பம்மல் : ''என் கையில் அதிகாரம் கிடைத்தால், 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையை திறந்து வைப்பேன்; குடிக்கிறவர்கள், குடித்துவிட்டு சாகட்டும்,'' என தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும் தலைமைக்கழக பேச்சாளருமான நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசியது, அக்கட்சியினரையே அதிர வைத்திருக்கிறது. தடுமாற்றம்
சென்னை பம்மல் பகுதியில் நடந்த தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6vtm1g4b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடையை மூடுவோம்' என முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதனால், பெண்கள் அனைவரும் ஒட்டுமொத்தமா தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவாங்கன்னு நினைத்தோம். இதையே தீவிர பிரசாரம் ஆக்கினோம். ஆனால் எதிர்தரப்பில், இதே விஷயத்தை தி.மு.க.,வுக்கு எதிராக திருப்பி, தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஒவ்வொரு டாஸ்மாக் கடை சேல்ஸ்மேனும், சூப்பர்வைசரும், தேர்தலுக்கு மூன்று நாள் முன்பு, 'இன்றுதான் டாஸ்மாக் கடைக்கான கடைசி. இனிமேல் டாஸ்மாக் கடை இருக்காது' என, கடைக்கு மது வாங்க வருவோரிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னது போலவே, தேர்தல் விதிமுறைகள்படி, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டதால், 'குடி'மகன்கள், மது கிடைக்காமல் தடுமாறினர். தி.மு.க., தரப்பு மீது கடும்கோபம் அடைந்தனர். 'மூன்று நாட்களுக்கு கடைகள் மூடப்பட்டதற்கே இத்தனை கஷ்டம் என்றால், நிரந்தரமாக கடைகளை மூடினால் என்னாகும்?' என குடிகாரர்கள் அனைவரும் நினைத்து, தி.மு.க.,வுக்கு எதிராக பொங்கினர். குடித்து சாகட்டும்
குடிகாரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளித்தனர். விளைவு - அத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு தோல்வி. அதனால், தி.மு.க., ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. கடந்த 2021ல் நடந்த தேர்தலில் நிறைய பேர், 'இம்முறை டாஸ்மாக்கை மூடுவீர்களா?' என கேட்டனர். வாயைத் திறப்போமா நாங்கள்? டாஸ்மாக்கை மூடும் பிரச்னையில், வாயை மொத்தமாக மூடிக்கொண்டு விட்டோம்.எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், டாஸ்மாக் கடையை, 24 மணி நேரமும் திறந்து வைப்பேன். குடிக்கிறவர்கள்தான், டாஸ்மாக்கிற்கு குடிக்கப் போவர். இனி, யாராலும் அவர்களை திருத்த முடியாது. அவர்களாக திருந்தினால் மட்டுமே உண்டு.எதற்காக இதைக் கூறுகிறேன் என்றால், குடிக்கிறவர்கள் நாட்டுக்கு தேவையில்லை, 24 மணி நேரமும் குடித்துவிட்டு சாகட்டும். மற்றவர்களை வைத்து ஆட்சி நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.