உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் கோவை இளைஞர்களுக்கு தொடர்பா?

ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் கோவை இளைஞர்களுக்கு தொடர்பா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துடன் கோவை இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளதா என, தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.தமிழகத்தில், தடை செய்யப்பட்டுள்ள ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஜனவரி, 28 அன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்த அப்துல் பாசித் என்பவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில், அவர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் இருந்து கொண்டே ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்க, பல மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களை, மூளைச்சலவை செய்ததும் தெரிந்தது.இதற்காக அவர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு, பலமுறை வந்து சென்றதும், இங்கு சில நாட்கள் தங்கியிருந்து, இங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களை, பயங்கரவாத இயக்கத்தில் சேர, மூளைச்சலவை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கோவைக்கு பாசித் எப்போது வந்தார்; எங்கு தங்கியிருந்தார்; யார் யாரை சந்தித்து பேசினார் என்பது குறித்த விபரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சிந்தனை
பிப் 05, 2025 16:43

2035..., கொள்ளையடிக்க வந்தவர்களுக்குதான் நாடு சொந்தமாம்... ஹிந்துக்கள் paraதேசிகளா கிளம்பணுமாம் சீக்கிரமா... எங்கேயாவது.... பொம்பளைங்களை விட்டுட்டு... மசூதியில பாங்கு அறிவிச்சிடுச்சு.... ஓடுடா... ஓடு... எங்கனாலும்.... திருடர் முன்னேற்ற கழகத்தினர் பெண்களை சொத்துக்களை ஒப்படைத்துவிட்டு சுன்னத் செய்துகொண்டு அடிமைகளாக வாழ சம்மதம் தெரிவித்தனர். சங்கிகள் குடும்பத்துடன் தப்பித்து உ.பி. மாநிலத்தில் தஞ்சம் புகுந்தனர்...


Siva Balan
பிப் 05, 2025 13:51

தத்திகளுக்கும் கண்டிப்பாக தொடர்பிருக்கும். அவர்களையும் விசாரிக்க வேண்டும்.


ஆரூர் ரங்
பிப் 05, 2025 10:53

தீயமுக வுக்கும் தொடர்பிருக்கலாம். பயங்கரவாதி பாஷா இறுதி ஊர்வலத்தை அட்டகாசமாக நடத்தி அஞ்சலி செலுத்திய கயவர்கள்.


subramanian
பிப் 05, 2025 10:07

ஸ்டாலின் காவல்துறையை முடக்கி வைத்து உள்ளார். ஒன்று காவல்துறையை தற்காலிகமாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும், ராணுவத்தை அனுப்பி மொத்த தமிழகத்தை சல்லடை போட்டு தீவிரவாதிகளை கைது செய்ய வேண்டும். அல்லது திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.


subramanian
பிப் 05, 2025 10:02

இஸ்லாமிய தீவிரவாதம் உலகிற்கும் முஸ்லிம் மக்களுக்கும் தீமை.


பேசும் தமிழன்
பிப் 05, 2025 08:02

தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ள யாரும் இந்த நாட்டுக்கு தேவையில்லை. அவர்கள் தேவையில்லாத ஆணிகள்.. அவர்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது. அதனால் வீணாக பிரியாணி செலவு செய்யாமல்.. சுட்டு கொன்று விடுவதே நாட்டுக்கு நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை