உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உங்களில் ஒருவன்: ஏழை எளிய மக்களின் வலி இவர்களுக்கு எப்படி தெரியும்?

உங்களில் ஒருவன்: ஏழை எளிய மக்களின் வலி இவர்களுக்கு எப்படி தெரியும்?

'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை, 200 தொகுதிகளை கடந்து, தற்போது சென்னை நகரில் நடந்து வருகிறது. ஆனால், மக்களைஎல்லாம் நடந்து சென்று சந்திக்காமல், பொது இடங்களில் மக்களை சந்தித்து பேசும்படி, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக பாதயாத்திரை நிகழ்ச்சி, சென்னை நகருக்குள்ளே மட்டும் நடந்து வருகிறது. அதன்படி மாதவரம், மதுரவாயல், அம்பத்துார், கொளத்துார், பெரம்பூர் மற்றும் திரு.வி.க., நகர் பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து பேசக்கூடிய அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.

பெயர் வைத்தால் போதுமா?

சிங்காரச் சென்னை என்று பெயர் மட்டும் வைத்துவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தில் சென்னையை தத்தளிக்க வைக்கும் ஊழல் கட்சிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.'பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம்; 98 சதவீத வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டன' என்று பொய் சொல்லி, மக்களை ஏமாற்றும் கட்சிகள் இல்லாமல், ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.வடசென்னையில் தரமான சாலைகள், சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார மேம்பாடு என எதுவுமே கிடைக்கப் பெறாமல், மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால், எளிய மக்கள் படும் துன்பங்களை அறிந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஒரே தகுதி தான்

சென்னை எம்.பி.,க்களாக இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் ஆகிய மூவருக்கும் இருக்கும் ஒரே தகுதி, வாரிசு என்பது தான். ஏழை எளிய மக்களின் வலி இவர்களுக்கு எப்படி தெரியும்?சென்னை பெருவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தலா, 10,500 ரூபாய் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தமிழக பா.ஜ., சார்பாக, 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று, தி.மு.க., அரசை வலியுறுத்தினோம். ஆனால், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே கொடுத்தனர். அந்தப் பணத்திலும் 75 சதவீத பணம், மத்திய அரசின் பங்கு.* சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, 1,000 கோடி ரூபாய் நிதி கொடுக்கப்பட்டுள்ளது* மழை நீர் வடிகாலுக்கு என தனியாக 1,300 கோடி ரூபாயும், நீர்நிலைகளின் கரைகளை மேம்படுத்த 560 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கியுள்ளது* ஆனால், இவை அனைத்தையும் தமிழக அரசு என்ன செய்தது என்பது கேள்விக்குறி* தரமான சாலைகள், சுத்தமான குடிநீர், சுகாதாரமான நகரம் என, எந்த அடிப்படை வசதிகளும் சென்னையில் நிறைவேற்றப்படவில்லை.துாய்மையான நகரங்களில் 44வது இடத்தில் இருந்த சென்னை, இந்த ஆண்டு 199வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 12 சதவீத குப்பை கழிவுகள் மட்டுமே அப்புறப்படுத்தப்படுகின்றன.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, 2,69,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறது. தமிழகத்தின் மொத்தக் கடன்8 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது.ஆனாலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. தென்தமிழகத்திற்குச் செல்ல, பேருந்து பிடிக்கவே வெளியூரான கிளாம்பாக்கம் செல்ல வேண்டியிருக்கிறது. ஒரே ஒரு குடும்பத்திற்காக, மாநிலத்தின் மொத்த நலனும் அடகு வைக்கப்படுகிறது.கொளத்துார் தொகுதி சட்டசபை உறுப்பினராக அமைச்சர் சேகர்பாபு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரே தவிர, முதல்வர் ஸ்டாலின் இல்லை. இந்தியாவிலேயே முதல்வராக இருப்போரின் தொகுதிகளில், கொளத்துார் மட்டுமே மிகவும் பரிதாபமாக உள்ளது.

துரும்பை கூட...

பிரதமர் மோடி அரசில், பெண் குழந்தைகள் நம் நாட்டின் சொத்துக்கள் என்று, பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கர்ப்பிணியர் பதிவு செய்தவுடன், அவர்கள் வங்கி கணக்குக்கு 1,000 ரூபாய், ஆறாவது மாதம் 2,000 ரூபாய், குழந்தை பிறந்தவுடன் 2,000 ரூபாய் என, கர்ப்பிணியருக்கு 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இப்படி பெண்களுக்கென ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி, பெண்களை இரு கண்களாக காப்பாற்றி வருகிறது.கடந்த 67 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில், அதன் கூட்டணியில் இருந்து தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், பெண்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. சாமானிய மக்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில், தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து கொள்ளும்.சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது.இந்நிலை மாற வேண்டும் என்றால், தற்போது இருக்கும் சென்னையின் எம்.பி.,க்களுக்கு இனியொரு முறை வாய்ப்பளிக்கக் கூடாது. கூடவே, தமிழகம் முழுதும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிப்போம்.பயணம் தொடரும்...

- கே.அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்

கே.அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

g.s,rajan
பிப் 17, 2024 23:30

பி.ஜே.பியில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்றும் லேசுப்பட்டவர்கள் இல்லை அவர்கள் எல்லாம் பெரும் கோடீஸ்வரர்கள் ,சாதாரண மக்களின் வலி அவர்களுக்கு எப்படித் தெரியும் ....????


raja
பிப் 17, 2024 20:14

திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற பரம்பரை குடும்ப கொத்தடிமைகள் எப்படி எல்லாம் முட்டு கொடுகிரானுவோ பார் தமிழா


Oviya Vijay
பிப் 17, 2024 16:25

இந்த உலகத்துல இருக்குறதுலேயே ரொம்ப கஷ்டமான விஷயம் . ஊரு புல்லா கழுவி கழுவி ஊத்தினாலும் வேற வழியே இல்லாம முட்டு கொடுத்தே ஆகணும். அதுக்காக ஒரு சில வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டே இருக்கணும். அப்போ தான் இந்த ஊரு "இந்த சங்கிகள் எல்லாம் அழுகல. சும்மா அவங்க கண்ணு வேர்க்குது" அப்படின்னு நம்பும். அப்படி தான...


Duruvesan
பிப் 17, 2024 15:43

பாஸ் மஞ்ச பய்யோடா வந்தவன் தமிழ் நாடு உனக்குன்னு பட்டா போட்டு குடுத்துட்டு போய்ட்டாராம்


மதிவேந்தன்
பிப் 17, 2024 13:11

கொத்தடிமைகள் கதறல்கள் கேட்க்கிறதா? தும்பிகளின் ஓலம் கேடக்கிறதா ?


கனோஜ் ஆங்ரே
பிப் 17, 2024 12:10

////ஏழை எளிய மக்களின் வலி இவர்களுக்கு எப்படி தெரியும்?.../// அது சரி, இவங்களுக்கு தெரியுறது இருக்கட்டும். விவசாயிகளின் வலி உங்க கட்சிக்கும், உங்க பாஸ்..க்கும் தெரியுதா..? ஏழையெளியவர்களை விட... விவசாயிகள் பணக்காரர்கள், செல்வந்தர்களா... அண்ணாமலை சார். ஒண்ண மட்டும் தெரிஞ்சுக்கோங்க... ரொம்ப ஆடாதீங்க, அப்படி ஆட்டம் போட்டவங்க போன கதை உங்களுக்கு தெரியுமா...? இந்திய அரசியல் வரலாற்றை படிச்சுப் பாருங்க புரியும், தெரியும்.


Nagendran,Erode
பிப் 17, 2024 15:53

ஆட்டம் போட்டவர்களின் கதைகளை பற்றி ஒரு ஐபிஎஸ்கிட்ட போய் சொல்றத பாருங்க


g.s,rajan
பிப் 17, 2024 11:33

In the Centre Ruling Party BJP many of the MPs,CabinetcMinisters are Crorepathis ,they Never had the Pinch of the Common Man.


பாமரன்
பிப் 17, 2024 10:41

டீலக்ஸ் வேனில் நின்று பாதயாத்திரை நடத்தும் ....நகரம் ரொம்ப காஸ்ட்லின்னு கடலோரமா மாதம் வெறும் நாலு லட்சம் வாடகைக்கு அதுவும் தோஸ்துங்க குடுக்கறாங்க... ஏழைகளின் வலி புரியும்....


முருகேசன்,சோளிங்கர்
பிப் 17, 2024 15:55

ஆமா பக்கோடா பாமரனுக்கு புரியாதுதான்!????????????????????????


அப்புசாமி
பிப் 17, 2024 08:37

சொகுசு விமானங்களில் போறவங்களுக்கும் தெரியாது.


T.sthivinayagam
பிப் 17, 2024 08:34

தேசிய ஜனநாயக கூட்டனி தமிழக செல்வங்களை கொள்ளையடித்து குஜராத்தில் கொட்டுகிறது என்று தமிழக மக்கள் கூறுகின்றனர்


Gopal,Sendurai
பிப் 17, 2024 15:57

நீ ஏம்பா எப்ப பாத்தாலும் தமிழக மக்கள் இந்திய மக்கள்னுகூவிகிட்டே இருக்க


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி