உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 4 மாவட்ட வெள்ள பாதிப்புக்கு காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்

4 மாவட்ட வெள்ள பாதிப்புக்கு காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை: சாத்தனுார் அணையில், பேரிடர் மேலாண்மை விதிமுறைகளை செயல்படுத்தாதது தான், நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனுார் அணை, 7.32 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vyagq3c7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பெரும் சேதம்

'பெஞ்சல்' புயல் காரணமாக, இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், திடீரென அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அணை திறப்பு பற்றி பொய்யான தகவல்களை பரப்பி, சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 'அணை திறப்பு குறித்து, ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கையை விடுக்கப்பட்டு, டிச., 2ம் தேதி வினாடிக்கு 1.80 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 'அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால், பொருள் சேதங்களையும், உயிர் சேதங்களையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அப்படியான ஆபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவு நீர் திறக்கப்பட்டது' என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை விதிகளை, சாத்தனுார் அணையின் நீர்வளத் துறையினர் கடைபிடிக்காதது தான் வெள்ள சேதத்திற்கு காரணம் என, கூறப்படுகிறது.நீரியல் வல்லுநர் ஒருவர் கூறியதாவது: சாத்தனுார் அணையில், நவ., 30ம் தேதி நிலவரப்படி, அதன் முழு கொள்ளளவான 7.32 டி.எம்.சி.,யில், 6.99 டி.எம்.சி., நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 430 கன அடி நீர்வரத்து கிடைத்த நிலையில், வினாடிக்கு 550 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது.

அணைகளின் நிலவரம்

இதைத் தொடர்ந்து, டிச., 1ம் தேதி அணையின் நீர் இருப்பு 7.08 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2,050 கன அடி நீர்வரத்து கிடைத்த நிலையில், 1,020 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், 2ம் தேதி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 39,540 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 38,795 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து, 3ம் தேதி அணைக்கு 58,940 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. அந்த நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது. நாள்தோறும், 15 முக்கிய அணைகளின் நீர் இருப்பு நிலவரம் தொடர்பாக நீர்வளத்துறை தயாரிக்கும் அறிக்கையில், இந்த தகவல் உள்ளது. இந்த அறிக்கை, முதல்வர் அலுவலகம், நீர்வளத் துறை அமைச்சர், தலைமை செயலர், வருவாய்த் துறை செயலர் உள்ளிட்ட 14 முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அணையில் இருந்து 1.80 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதாக, அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீர்வளத்துறை அறிக்கைக்கும், அமைச்சர் அறிவிப்புக்கும் முரண்பாடு உள்ளது. பருவ மழைக் காலங்களில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை விதிப்படி, அணைகளின் முழு கொள்ளளவில் 1 டி.எம்.சி.,யை சேமிக்கும் அளவிற்கு காலியாக வைத்திருக்க வேண்டும். ஆனால், சாத்தனுார் அணை முழு கொள்ளளவான 7 டி.எம்.சி., நிரம்பும் வரை காத்திருந்து, அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை

அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மத்திய நீர்வளத்துறை வாயிலாக, நவ., 29ம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதாகக் கூறப்பட்டாலும், நீர் மேலாண்மையில் முறையான கவனத்தை நீர்வளத்துறை செலுத்தவில்லை என்பது, இதன் வாயிலாக உறுதியாகியுள்ளது. சாத்தனுார் அணையால், நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இதுதான் காரணம். இதை அமைச்சரும், அதிகாரிகளும் மறைக்க முயற்சிக்கின்றனர். அரசு முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வரும்காலங்களில் இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Saai Sundharamurthy AVK
டிச 06, 2024 20:29

சேதம் அதிகமானால் மத்திய அரசிடமிருந்து நிறைய வசூலிக்கலாம் என்ற திருட்டு புத்தி தான் காரணம். அதனால் தான் வேண்டுமென்றே அணையை திறந்து அதிகமான நீரை வெளியேற்றி யிருக்கிறார்கள். திராவிட மாடல்.


N.Purushothaman
டிச 06, 2024 16:21

இதை எல்லாம் முழுமையாக தெரிஞ்சிகிட்டா மக்காள் ஓட்டுபோடறாங்க ....வாக்களார்களின் தகுதியை பொறுத்தே அரசும் ஆட்சியாலர்களும் அமைவார்கள் ....


திராவிடாலு
டிச 06, 2024 15:36

தமிழக அரசை மக்கள் திருடுவதற்கு தான் தேர்தலில் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். அதனால் மக்கள் அளித்த உத்தரவை தான் ஜனநாயக அரசு செய்ய முடியுமே தவிர, உங்கள் இஷ்டத்திற்கு செயல்பட முடியாது என்பதை தெரிந்து கொள்ளவும்...


ManiK
டிச 06, 2024 14:25

கேவலமாக இல்லையா இந்த திமுக அரசுக்கு??!... மக்களை அபாயத்தில் தள்ளிவிட்டு மக்களையே பழிபோட்டு மிரட்டுவதற்காக?!!


karthik
டிச 06, 2024 11:44

நாடு எப்படி போனால் என்ன.. நமக்கு மோடியை எதிர்க்கணும் தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்கணும் அவ்ளோதான்


S. Balakrishnan
டிச 06, 2024 09:53

அரசியல்வாதிகள் பொறுப்பில் இருக்கும் போது கவனக் குறைவாக நடக்கும் தவறுகளுக்கு பூசி மொழுகி மக்களை குறை கூறி எலும்புத் துண்டை வீசி ஏமாற்றுவது இயல்பாகி விட்டது. இப்படித்தான் சாராய சாவுக்கும் தூக்கிப் பிடித்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் சென்று CBI விசாரணை கூட செய்ய விடாமல் தடுக்க பார்க்கிறது. இப்போது இந்த மழைநீர் பேரிடர் மாவட்ட அளவில் உள்ள பிரச்சனை. யாரும் எதுவும் செய்ய முடியாது. நீர்த்துத்தான் போகும். வாழ்க மாடல் அரசு.


orange தமிழன்
டிச 06, 2024 08:45

தமிழக அரசு பொறுப்பேற்று பாதிக்கபட்ட மக்களுக்கு திராவிட மாடல் மூலமாக தங்கள் கட்சி பணத்திலிருந்து நிவாரண உதவி செய்ய வேண்டும்.. செய்வார்களா இந்த திராவிட மாடலார்கள்.. மத்திய அரசை பழி சொல்வார்கள்....


VENKATASUBRAMANIAN
டிச 06, 2024 08:09

திறமையில்லாத அதிகாரிகள் இருந்தால் இப்படித்தான். காசு கொடுத்து வேலை வாங்கி இருப்பார்கள். இதைத்தான் இரண்டு கழகங்களும் செய்கின்றன. திறமைக்கு மதிப்பு எங்கே. அதன் விளைவை நாம் அனுபவிக்கிறோம்


அப்பாவி
டிச 06, 2024 07:02

முன்னாடியே தண்ணியை தொறந்து விட்டால் , ஐயோ ஐயோ தண்ணீரை கடலில் திறந்து விட்டு வீணாக்குறாங்களேன்னு இதே கூட்டம் ஒப்பாரி வெக்கும்.


Ganapathy Subramanian
டிச 06, 2024 11:15

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் தற்போது இவர்கள் செய்வது மற்றும் இவர்கள் சொல்லும் காரணங்கள்தான் 2015 சென்னை வெள்ளத்திற்கு காரணமும். அடையாற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நகரத்தில் பெய்த மழை நீர் அடையாற்றிக்குள் செல்ல முடியவில்லை. அதே சமயத்தில் கடலில் அலைகள் பெரியளவில் இருந்ததால் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் நீரும் கடலுக்குள் வடியவில்லை. புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வெளிவட்ட சாலை மற்றும் புறவழி சாலையை அமைக்கும்போது நீர் வடிய போதுமான குழாய்கள் / வடிகால்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அதனை ஒட்டி அமைந்த வீடுகள் எல்லாம் மழை நீரில் மூழ்கின. அப்போது மக்களுக்கு வந்தது ரத்தம் தற்போது வருவது தக்காளி சட்னியா? எல்லா காட்சி ஊடகங்களும் தற்போது அரசுக்கே ஜால்றா அடிப்பது ஏன்?


Raj S
டிச 06, 2024 21:29

ஒரு சினிமால படிடா பரமாணு ஒரு சொல்லாடல் வருமே, அதுதான் நினைவுக்கு வருது இந்த அப்பாவியின் பதிவை பார்த்தால்... தண்ணி எப்போ திறந்தாங்கனு இங்க சொல்லல... "பேரிடர் மேலாண்மை விதிமுறைகளை செயல்படுத்தாதது" தான் காரணம்...


சமீபத்திய செய்தி