உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற உண்ணாவிரத அனுமதி கோரி வழக்கு

பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற உண்ணாவிரத அனுமதி கோரி வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற, மதுரையில் ஜன., 5ல் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரிய வழக்கில், மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் தாக்கல் செய்ய அறிவுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணையை ஒத்திவைத்தது.ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த மனு:தமிழக ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிலரின் செயல்கள், பேச்சுக்கள் பிராமண சமூகத்திற்கு எதிராக உள்ளன. பல நாத்திகக் குழுக்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களை உடல் ரீதியாக தாக்கும் நிலைக்கு சென்று உள்ளனர். பிராமண சமூகம் தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது என்பது போல திட்டமிட்டு சில ஊடகங்கள், சினிமாவில் தவறாக சித்தரிக்க முயற்சிக்கப்படுகிறது. பிராமணர்கள் கடைபிடிக்கும் சனாதன தர்மத்தை மலேரியா, டெங்குபோல் ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசின் அதிகார பலமிக்க அமைச்சர் ஒருவர் பேசினார். இது, பிராமண சமூகத்தை பற்றி பலரும் தவறாக பேச ஊக்குவித்து உள்ளது. முக்கிய பதவி வகிக்கும் நபர்களின் இத்தகைய விமர்சனங்கள், விரும்பத்தகாத கருத்துகள் மற்றும் அவதுாறு பிரசாரங்களை அரசு தடுக்கவில்லை; மவுனமாக உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டிற்குரிய சலுகையை தமிழகத்தில் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்படுவது பிராமண சமூகம் தான். பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜன., 5ல் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரதம் நடத்த அனுமதி, பாதுகாப்பு வழங்கக் கோரி போலீஸ் கமிஷனர், சுப்பிரமணியபுரம் போலீசாரிடம் மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எம்.நிர்மல் குமார் விசாரித்தார்.அரசு தரப்பு: கோவையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் சர்ச்சையானது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்துாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவ்வாறு ஆட்சேபம் தெரிவித்தது.நீதிபதி: மதுரை உண்ணாவிரதத்தில் யார், யார் பேசுகின்றனர், எத்தனை பேர் பங்கேற்கின்றனர் என்ற விபரத்தையும், சட்டத்திற்கு உட்பட்டு சுமுகமாக நடத்தப்படும் என்பதற்கான உத்தரவாதத்தையும் மனுதாரர் தரப்பில் இன்று தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

pmsamy
ஜன 03, 2025 17:16

பிராமணர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து விட்டால்


அப்பாவி
ஜன 03, 2025 17:00

ஒரே நாடு... ஒரே பண்பாடு. எப்போ மாறப்போறீங்க? மாறலைன்னா அமித்சா கோவிந்தை உட்டு ஒரு உயர்மட்டக் குழு அறிக்கையில் ஒரே பண்பாடு இருந்தால் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி மிச்சமாகும்னு சொல்லிடலாம்.


கிஜன்
ஜன 03, 2025 09:41

வேதம் அறிந்த பிராமணர்கள் பசித்திருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.. போராட வேறு வழிகளை தேடலாம்.. பிராமணர்கள் வன்கொடுமை சட்டம் வேண்டும் என்ற அளவிற்கு... சமூக வலைத்தளங்களில் அவர்கள் கேலி செய்யப்படுகிறார்கள் .... இந்த சட்டம் மிக நியாயமான ஒன்று ....


Sampath Kumar
ஜன 03, 2025 08:35

உங்க கேடுகேட்ட கொள்கையால் பல சமுகம் பல தலை முறையாக பாதிக்க பட்டு வரும் நிலையில் அவர்களை கொடுமை படுத்திய உங்க சனதா தர்மத்தை சொல்லி தப்பிக்க பார்ப்பது கடைந்து எடுத்த அய்யோக்கிய தனம் ஏதுக்கு எல்லாரும் உங்க கும்பலை எதிர்கின்றார்கள் என்பதில் இன்னும் உணரும் நிலையிலுங்கள் நிலை வளர வில்லை


naranam
ஜன 03, 2025 15:44

சம்பத்து ஒரு மென்டல் போல! சொரியாரின் பொய்களை நம்பிய மூளை கெட்ட ஜென்மம்


theruvasagan
ஜன 03, 2025 16:06

சனாதன தர்மம் பிராமணனால் உருவாக்கப் பட்டதோ செயல்படுத்தப் பட்டதோ அல்ல. எல்லோரையும் ஆட்டிப்படைக்வும் அதிகாரம் செய்யும் ஸ்தானத்தில் பிராம்மணர்கள் எந்த காலத்திலும் இருந்தது இல்லை. ஒரு காலகட்டத்தில் வழக்கில் இருந்த பல விஷயங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஒவ்வாமல் போனதால் வழக்கொழிந்து போகின்றன. சனாதனம் என்பது அறம் சார்ந்த வாழ்க்கை முறை என்பதுதான் சாரம். மற்றைய மதங்கள் மாதிரி எல்லோரும் ஒரே வகையான மத கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இங்கே இல்லை.


V வைகுண்டேஸ்வரன்,chennai
ஜன 03, 2025 21:15

அடிமை சம்பத்குமார். உன் கதறல் அருமை. இ‌ன்னு‌ம் 2000 ஆண்டிற்கு பிறகும் உன் எச்சங்கள் இதே போல கதறுவார்கள். சனாதனம் அப்படி


venugopal, Sydney
ஜன 03, 2025 07:26

அப்போ கஸ்தூரி யை தவிர வேறு யாருமே சர்ச்சைக்குரிய விதத்தில் தமிழ்நாட்டில் பேசவே இல்லை. அப்படி தானே? மாடல் மற்றும் வெங்காயம் ஆகியோர்க்கு இன்னும் இவர்களைக் கண்டால் அவ்ளோ பயம். அந்த அளவிற்கு வெச்சு செஞ்சு இருக்கானுங்க போல...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை