உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரத்யேக பாதை அமைத்து கிராவல் மண் வெட்டி கடத்தல்

பிரத்யேக பாதை அமைத்து கிராவல் மண் வெட்டி கடத்தல்

பல்லடம் : பல்லடம் அருகே பிரத்யேக வழித்தடம் அமைத்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, அனுப்பட்டி, புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட எல்லை பகுதிகளில், கனிம வள கடத்தல் ஜோராக நடந்து வருகிறது. ஆள் அரவமற்ற காட்டுப்பகுதியில், ஏறத்தாழ, 100 அடி ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, பல ஆயிரம் யூனிட் கிராவல் மண் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் இதுபோன்ற கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டதில், சுரங்கம் போன்று பள்ளங்கள் உருவாகியுள்ளன.

பொக்லைன், டிப்பர் லாரிகள் உள்ளிட்டவை வந்து செல்ல வசதியாக, காட்டுப்பகுதிக்குள் பிரத்யேக வழித்தடமும் உருவாக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், அனுப்பட்டி, புளியம்பட்டி, கரடிவாவி வழியாக செட்டிபாளையம் ரோட்டில் அதிகப்படியான இதுபோன்ற கடத்தல் லாரிகள் செல்வது வாடிக்கையாக உள்ளது. இங்கு வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளங்கள், கேரளாவுக்கு கடத்தப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் கடத்தப்பட்டிருப்பது குறித்து, கனிம வளம், வருவாய் துறை மற்றும் போலீசார் உட்பட யாருக்கும் தெரியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவகுமாரிடம் கேட்டதற்கு, ''கிராவல் மண் கடத்தல் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

hari
ஜன 01, 2024 22:27

where is that unemployed rajan


N.Purushothaman
ஜன 01, 2024 10:29

தாசில்தாருக்கு தன்னுடைய குடும்பத்தில் கூட என்ன நடக்குதுன்னு தெரியாத அளவிற்கு அப்பிராணியா இருப்பாரு போல ..


Davamani Arumuga Gounder
ஜன 01, 2024 14:48

.. தாசில்தார் என்ன செய்வார்? பாவம் .


NicoleThomson
ஜன 01, 2024 16:12

அவரு உயிரு அவருக்கு முக்கியம் , மற்றைய துறைகள் நம்ம அரசு வெள்ளம் வந்தபோது இருந்த பொழுது இருந்தால் அவரு என்ன செய்வாரு?


NicoleThomson
ஜன 01, 2024 10:23

சர்வாதிகாரிகள் வாழும் நாட்டில் இயற்க்கைக்கு எங்கே மரியாதை , ஒன்றும் இல்லாத மதத்தை கட்டிக்கொண்டு வீராப்பு காட்டும் மக்கள் எப்போது இயற்கையின் அருமையை உணர்வார்கள்? தமிழன் அன்றே இயற்கையை வழிபாடு செய்து கொண்டாடினான் , வந்தேறிகள் வந்தபின்னர் அதனை அழிக்கும் வேலையை முன்னெடுத்தாளன் என்று எழுதினால் ???


ஆரூர் ரங்
ஜன 01, 2024 12:57

யாரைச் சொல்லுறீங்க? லெமூரியாக் கண்டம் கடலில்( சுனாமி/ கடல்கோள்) மூழ்கியபோது இங்கே அகதிகளாக வந்தேறிய மக்களா? மன்னிக்கவும். யாதும் ஊரே???????? யாவரும் கேளிர் .


NicoleThomson
ஜன 01, 2024 16:11

அய்யா இயற்கையை வணங்கும் யாவரும் இந்தியர் , வெளிநாட்டில் இயற்கையை வணங்கும் பழக்கம் இருந்திருக்கவில்லை என்றுதான் நினைக்கிறன் , அதேபோல மற்றைய மதங்களை வெறுத்து கூறாத ஒரே மதம் என்றால் அது உங்கள் மதமே ,வந்தேறிகள் என்பவர்கள் போர்தொடுத்து வந்து நாட்டினை நாசம் செய்பவர்கள்


GoK
ஜன 01, 2024 10:04

இருக்கும் மண்ணையே சுரண்டும் இந்தக்கூலிகள் தாயையும் தாரத்தையும் கூட விலை பேசுவார்கள் வெட்கம் கேட்ட திராவிட மூதிகள்


duruvasar
ஜன 01, 2024 10:00

அவர்களுக்கு தெரியாமலேயே பெரியார் மண்ணையும் வெட்டி எடுக்கிறார்கள். ஒரு வேளை எல்லா மண்ணும் கேரளாவுக்கு எடுத்து சென்றபின்பு கேரளா பெரியார் மண் ஆகிவிடுமோ.? அப்போ தமிழ்நாட்டில் வெறும் பெரியார் குழிகள் தான் இருக்குமா ?


Santhakumar Srinivasalu
ஜன 01, 2024 09:21

தாசில்தாரும் வி எ ஒ வும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைந்து அரசாங்கத்திற்கு துரோகம் செய்கிறார்கள்


Ramesh Sargam
ஜன 01, 2024 08:05

நல்லவேளை, சூரியனும், சந்திரனும் பலகோடி மைல்கள் தூரம் இருக்கிறது. இல்லையென்றால், இந்த திருட்டு திமுக, அந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும் தனிப்பாதை அமைத்து, அங்குள்ள கனிம வளங்களை அழித்துவிடுவார்கள்.


அப்புசாமி
ஜன 01, 2024 07:46

எல்லாம் எல்லாருக்கும் தெரியும். எல்லாருடைய வாயும், கண்ணும் பணத்தால் அடைக்கப் பட்டிருக்கும்.


Davamani Arumuga Gounder
ஜன 01, 2024 21:01

.. பணம் வாங்கிக்கொண்டு அமைதியாக இல்லாவிட்டால் ....,? .............................. என்றும் மிரட்டப்பட்டிருப்பார்கள்


J.V. Iyer
ஜன 01, 2024 06:41

இந்த அரசு இருக்கும்வரையில், என்ன கத்தினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை. நடப்பது நன்றாகவே நடக்கும்.


D.Ambujavalli
ஜன 01, 2024 06:15

தாசில்தார் பாவம், மின் விசிறியடியில் உட்கார்ந்தபடி ‘கிடைத்ததை’. வாங்கிக்கொண்டு காலம் தள்ளுவாரா அல்லது எங்கே ரோடு போட்டு யார் மண் கிராவல் திருடுகிறார்கள் என்று சுற்றிக்கொண்டிருப்பாரா ?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை