உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பள்ளி விஷயத்தில் அண்ணாமலைக்கு தமிழக அரசு மழுப்பலான பதில்

பள்ளி விஷயத்தில் அண்ணாமலைக்கு தமிழக அரசு மழுப்பலான பதில்

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, முழுமையான புள்ளிவிபரங்களை வெளியிடாமல், 'தமிழகத்தில் 3.16 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே, ஹிந்தி கட்டாய பாடமாக உள்ளது' என தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w7tiqhiv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'தேசிய கல்விக் கொள்கையை, தமிழக அரசு ஏற்றால்தான், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு தர வேண்டிய, 2,152 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு வழங்கும்' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால், மும்மொழிக் கொள்கையை ஏற்பதாகி விடும் என்பதால், மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாக, தி.மு.க., பிரசாரம் செய்து வருகிறது. அதற்கு பதில் அளித்துள்ள பா.ஜ.,வினர், 'ஹிந்தி படி என, மத்திய அரசு கூறவில்லை. மூன்றாவதாக ஏதேனும் ஒரு மொழியை கற்கும்படியே, தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது' என விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக, அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:

தனியார் பள்ளிகளில் படிக்கும், தி.மு.க.,வினரின் குழந்தைகள் மட்டும், மூன்று மொழிகள் கற்கலாம். அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? அரசு பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்? தமிழகத்தில் அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக உள்ளனர். தனியார் பள்ளிகளில், 56 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், தமிழ் மொழி என்பது கட்டாயம் அல்ல. தெலுங்கு, அரபு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பிரெஞ்சு, உருது போன்ற மொழிகள் உள்ளன. தமிழகத்தில், 56 லட்சம் மாணவர்கள், வேறோரு திட்டத்திற்கு போய் கொண்டிருக்கின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும், 52 லட்சம் மாணவர்களை மட்டும், கட்டாயமாக இரு மொழிகளை படிக்க வேண்டும் என்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கு பதில் அளித்து, தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும், 56 லட்சம் மாணவர்களில், குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்கும்போது, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும், 52 லட்சம் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக்கூடாதா என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேட்டுள்ளார். இதற்கு எந்த தரவும் இல்லை. தமிழகத்தில் கட்டாய மொழித் திணிப்பை எதிர்க்கும் நமது அரசு, விரும்பியதைப் படிக்க, எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. அவ்வகையில் தனியார் கல்வி நிலையங்களில், ஹிந்தி கட்டாயம் என்ற சூழல் இல்லை.தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை, சுமார் 58,000. அதில் தனியார் பள்ளிகள் சுமார் 12,690. இதில் சி.பி.எஸ்.சி., பள்ளிகள் வெறும் 1,835 தான். சி.பி.எஸ்.சி., பள்ளிகள் தவிர, கட்டாய ஹிந்திப் பாடம் எங்கும் இல்லை. பிற தனியார் பள்ளிகளில், எந்தப் பொதுத் தேர்விலும் ஹிந்தி கிடையாது. நிலைமை இப்படி இருக்க, பல லட்சம் மாணவர்கள் ஹிந்தி படிப்பதாக, மனம் போன போக்கில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என, தவறான கருத்தை பரப்ப முயல்வது தவறு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகள், ஆங்கிலோ - இந்தியன் பள்ளிகள், ஐ.சி.எஸ்., பாடத்திட்ட பள்ளிகள், மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள் எவ்வளவு உள்ளன; ஒவ்வொன்றிலும் எவ்வளவு மாணவர்கள் படிக்கின்றனர் என்ற விபரங்கள், தமிழக அரசிடம் உள்ளன. அவற்றை தகவல் சரி பார்ப்பகம் வெளியிடவில்லை.சி.பி.எஸ்.சி., பள்ளிகள் எண்ணிக்கையை கூறிய அரசு தரப்பு, அதில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு பாடத்திட்டத்திலும், எவ்வளவு மாணவர்கள் படிக்கின்றனர் என்ற விபரத்தை, தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பதே, அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.அதேபோல், 'தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழி கற்கலாம்; அரசுப் பள்ளி மாணவர்கள் கற்கக்கூடாது என்பது நியாயமா' என்ற அண்ணாமலையின் கேள்விக்கும், அரசு தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.

அதிகாரிகளுக்கு வாய்பூட்டு

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பள்ளிகள் எண்ணிக்கை, மாணவர்கள் விபரம் என, எதையும் வெளியே தெரிவிக்கக்கூடாது என, கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், எதை கேட்டாலும் தெரியாது என்றே, அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர்.தமிழக அரசு பாடத்திட்ட பள்ளிகள் சிலவற்றில் உருது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. அது குறித்த விபரத்தையும் தெரிவிக்க மறுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Karthik
பிப் 20, 2025 20:57

உள்ளபடி கல்வித்துறையின் தகவலை சொன்னாதான் ரயில்ல போற மானம் கப்பலேறிடும்ல.. அதனால கக்கவும் முடியாம முழுக்கவும் முடியாம தொண்டைக் குழியில அடச்சி நிக்கீ. வேற வழி??


முருகன்
பிப் 20, 2025 18:09

இவருக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும் இவர் மக்கள் பிரதிநிதி கூட கிடைக்காது


பேசும் தமிழன்
பிப் 20, 2025 20:27

உங்கள் சாயம் வெளுத்து விட்டது.... உங்கள் பிள்ளைகள் இந்தி.... உருது போன்ற பிற மொழி படிக்கலாம்.... ஆனால் ஏழை குழந்தைகள் மட்டும்... படிக்க கூடாது.... என்னங்க உங்க நியாயம் ????.... இனியும் திராவிடர்கள் என்று சொல்லி தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியாது.


guna
பிப் 20, 2025 20:45

அதை சொல்ல கொத்தடிமை உமக்கு என்ன தகுதி


vijai hindu
பிப் 20, 2025 21:19

200 ரூபாய் கொத்தடிமை


Oru Indiyan
பிப் 20, 2025 12:08

இந்த முதல்வர் துணை முதல்வர் இணை முதல்வர் .. எல்லாம் இரு மொழி கொள்கையில் படித்தவர்கள் தானே. தைரியம் இருந்தால் நான் குறிப்பிடுகிற 10 திருக்குறள் சொன்னால் நீங்கள் தமிழர் என்று ஒத்து கொள்கிறோம். இல்லையென்றால் நீங்கள் உங்கள் கையிலுள்ள கோடிக்கணக்கான பணத்தை எடுத்து கொண்டு தமிழ்நாட்டை விட்டு ஓடி விட வேண்டும்.


rasaa
பிப் 20, 2025 13:37

திருவள்ளுவர் சிலை கண்ணாடிபாலத்தில் எவ்வளவு அடித்தோம் என கேட்டால் சொல்வோம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 20, 2025 08:49

திமுக அதிமுக மற்றைய உறவின் முறை திராவிட கட்சிகள் அனைத்திற்கும் நன்கு தெரியும் மும்மொழி கல்வி திட்டத்தில் ஹிந்தி கட்டாயம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் எந்த மொழியும் கட்டாயம் இல்லை. இது அனைத்து திராவிட கட்சிகள் அனைத்திற்கும் நன்கு தெரியும். ஆனால் இந்த மும்மொழி கல்வி திட்டத்தை ஏற்றுக் கொண்டால் கட்டாயம் தமிழக மக்கள் தங்கள் விருப்பத் தேர்வாக ஹிந்தி மொழியையே தேர்ந்தெடுப்பார்கள். இது ஆட்சியில் உள்ள ஆட்சியில் இருந்து இப்போது இல்லாத ஆட்சியில் கூட்டணி என்ற பெயரில் ஒட்டி கொண்டு உள்ள கட்சிகள் முன்னர் இருந்த ஆட்சியில் ஒட்டி கொண்டு இருந்த கட்சிகள் புதிதாக கட்சி ஆரம்பித்து இன்னும் சில வருடங்களில் திராவிட கட்சிகளுடன் தன் கட்சியை இணைத்து கொள்ள போகும் கட்சிகள் அனைத்திற்கும் தெரியும் ஹிந்தி மொழியையே தமிழக மக்கள் முதன்மை தேர்வாக இருக்கும் என்று. இதை வெளிப்படையாக சொல்ல வெட்கப் பட்டு தான் மத்திய ஒன்றிய அரசின் மீது பொய் குற்றம் சுமத்துவது. முன்பெல்லாம் அரசியல் வாதிகள் என்றால் வெள்ளை கதர் சட்டை கதர் வேட்டி கஞ்சி போட்டு மட மட வென்று இஸ்திரி போட்டு கட்டி கொண்டு தோளில் துண்டு போட்டு வந்தால் தான் அரசியல் தலைவர். திராவிட கட்சிகள் வந்த பிறகு இந்த கலாச்சாரம் போய் வெள்ளை டெரி காட்டன் கரை வேட்டி வெள்ளை சட்டை அணிந்தால் அரசியல் வாதி என்று ஆனது. அதன் பிறகு இந்த கலாச்சாரம் மாறி கட்சி கலர் துண்டு போட்டு கொண்டார்கள். பெண்களுக்கு கட்சி கொடி கலர் பார்டர் போட்டு வந்தார்கள். தற்போது இதுவும் மாறி எந்த அரசியல் கட்சி தலைவர் ஆனாலும் விவசாயி இடம் சென்றால் தங்கள் கட்சி துண்டு தவிர்த்து பச்சை துண்டு போட்டு கொள்கிறார்கள். போராட்டம் என்றால் கருப்பு சட்டை என்று ஆகி விட்டது. பின்னர் அவ்வப்போது பார்மல் பேன்ட் சட்டை அணிந்து கொண்டார்கள் செல்லும் இடத்திற்கு ஏற்ப. அதுவும் கடந்து போய் தற்போது ஜீன்ஸ் பேண்ட் டி சர்ட் கலாச்சாரம் வந்து விட்டது. ஆரம்ப கல்வி ஆரம்பத்தில் இந்து மத கிறிஸ்துவ மத இஸ்லாம் மத சம்பந்தமான பாடங்கள் தமிழில் இருந்தது. அதனை சிறிது சிறிதாக குறைத்து நாத்திக தந்தை உள்ளே கொண்டு வந்து தற்போது சினிமா கூத்தாடிகளை பற்றி படிக்க வைக்கிறார்கள். தேசத்திற்காக உழைத்த பெரியவர்கள் வாழ்க்கை வரலாறு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. மாற்றம் என்பது மாறாறதது. கட்டாயம் இருமொழி கொள்கை போய் மும்மொழி நான்கு மொழி என்பது கட்டாயம் வந்தே தீரும். ஆனால் இந்த மும்மொழி கொள்கை என்னும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான் இப்போது உள்ள கேள்வி. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா அல்லது புதிதாய் விழும் தேங்காயா என்பது தான் கேள்வி குறி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை