உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ம.க., வந்தால் இரண்டு வராவிட்டால் மூன்று: வாசனுக்கு பா.ஜ., சாய்ஸ்

பா.ம.க., வந்தால் இரண்டு வராவிட்டால் மூன்று: வாசனுக்கு பா.ஜ., சாய்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றால், த.மா.கா.,வுக்கு ஈரோடு, மயிலாடுதுறை தொகுதிகள் கிடைக்கும் என்றும், வரவில்லை என்றால், துாத்துக்குடியுடன் சேர்த்து, மூன்று தொகுதிகள் வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், தஞ்சாவூர் தொகுதியில் த.மா.கா., போட்டியிட்டு தோல்வி அடைந்தது. அந்த தேர்தலில், ஆட்டோ சின்னத்தில் அக்கட்சி போட்டியிட்டது. தற்போதைய தேர்தலில், பா.ஜ.,வுடன் முதல் கட்சியாக த.மா.கா., கூட்டணி அமைத்து, மூன்று தொகுதிகளை கேட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9rxxile4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றால், த.மா.கா., வுக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்றும், கூட்டணியில் இடம் பெறவில்லை என்றால், மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், மாவட்ட தலைவர் விஜயகுமார், துாத்துக்குடி தொகுதியில் மாநில பொதுச்செயலர் என்.டி.எஸ்.சார்லஸ், மயிலாடுதுறை தொகுதியில் தொழிலதிபர் சாதிக் ஆகியோர், தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியா அல்லது சைக்கிள் சின்னத்தில் போட்டியா என்பது குறித்து, தொகுதி பங்கீடு எண்ணிக்கை நிலவரம் தெரிந்ததும் முடிவு எடுக்க வாசன் திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை