வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Both the govt officials and ministers are thieves in this. Partners in crime
சென்னை: மின் கருவிகள் பராமரிப்புப் பணிக்காக மின் தடை செய்யப்படுவதாக அறிவித்து மின் கொள்முதலைக் குறைத்தாலும், பராமரிப்பை மேற்கொள்ளாமல் விடுவதால், திடீரென மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டு, செலவு, கட்டுப்பாடு இன்றி கையாளப்படுவதாக, மின் வாரியத்தில் புகார் எழுந்துள்ளது.தமிழக மின் தேவை அடுத்த நாள் எவ்வளவு இருக்கும் என்பதை முந்தைய நாளே, மின் வாரியம் உத்தேசமாக மதிப்பீடு செய்கிறது. அதற்கு ஏற்ப, அதை பூர்த்தி செய்ய மின் உற்பத்தி, மின் கொள்முதல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.துணை மின் நிலையங்கள், மின் வினியோக சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன. இந்த பணி நடக்கும் இடங்களில், காலை முதல் மாலை வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, பராமரிப்பு பணியால் எவ்வளவு மின் தேவை குறையும் என்பதை முந்தைய நாளே கணக்கிட்டு, அதற்கு ஏற்ப மின் கொள்முதலை குறைக்க திட்டமிடப்படுகிறது. ஆனால், பல இடங்களில் பராமரிப்பு பணியை அறிவித்து விட்டு, அதை செய்வதில்லை. இதனால், மின் தேவை குறையாமல் வழக்கமான அளவிலேயே உள்ளது. அதை பூர்த்தி செய்ய திடீரென மின்சாரம் வாங்கப்படுவதால், கூடுதல் செலவாகிறது. எனவே, மாநிலம் முழுதும் நடக்கும் பராமரிப்பு பணிகளை ஒரே இடத்தில் இருந்தபடி கணினி வாயிலாக கண்காணித்து, அதை உறுதி செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இதனால் பணிகளும் முறையாக நடக்கும். தேவையில்லாமல் செலவும் ஏற்படாது என, மின் வாரியத்திற்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
Both the govt officials and ministers are thieves in this. Partners in crime