உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., அரசை விமர்சிக்காதீர்: வி.சி., தலைமை அறிவுறுத்தல்

தி.மு.க., அரசை விமர்சிக்காதீர்: வி.சி., தலைமை அறிவுறுத்தல்

'தி.மு.க.,வுடன் கூட்டணி தொடர்வதால், ஆட்சியை விமர்சித்து கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டாம்' என, வி.சி., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, அதன் தலைமை அறிவுறுத்தி உள்ளது.

கடும் அதிருப்தி

தி.மு.க., - வி.சி., இடையிலான கூட்டணி, ஏழு ஆண்டுகளை கடந்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற வி.சி., இரண்டு எம்.பி., நான்கு எம்.எல்.ஏ.,க்களை பெற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. அதேநேரம், மாநிலத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்தபின், 160க்கும் மேற்பட்ட வி.சி., கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.புதிதாக கொடிக் கம்பங்கள் அமைக்க, போராட வேண்டியுள்ளது. இவை, வி.சி., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே, தி.மு.க., அரசின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. அதேபோல், வேங்கை வயல் விவகாரத்தில், ஆளும் தி.மு.க., அரசின் மீது, வி.சி., கட்சியினர் இடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர், சமூக வலைதளங்கள் வாயிலாக, தி.மு.க., அரசின் நிலைப்பாட்டை விமர்சித்து வருகின்றனர்.முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை, வி.சி., தொண்டர்கள் விமர்சிப்பது, அக்கட்சி தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் முகநுால் நேரலையில், கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், “கட்சி வளர்ச்சி அடையும்போது, முன்னணி தலைவர்கள் இடையே முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். கட்சிக்கும், தலைமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பகிர்வது, வேதனையாக உள்ளது.''இதனால், பல்வேறு நெருக்கடிகள் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன், கட்சி முன்னணி நிர்வாகிகளின் அணுகுமுறையாலும் காயப்பட வேண்டியிருக்கிறது,” என்றார்.இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதால், அரசின் செயல்பாடுகளையும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரையும் விமர்சிக்க வேண்டாம். அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, வி.சி., தலைமை அறிவுறுத்தி உள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து, வி.சி.,நிர்வாகிகள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணியில் தான், வி.சி., இடம்பெற உள்ளது. அரசின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், மதவாத சக்திகளும் கூட்டணி பலத்துடன் வருவதால், எங்கள் கூட்டணியை பலப்படுத்துவது அவசியம். எனவே, கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்காத வகையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. மீறி செயல்படுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டணி ஆட்சி வலியுறுத்தல்; திருமாவளவன் பின்வாங்கல்

சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி; மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை, பார்லிமென்டில் எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பில், பார்லி.,யில் எங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்வோம். வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா, சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும், மிகப்பெரிய தாக்குதலாக அமையும். சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை, பா.ஜ., நிறைவேற்றி வருகிறது.தமிழகத்தில் வரும் 2026ல், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். அதற்கெல்லாம் தமிழகத்தில் வாய்ப்பே இல்லை. அ.தி.மு.க.,- பா.ஜ., கட்சிகள் இணைந்து, இதுவரை ஒரு அணியை அமைக்க முடியவில்லை.புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜயும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., கட்சிகள் தங்களை தமிழகத்தின் பிரதான கட்சிகள் எனக் கூறிக் கொள்கின்றன. அக்கட்சிகளுக்கு இடையே, இரண்டாம் இடம் யாருக்கு என்றுதான், தமிழகத்தில் போட்டி நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என, அமித் ஷா கூறுவது நகைச்சுவையாக உள்ளது.தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை. அதற்கு நீண்ட காலம் உள்ளது. ஒருவேளை திராவிட கட்சிகளான, அ.தி.மு.க.,- தி.மு.க., பலவீனப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அந்த சூழலில் மட்டுமே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு உருவாகும். மற்ற கட்சிகளின் தொடர் கோரிக்கை வலுப்பெறும்.தமிழகத்தில் என்றைக்குமே பா.ஜ., - அ.திமு.க., கூட்டணி பொருந்தா கூட்டணி தான். தி.மு.க., கூட்டணியில் கட்சிகளுக்கு இடையிலான நடவடிக்கைகளில், முரண்பாடுகள் இருக்கலாம். அவ்வப்போது கருத்து உரசல்கள் ஏற்படலாம். ஆனால், அடிப்படையான கொள்கைகளில், அனைவருக்கும் ஒருமித்த பார்வை இருக்கிறது, ஒரே நேர்கோட்டில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

kumarkv
ஏப் 03, 2025 12:20

விமர்சிக்க வேண்டாம். அது தானாகவே நாசமாய் போகும்


அப்பாவி
ஏப் 02, 2025 22:14

வேங்கைவயல் ஆளுங்களைப் புடிச்சிட்டாங்கல்ல. இனிமே அடக்கி வாசிச்சு ரெண்டு தொகுதிகளை வாங்கிற வேண்டியதுதான்.


Minimole P C
ஏப் 02, 2025 19:11

Which job fits Kuruma? It is a slave job or acting infront of people.


krishna
ஏப் 02, 2025 16:56

INDHA KEVALA POZHAPPUKKU ROADLA PICHAI EDUKKALAAM.


Balamurugan
ஏப் 02, 2025 15:37

தாழ்த்தப்பட்டவர்களுக்காக கட்சி நடத்துகிறேன் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுபடவைக்கவே கட்சி ஆரம்பித்தேன் என்று ஆசனம் எல்லாம் பேசிய குருமாவே இன்னும் அடிமை மனப்போக்கிலிருந்து வெளிவரவில்லை.


Balamurugan
ஏப் 02, 2025 15:34

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு ? சுயநலம் விரும்பும் கோழைக்கு அரசியல் ஆட்சி எதுக்கு?


Muralidharan S
ஏப் 02, 2025 13:42

இரண்டு சீட்டு வாங்கறதுக்குள்ளே நுரை தள்ளுது.. நீங்க பாட்டுக்கு ஏதாவது பேசீடாதீங்க கண்ணுங்களா.. நம்ப கூட்டணியில் இருந்து கழட்டி உட்டுட்டாங்கன்னா, கட்சி அங்கீகாரமே இல்லாமப்போய் லெட்டெர்பேடு கட்சியாயிடுவோம் ... திரும்பவும் லோக்கல் கட்ட பஞ்சாயத்துக்கு - 5க்கும் 10க்கும் அலைய வேண்டியதாய் ஆயிடும்.. இரண்டாம் இடத்துக்குத்தான் பாஜக, த.வே.க, அதிமுக போட்டிnnu சொல்லி எஜமானனை குஷிப்படுத்துங்க..


மோகனசுந்தரம் லண்டன்
ஏப் 02, 2025 12:34

அடங்க மறு அத்துமீறு என்பதெல்லாம் வெளி வேஷம் தானா?


எவர்கிங்
ஏப் 02, 2025 12:10

ப்ளாஸ்டிக் சேர் போதும், மாமன்னர் சொல்லிட்டாரு அவசியம் கேளுங்க


nv
ஏப் 02, 2025 11:31

அடங்க மறு எல்லாம் வெறும் வாய் சவடால் மட்டுமே!! கவனம் மக்களே


சமீபத்திய செய்தி