செய்வதால் இப்போதைக்கு மேயர் தேவை இல்லை என்று விட்டு விட்டார்கள் போலும்


ராமகிருஷ்ணன்
அக் 28, 2025 09:32

பங்கு பிரிப்பதில் தகறாரு அதான்


பிரேம்ஜி
அக் 28, 2025 07:31

உன் கட்சி வரும் தேர்தலில் ஜெயிக்குமா? நீ டெபாசிட் வாங்க முடியுமா? அதைப் பாரு முதலில்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை