உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்குவதா?: எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு கண்டனம்

இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்குவதா?: எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு கண்டனம்

புதுடில்லி : 'பாகிஸ்தான் கூட தன் சொந்த மக்களுக்கு எதிராக ராணுவத்தை ஏவிவிடவில்லை; ஆனால், இந்தியா தன் சொந்த குடிமக்கள் மீதே நிரந்தரமாக போர் தொடுத்திருக்கிறது' என, எழுத்தாளர் அருந்ததி ராய் சர்ச்சைக்குரிய வகையில் கூறிய கருத்துக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. அரசியல் ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், 'இந்தியா தன் சொந்த குடிமக்கள் மீதே நிரந்தரமாக போர் தொடுத்திருக்கிறது. சுதந்திரம் பெற்றது முதல், காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், தெலுங்கானா, பஞ்சாப், கோவா மற்றும் ஹைதராபாதில் இந்த சண்டை நடந்து வருகிறது. 'பாகிஸ்தான் கூட, இப்படி சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ராணுவத்தை ஏவிவிடவில்லை. ஆனால், ஜனநாயக நாடாக திகழும் உயர் ஜாதி ஹிந்துக்கள் கொண்ட இந்தியா, இப்படி சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுத்து வருகிறது' என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அருந்ததி ராய் பேசிய இந்த வீடியோவை, எழுத்தாளர் ஆனந்த் ரகுநாதன் என்பவர், சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'அருந்ததி ராயை பொறுத்தவரை, 1961ல் நடந்த கோவா விடுதலை இயக்கம் என்பது கிறிஸ்தவர்களுக்கு எதிரான உயர் ஜாதி ஹிந்துக்களின் போர் என நினைக்கிறேன். இது எவ்வளவு அபாரமான கற்பனை' என, ஆனந்த் ரகுநாதன் விமர்சித்துள்ளார். 'வெளியுறவு முன்னாள் செயலரும், ஜே.என்.யூ., பல்கலை.,யின் வேந்தருமான கன்வால் சிபிலும், ஆனந்த் ரகுநாதனின் பதிவை மேற்கோள்காட்டி, 'சொந்த நாட்டுக்கு எதிராக அருந்ததி ராய் விஷத்தை கக்கியுள்ளார்' என கண்டித்துள்ளார். இது குறித்து கன்வால் சிபில் கூறியதாவது: சொந்த மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த ராணுவ நடவடிக்கையை மறந்து விட்டு, அருந்ததி ராய் தனக்கு வசதியாக பேசி இருக்கிறார். 2009ல் தெற்கு வசிரிஸ்தானில், ஆப்பரேஷன் ரஹத் - இ - நிஜத், 2014ல் வடக்கு வசிரிஸ்தானில் ஆப்பரேஷன் ஜர்ப் - இ - அஸ்ப் போன்ற ராணுவ நடவடிக்கைகள் எல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது. க டந்த, 2006ல் பலுசிஸ்தான் மக்களுக்கு எதிராக அப்போதைய அதிபர் முஷாரப் ராணுவ நடவடிக்கை எடுத்ததை அவ்வளவு எளதில் மறந்துவிட முடியுமா? பீரங்கிகளால் நவாப் அக்பர் புக்தியை முஷாரப் கொலை செய்யவில்லையா? அப்போது துவங்கப்பட்ட ஆப்பரேஷன் இன்று வரை நிற்கவே இல்லை. ஏன், கடந் த ஆண்டு ஜூன் மாதம் கூட, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஆப்பரேஷன் அசம் - இ - இஷ்டேகம் என்ற நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்திருந்தது. அ வர் எதற்காக இப்படி பாசாங்கு செய்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பாகிஸ்தானின் மோசமான சரித்திரத்தில் படிந்த ரத்தக்கறைகளை துடைக்கவே, அவர் இப்படி வெட்கமே இல்லாமல், கருத்து கூறியிருக்கிறார். இதற்காகவே ஹிந்துக்களை வில்லன்களாக சித்தரித் து, உண்மைகளை திரித்து, இந்தியா மீது வி ஷத்தை கக்கி இருக்கிறா.ர் இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Rathna
செப் 18, 2025 12:44

இந்தியாவை எதிர்த்து பேச, வெளி நாட்டு பணம் கொட்டும் போது பேச தானே செய்யும். இந்த மிஷ, விஷ நரி காஷ்மீரில் பல பெண்களை மானபங்கம் செய்த, ராணுவ வீரர்களை கொன்ற கொடுங்கோலன் யாசின் மாலிக் உடன் போட்டோ 2014 எடுத்து போட்டது நினைவுக்கு வருகிறது. இவனது உறவுகாரன் டிவி தான் இந்துத்வ. அது போடாத தவறான செய்திகளா?


Kulandai kannan
செப் 17, 2025 19:55

அவர் ஒரு கிறித்தவர். அப்படித்தான் தேசவிரோத மனப்பான்மை இருக்கும்.


Ram thevar, Thampikkottai
செப் 17, 2025 15:01

அருந்ததிராய் மேற்கத்திய நாடுகளின் ஒரு அடிவருடி, இவர் அர்பன் நக்சல், நக்சல் கூட்டத்தின் ஆதரவாளர் இப்படித்தான் பேசுவார். இவர் இப்படி பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம். இவருக்கு ஏன் அமெரிக்கா மேற்கத்திய நாடுகள் விருது கொடுத்து அழகு பார்க்கிறார்கள் என்று இப்போது தெரிகிறதா.


ManiK
செப் 17, 2025 14:19

இந்த அருந்ததி ஒரு அர்பன் நக்சல் மற்றும் எல்லாம் அறிந்த அதிமேதாவி. போராளி போர்வையில் நாட்டை ஹிம்சிக்கும் ஒரு கோழை.


Venugopal S
செப் 17, 2025 11:17

அவருடைய கருத்தை சொல்ல ஜனநாயக நாட்டில் அவருக்கு உரிமை உண்டு!


theruvasagan
செப் 17, 2025 12:10

அப்ப எதுக்கு நீங்க முட்டுக்குடுக்கற .


Sudarsan Ragavendran
செப் 17, 2025 15:41

ஆனால் தப்பிக்கவும் நாட்டிற்கு எதிராகவும் சொல்ல அல்ல நமது பேச்சுரிமை. எதிலும் ஓர் அளவு வேண்டும்


krishna
செப் 17, 2025 15:46

EERA VENGAAYAM VENUGOPAL UNNAI PONDRA KEDU KETTA KEVALA 200 ROOVAA COOLIKKU MAARADIKKUM KOMALIKKE SOLLA URIMAI UNDU.ANDHA DESA DHROGA PENMANIKKU MUTTU KODUKKUM NEE ARUVARUPPIN UCHAM.AVALAI VIDA 100 MADANGU KEVALAM.


theruvasagan
செப் 17, 2025 11:03

அம்மணியை பொருக்கிஸ்தானுக்கு விசா எடுத்து அனுப்பி விட்டால் அங்கேயே இருந்து கொண்டு அவர்கள் புகழை சதாசர்வ காலமும் பண்ண ஏதுவாக இருக்கும்.


ஆரூர் ரங்
செப் 17, 2025 10:53

இடதுசாரி என்பது சீரியசான மனநோய். அது தெளிய ஒரே வழி தூக்குதண்டனை. அதே அருந்ததி காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான புத்தகம் எழுதி அது தடை செய்யப்பட்டது.


R. venkatasubramanian
செப் 17, 2025 09:57

தன் உடம்பில் இது நாள் வரையில் எந்த மருந்து கொடுத்தாலும் சற்றேனும் குறையாத விஷத்தை அல்லவா வைத்திருக்கிறார்கள். India runs with the All- truest Democracy. Period.


மணியன்
செப் 17, 2025 09:35

வெள்ளையர்கள் விருது கொடுப்பது அந்த நபரை நாட்டுக்கு எதிராக சதி செய்ய தூண்டும் செயல்,எனவே அரசு இதற்கென பிரத்யேக அமைப்பை உருவாக்கி நாட்டுக்கு ஏற்படும் அழிவை தடுக்க வேண்டும்.கெஜ்ரிவாலுக்கு ராமன் மெக்சாய்சே என்ற விருது கொடுக்கப்பட்டது.பின் அரசியலில் நுழைக்கப்பட்டு நாட்டை ஜெலின்ஸ்கியை போல் மேற்கத்திய ஆளுகைக்கு உட்படுத்த முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நமது மக்கள் விழித்துக்கொண்டு கேஜ்ரிவாலை தோற்கடித்து விட்டதால் நாடு மோடியின் ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளது.


jss
செப் 17, 2025 09:29

நாட்டை விட்டு வெளியேற்றக்கூடியா பல நபர்களில் முதன்மை இடம் வகிக்க கூடியவர். இந்த விஷநாகம் நாட்டை விட்டு போவது இவருக்கும். நல்லது நாட்டுக்கும் மிக நல்லது. உலகத்துக்கும் நல்லது , பிபஞ்சத்துக்கும் நல்லது


முக்கிய வீடியோ