உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகும்: மார்க்சிஸ்ட் கணிப்பு

அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகும்: மார்க்சிஸ்ட் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அ.தி.மு.க., கூட்டணியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால், 2026 தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:வரும் 2026 சட்டசபை தேர்தலில், தற்போது அரசுக்கு எதிர்ப்பான நிலையில் இருக்கும் கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ, அதை பொறுத்தே தி.மு.க., கூட்டணியின் வெற்றி அமையும்.

சவால் இல்லை

விஜய் போட்டிருக்கும் திட்டம் என்ன என்பதும் இதில் அடங்கும். அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றால்கூட, அது தி.மு.க.,வுக்கு சவாலாக இருக்காது. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் சேர்ந்தால், போட்டி கடுமையாக இருக்கும்; முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.கடந்த தேர்தல்களில் போட்டியிட்டதை காட்டிலும், வரும் சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் எண்ணம். கட்சித் தொண்டர்களும், தலைவர்களும், நிர்வாகிகளும்கூட அதையே தான் விரும்புகின்றனர். கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் தான் போட்டியிட வாய்ப்பு கிட்டியது. அந்த நிலை, வரும் தேர்தலில் இருக்காது. தமிழகத்தில் இருந்து பா.ஜ.,வை அகற்ற, தி.மு.க., போன்ற வலுவான, மதசார்பற்ற கட்சி தேவை தான். அதனாலேயே அக்கட்சிக்கும், மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் துணையாக இருக்கிறோம். அதில் மாற்றம் இல்லை. அண்ணாதுரை காலத்தில் இருந்தே முதலாளிகளின் விருப்பங்களை பாதுகாத்து, நிறைவேற்றும் கட்சியாக தி.மு.க., இருக்கிறது என்பது எங்களின் பார்வை. அந்த கட்சியின் அடிப்படை குணம், இன்று வரை துளிகூட மாறவில்லை. இதை குற்றச்சாட்டாக சொல்லவில்லை; வேதனையாக சொல்கிறோம்.

போராட்டம்

ஆலைகளில் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமைக்கு, மாநில தொழிலாளர் நலத்துறை உதவுவதில்லை. ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும்கூட, உயர் நீதிமன்றம் வரை சென்று போராட வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் ஒரு தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைப்பதற்காக, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தோர் முயற்சித்தனர்; ஆனால், முடியவில்லை. தொழிலாளர்கள் திரண்டு பெரிய போராட்டம் நடத்தினர். இதெல்லாம் வரலாறு. இந்த மாதிரியான நிலை, முன் எப்போதும் இருந்ததில்லை. குறிப்பிட்ட அந்த பன்னாட்டு தொழிற்சாலையின் தொழிலாளர் விரோத போக்குக்கு தமிழக அரசும் துணை நின்றது. தொழிலாளர் நலன் காக்கும் கம்யூனிஸ்ட்களால், இதை பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்? அதனாலேயே, பெரும் போராட்டம் நடந்தது.

ஒப்பிடவே முடியாது

திராவிட மாடல் அரசு நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசுகிறார். அதை தவறு என சொல்லவில்லை. ஆனால், எத்தனை விஷயங்களில், ஏற்கனவே சொன்ன விஷயங்களை திராவிட மாடல் அரசு செய்து முடித்தது?கருணாநிதி அரசுடன் ஸ்டாலின் அரசை ஒப்பிடவே முடியாது; கூடாது. ஸ்டாலின், தமிழக மக்களுக்கு செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை. ஆனால், வாக்குறுதிகளில் இல்லாதவற்றையும் நிறைவேற்றி இருக்கின்றனர். அதை வரவேற்கிறோம்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, தற்போது வரை 24 'லாக் அப்' மரணங்கள் நிகழ்ந்துள்ளன. போலீஸ் விசாரணையில், கோவில் காவலாளி அஜித்குமார் இறந்தது போன்ற சம்பவங்களுக்கு, தேர்தலுக்கு முன்னதாகவே தி.மு.க., நிச்சயம் பதில் சொல்ல வேண்டி இருக்கும். எந்த இடத்திலும் மனித உரிமைகள் மீறப்படுவதை, நாங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கண்ணன்
ஜூலை 04, 2025 10:50

உளறிக் கொட்டும் உண்டியல் குலுக்கிகள்


Oviya Vijay
ஜூலை 04, 2025 07:34

பாஜக கூட்டணியோடு சேர்ந்த அதிமுகவில் என அவர் குறிப்பிடவில்லை. வெறும் அதிமுகவில் தவெக இணைந்தால் போட்டி கடுமையாகும் என்று தான் கூறியிருக்கிறார்... ஏனெனில் தவெக என்றைக்குமே திமுகவுடனோ இல்லையெனில் பாஜகவுடனோ கூட்டணி வைக்காது என அவருக்கும் தெரிந்திருக்கிறது. ஒருவேளை தேர்தலுக்கு முன்னே இப்போதிருக்கும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முறிந்து அதிமுக அதிலிருந்து வெளியேறினால் அப்போது வேண்டுமானால் தவெக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தான் அவர் கூறுகிறார்... அவ்வாறு நிகழ்ந்தால் திமுக கூட்டணியை விட தனித்து விடப்படும் பாஜகவுக்கு தான் அல்லு விடும் என்பதில் ஐயமே வேண்டியதில்லை... மேலிடத்தில் இருக்கும் ஜீ மற்றும் ஷா வரை மேலும் தொண்டர்களாகிய சங்கிகள் அனைவருமே கதிகலங்கிப் போவர்... ஆனாலும் அப்போது கூட ஆளுங்கட்சி தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பதே உண்மை... ஏனெனில் ஏற்கனவே நான் பலமுறை கூறி வருவது போல இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியையும் அந்தக் கூட்டணியிலிருந்து உருவாத வரை எதிர்க்கட்சிகள் என்னதான் மாபெரும் கூட்டணியை உருவாக்கினாலும் இப்போதைய சூழலில் ஆளுங்கட்சியை வீழ்த்தவே முடியாது... வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்...


Oviya vijay,
ஜூலை 04, 2025 07:21

நீர் பேசாமல் விஜய்யுடன் கூட்டணியை அமைத்து (ம. ந. கூ) அவரையே முதல்வர் என அறிவித்தால் இரட்டை இலக்கம் அல்ல மூன்று இலக்க சீட் கிடைக்குமே. பெட்டிகள் முக்கியம் குமாரு


Padmasridharan
ஜூலை 04, 2025 06:08

மனித உரிமைகளை பறித்து ஆட்சி செய்வதே காக்கிச்சட்டைகளில் பலரும். இது அவ்ர்களுக்கே தெரியும். வேலையில் சேர்ந்த உடனே ஒரு சில வருடங்களில் பணம் வசூல் செயது குடியும் குடித்தனமுமாக நினைக்கின்றனர். இதனால் ஒருமையில் பேசி, அடித்து மிரட்டி தினசரி சில இடங்களை இருட்டாக வைத்து அங்கு வருபவர்களிடம் இருந்து மொபைலை புடுங்கி பணமாக மாற்றுகின்றனர். இதில் நல்ல கூட்டணி வைக்கின்றனர்.


Padmasridharan
ஜூலை 04, 2025 05:59

ஏன், அண்ணன் விஜயகாந்த் கட்சியில் இணைத்தால் இன்னும் மவுசு கூடாதா சாமி. . ஒரு நடிகரு தனியா நிக்கறாருனு போட்ட வோட்டுல கூட்டணி வெச்சிட்டாரு. அங்க போட்டவங்க இப்ப இவருக்கு போடா மாட்டாங்களா என்ன.. NOTA வ எடுத்துட்டா அதுவும் இவருக்குத்தான் விழும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை