உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 6 நிமிடத்தில் அரும் பெரும் உயிர் பிழைத்தது; சினிமா பாணியில் செயல்பட்ட போலீசார்

6 நிமிடத்தில் அரும் பெரும் உயிர் பிழைத்தது; சினிமா பாணியில் செயல்பட்ட போலீசார்

புதுடில்லி: டில்லி அருகே குருகிராமில் ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சிப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் விரைந்து வந்து சினிமா பாணியில் கதவை உடைத்து மீட்டனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் சிலிண்டர் வாயுவை திறந்து தீ வைத்து தற்கொலைக்கு முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே 6 நிமிடத்தில் இந்த பகுதிக்கு வந்த போலீசார் சஞ்சய், தினேஷ் ஆகியோர் சினிமா பாணியில் கதவை காலால் எட்டி உதைத்து உள்ளே சென்று அழுது கொண்டே தற்கொலைக்கு தயாராகி கொண்டிருந்த பெண்னை தடுத்து நிறுத்தி வெளியே கொண்டு வந்தனர். மேலும் அவருக்கு போலீசார் கவுனசிலிங் அளித்தனர். விசாரணையில் இவரும் இவரது நெருங்கிய தோழிக்கும் தகராறு ஏற்பட்டதால் பிரிவை தாங்க முடியாமல் இந்த முடிவுக்கு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். குருகிராமில் சின்னத்திரையில் சிஐடி என்ற குறுந்தொடர் நாடகத்தில் இது போன்று போலீசார் காப்பாற்றும் காட்சி வரும். இதன் அடிப்படையில் போலீசார் செயல்பட்டதாக சுற்றுப்புற மக்கள் பேசி கொள்கின்றனர். இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் சஞ்சய், கான்ஸ்டபிள் தினேஷ் மற்றும் சுந்தர்லால் ஆகியோரைப் பாராட்டி, அவர்களுக்கு பாராட்டு கடிதமும், தலா ரூ.5,000 வெகுமதியும் குருகிராம் கமிஷனர் விகாஸ் குமார் அரோரா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

HoneyBee
ஏப் 18, 2025 14:18

ஓஓஓஓஓ. அவுகளா இவுக. ஒழியட்டும்னு விட்டுட்டு போவீகளா. இல்லனா சுபவீ சொன்ன மாதிரி சேம் சைடு கோல் போட அவுகளை காப்பாத்து வீகளா


Rasheel
ஏப் 18, 2025 13:44

ஓரின உரவால் சமுதாயம் சீர்கெட்டு அழிகிறது


Ramesh Sargam
ஏப் 18, 2025 13:00

நாட்டில் மனநோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றனர். சிறு விஷயங்களுக்கெல்லாம் உயிரை மாய்த்துக்கொள்ள முயல்கின்றனர். அவர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுக்கவேண்டும்.


M Ramachandran
ஏப் 18, 2025 12:54

அது டில்லியில். இஙகு என்றால் காதை குடைந்து என்னா யேன்னா யார் பேசுறது உன் போன் நம்மவர் என்ன? என்று கேள்வி கேட்டு விட்டு பிறகு சரி ஜீப்பில் பெட்ரோல் இருக்கா பார் என்று புறப்படும் நேரத்தில் அங்கு எல்லாம் முடிந்திருக்கும்


Anantharaman Srinivasan
ஏப் 18, 2025 11:58

எல்லா பதிவிலும் துக்ளக் துக்ளக்னு வார்த்தையிருக்குமே. துக்ளக் மேல சந்தேகமில்லையா.?


Barakat Ali
ஏப் 18, 2025 11:26

...விவகாரத்துக்கு போலீச்சு ஆதரவா இருக்கலாமா ????


Barakat Ali
ஏப் 18, 2025 11:55

ஃபயர் விவகாரத்துக்கு ........


சமீபத்திய செய்தி