உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., சாராய சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி: பிரகலாத் ஜோஷி

தி.மு.க., சாராய சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி: பிரகலாத் ஜோஷி

கோவை: ''தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க., சாராய சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார். பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, 'மோடியின் தொழில் மகள்' நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. அதில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்றார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: கடந்த 2014ல், 23 சதவீதம் பெண்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர். தற்போது, பா.ஜ., ஆட்சி காலத்தில், 42 சதவீதம் பெண்கள் தனியார், அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், 73 சதவீதம் பெண்களுக்கு, 4 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. தமிழகத்தில், 90 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க., அரசு முறையாக செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சாராயம் குடித்து, ஏராளமானோர் உயிரிழந்தனர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., சாராய சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, “தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்றனர். ஆனால், 'டாஸ்மாக்' கடைகளால், பெண்களின் குங்குமம் அழிந்து கொண்டிருக்கிறது. விரைவில் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்,'' என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர் நாகேந் திரன் அளித்த பேட்டியில், ''த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்துக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிப்பது தவறு. விஜய் கூறுவது போல், மோடி ஆட்சியில் ஒரு தமிழக மீனவர்கூட சுட்டுக்கொல்லப்படவில்லை,'' தெரிவித்தார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Padmasridharan
செப் 22, 2025 20:03

லஞ்சம் கேட்கும் அதிகார பிச்சைக்கார பயங்கரவாதிகளை ஒழிப்பார்களா சாமி. .


Oviya Vijay
செப் 21, 2025 22:57

யாராவது இவங்களுக்கு சொல்லுங்களேன் பா... இவங்க ஜெயிக்கப் போறதில்ல அப்படின்னு... கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழ்நாட்டுல எப்புட்றா அப்படின்னு ஒரு குழந்தை சொல்ற மாதிரி ஒரு மீம்ஸ் பிரபலம் ஆச்சு... 2026 தேர்தல் ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் எல்லா சங்கிகளும் எப்புட்றா அப்படின்னு அதிர்ச்சி அடஞ்சு பேதி புடுங்கப் போகுது... ஏதோ ஜெயிச்சு ஆட்சியில உக்கார்ற மாதிரி ஒவ்வொருத்தரும் கனவுல மிதந்துகிட்டு இருக்காங்க... இதயங்கள் பத்திரம்...


nisar ahmad
செப் 21, 2025 22:54

ஓட்டுத்திருடி பிரதமர் மற்றும் ஓட்டுத்திருடி ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்


முருகன்
செப் 21, 2025 22:25

முதலில் நாட்டில் மது விலக்கை அமல்படுத்த முடியுமா உங்களால்


N S
செப் 21, 2025 20:34

அருமையான எதிர்பார்ப்பு. ஏழு தலைமுறைக்கு சேர்த்தாச்சு. முற்று புள்ளியாவது, முடிவாவதா? வேற ஏதாவது கதை சொல்லுங்க.


பெரிய குத்தூசி
செப் 21, 2025 19:46

டெல்லி தலைவர்கள் ஆகட்டும் தமிழக தலைவர்கள் ஆகட்டும், திமுக வை பற்றி தெரியாமல் பேய் கதை சொல்லிக்கொண்டு உள்ளனர், தமிழகத்தை பற்றி தெரியாமல் அமித்ஷா, மோடியும் நறிவிடும் கதை அரசியல் கதைகளை கூறிவருகிறார். திமுகவை அரசியல் வழி அல்லாமல் திமுக பாணியிலே அழிக்க மட்டுமே முடியும். பாகிஸ்தானை அமெரிக்காவுக்கு நமது ராணுவம் தண்ணி காண்பிக்கிறது, திமுகவிடம் மத்திய அரசு அரசியல் ரீதியாக வெல்ல கனவு காண்கிறது. வலுவான நிர்வாகியான மோடி அவர்களால் திமுக வை ஒன்றும் செய்யமுடியவில்லை. அவருக்கு பின் திமுகவை வைத்து செய்ய இந்தியாவில் வேறு தலைவர்கள் இதுவரை உருவாக இல்லை. மத்திய அரசே ,தமிழக அரசியல் சிந்தனையை மாற்றி வேறு விதமாக திமுக பாணியிலே யோசித்து திமுக விடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்.


என்றும் இந்தியன்
செப் 21, 2025 18:36

தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க., சாராய சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும், என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.????ஒருக்காலும் இது நடக்கவே நடக்காது.


திகழ் ஓவியன்
செப் 21, 2025 14:00

அதானே பார்த்தேன்...பிஜேபி நியூஸ் வந்தால் எல்லா 200rs ரோபோக்களும் வன்ம கருத்து சொல்ல வந்திடுமே...


Venugopal S
செப் 21, 2025 13:29

விஜய் கட்சி, சீமான் கட்சியைக் கூட நம்பலாம், ஆனால் இந்த பொய் பித்தலாட்டக் கட்சி பாஜகவை மட்டும் என்றுமே நம்பக்கூடாது!


Sridhar
செப் 21, 2025 13:29

மத்திய திட்டங்களை பத்தி பேசும்போது குறைந்த பட்சம் தமிழ்நாட்டிலே எந்த இடங்களில் வீடுகள் கட்டப்பட்டது, யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது, குடிநீர் வசதிகள் எங்கு கொடுக்கப்பட்டன என்ற விவரங்களை சேகரித்து கொஞ்சம் ஆதாரவப்பூர்வமாக பேசினாலாவது ஏதேனும் கொஞ்சம் ஈடுபடும். பொத்தம்பொதுவா பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் 42% லிருந்து 73% ஆக உயர்ந்ததுனு சொன்னா எங்கே யாருக்குங்கற கேள்வி எழும். கூட்டத்துல பயனாளிகள் ஒருவரும் இல்லேன்னா, அவுங்களும் சும்மா அரசியல் பேச்சுனு கடந்து போயிட்டே இருப்பாங்க. அட் லீஸ்ட் அந்த பகுதியை சேர்ந்த கட்சிக்காரர்களாவது சம்பந்தபட்ட தரவுகளை எடுத்து பேசுபவரிடம் கொடுக்கணும். மேலயும் எம்டி கிளயும் எம்டி சரியான ஜோடியா இருக்கானுங்க. சாதாரணமா திருட்டு திராவிட கட்சிகள் செய்யாததை செய்ததா சொல்லுவாங்க. இவனுங்க செஞ்சதைக்கூட ஒழுங்கா எடுத்துச்சொல்ல கூறுகெட்டவனுங்களா இருக்கானுங்க. இதுல சாராய சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பானுங்களாம். டாஸ்மாக்குல ஒருநாள் சரக்கு ஸ்டாக் இல்லேன்னா தமிழ்நாடே நேபாள் ஆகிவிடும்னு இவிங்களுக்கு தெரியல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை