உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செம்மையான வாக்காளர் பட்டியல் சாத்தியமா?

செம்மையான வாக்காளர் பட்டியல் சாத்தியமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : இறந்த மற்றும் இரட்டை பதிவு வாக்காளரை நீக்குவதில், தேர் தல் அதிகாரிகளுக்கு பக்கபலமாக அரசியல் கட்சிகள் செயல்பட்டால், செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு எளிதாகும்.திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதி களுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த அக். 29ம் தேதி முதல் சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது.வரும் ஜனவரி 1ல் 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளரை பட்டியலில் இணைப்பது மட்டுமின்றி, இறந்த வாக்காளர் பெயர் நீக்கம் செய்வது; பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட அனைத்துவகையான மாறுதல்களும், சுருக்கமுறை திருத்தத்தில் மேற்கொள்ளப்படுகிறது.மாவட்டத்திலுள்ள 2,536 ஓட்டுச்சாவடிகளிலும், இதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்துபெறப்பட்டு வருகிறது. https://voters.eci.gov.in என்கிற இணையதளம் வாயிலாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்காக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால் மட்டுமே, தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கு சாத்தியம். அந்தவகையில், புதிய வாக்காளர்களை தவறாமல் பட்டியலில் சேர்ப்பதுபோல், இறந்த மற்றும் இரட்டைப்பதிவு வாக்காளரை பட்டியலிலிருந்து நீக்குவது மிகவும் அவசியமாகிறது.

அரசியல் கட்சியினர் பங்களிப்பு பிரதானம்

வாக்காளர் பட்டியல் சிறப்பாக அமைய, அரசியல் கட்சியினரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும், பூத் வாரியாக ஓட்டுச்சாவடி நிலை முகவர் (பி.எல்.ஏ.,) உள்ளனர். உள்ளூரைச் சேர்ந்த இவர்களுக்கு, தங்கள் பகுதியில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர் யார், இறந்தவர்கள், இடம்பெயந்த வாக்காளர் யார் என்கிற விவரங்களெல்லாம் நன்கு தெரியும்.புதிய வாக்காளர் பெயரை பட்டியலில் சேர்க்க ஆர்வம்காட்டும் அரசியல் கட்சியினர், இறந்த மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளரை நீக்க ஆர்வம்காட்டுவதில்லை என்பதே யதார்த்த உண்மை.வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில், தேர்தல் அதிகாரிகளுக்கு பக்கபலமாக, அரசியல் கட்சிகளின் பி.எல்.ஏ.,க்கள் செயல்பட வேண்டும். தங்கள் பகுதி பி.எல்.ஓ.,க்களிடம் தெரிவித்து, உயிரிழந்த வாக்காளரை பட்டியலிலிருந்து நீக்க உதவ வேண்டும். பி.எல்.ஏ.,க்கள் மூலம், தொகுதி வாரியாக இறந்த வாக்காளர் விவர பட்டியலை அரசியல் கட்சியினர், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கலாம்.குறிப்பிட்ட வாக்காளரின் இடம்பெயர்தல் உறுதி என்கிறபட்சத்தில், பெயர் நீக்கம் செய்ய ஆட்சேபனை தெரிவிக்க கூடாது; இரட்டை பதிவு வாக்காளரை களைய கைகொடுக்க வேண்டும். அதிகாரிகளோடு இணைந்து, அரசியல் கட்சியினரும் மனதுவைத்து செயல்பட்டால், செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கமுடியும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S.Muthuswamy
நவ 12, 2024 09:33

ஒரே வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி இருவரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் வெவ்வேறு இடங்களில் இருப்பது எப்படி நியாயம் ? ஒட்டு மொத்தா பட்டியலையும் எண் என்ன அடிப்படையில் மாற்ற vendum


சுந்தர்
நவ 11, 2024 12:54

ஆதார் உடன் இணைப்பதே சரியான வழி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை