உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 60 வயதான ஆண்களுக்கும் வருகிறது விடியல் பயணம்?

60 வயதான ஆண்களுக்கும் வருகிறது விடியல் பயணம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அரசு பஸ்களில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், இலவச பஸ் பயண திட்டத்தை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், 2021 முதல் விடியல் பயணம் எனப்படும் சாதாரண பஸ்களில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது அவர்களின் பயண செலவுகளை குறைத்து, வேலை மற்றும் கல்விக்கு உதவுகிறது. மகளிருக்கு மட்டுமான இந்த திட்டத்தை, ஆண்களுக்கும் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இலவச பஸ் பயண திட்டத்தை தி.மு.க., அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஓரிரு மாதங்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து தரப்பு ஆண்களுக்கும் இலவச பயண திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்தே, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பயண திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும்' என்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Mani . V
டிச 09, 2025 05:10

ஒழுங்காக காசு கொடுத்து போனாலும் பிரச்சினை இல்லை. ஓசி என்று விடியா ஓட்டை பேருந்தில் ஏற்றிக் கொண்டு சென்று, நடுவழியில் பேருந்து பழுது என்று நிறுத்திய பிறகு, அந்த முதியவர்கள் அங்கிட்டும் நடக்க முடியாமல், இங்கிட்டும் நடக்க முடியாமல், மழை பெய்தால் நனைத்தும், வெயில் அடித்தால் காய்ந்தும், தண்ணீருக்கு கூட வழியில்லாமல் சாக வேண்டியதுதான். வாழ்க மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தே காலம் தள்ளும் எழவு மாடல் ஆட்சி.


Vijay D Ratnam
டிச 09, 2025 02:25

அட்றா அட்றா அட்றா, இதற்கான செலவை அரசியல் தலைவர்கள் கொள்ளையடித்து வைத்து இருக்கும் பணத்திலிருந்து கொடுக்கப்போகிறார்களா அல்லது அவிங்க கட்சி பணத்தை எடுத்து கொடுக்க போறாய்ங்களா. உழைத்து சம்பாதித்து வரி செலுத்தும் மக்கள் பணத்திலிருந்து தானே எடுத்து கொடுக்க போகிறார்கள். ஓசில குடுத்தா பினாயில கூட வரிசை கட்டி நின்று வாங்குவான் தமிழன் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் 60 வயதான ஆண்களுக்கும் பெண்களுக்கும் ரயில் பயணம் இலவசம். உடல் ஊனமுற்றோருக்கும், விதவைகளுக்கும், மாணவ மாணவிகளுக்கும் இலவச ரயில் பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம். தமிழ்நாட்டுக்குள் விமான பயணம் இலவசம் என்றும் அறிவிக்கலாம். எவன் கண்டான் தமிழ்நாட்டில் அணைத்து போக்குவரத்தும் அனைவருக்கும் இலவசம் என்று கூட அறிவிக்கலாம். சுப்ரீம் கோர்ட் தலையிட்டு சட்டையை பிடித்து ஏண்டா நாயே ங்கொப்பன் ஊட்டு காசா இது என்று கேட்கவேண்டும் என்று சாமான்யன் நினைக்கிறான். நடக்குமா இதெல்லாம். ஓட்டுக்கு காசு கொடுத்தா, தத்தி தற்குறி, முண்டம், அரைவேக்காடு இப்டி எவன்கிட்ட வேணும்னாலும் பவரை தூக்கி குடுப்பான் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் 2000 முதல் 2025 வரை இந்த 25 ஆண்டுகளில் இலவசங்களுக்காக எவ்வளவு கோடி செலவு செய்து இருப்பார்கள். இது ரொம்ப ஆபத்தானது. இப்படியே போனால் ஒரு மாஃபியா கூட்டம் நாங்கள் நிறுத்தும் நபருக்கு வாக்களித்தால் ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் தருகிறோம் என்று 234 தொகுதிகளுக்கும் அவர்களின் ஆட்களை நிறுத்தினால் என்ன ஆகும். ஜனாதிபதியும் உச்ச நீதிமன்றமும் தலையிடவேண்டும். இந்த இலவச அரசியல் எனும் பச்சை அயோக்யத்தனத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். வளர்ச்சியை நோக்கி வேகமெடுக்கும் அருமையான தேசம் நம் தேசம், நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை மக்கள் அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.


K.Ramachandran
டிச 08, 2025 20:06

Its already free for students and women. If it is made free for men above 60 years also, then they may as well make it free for every one. No need to have a conductor in every bus and pay them to collect ticket money for a very small percentage of passengers.Also, you can do away with the checking inspector squad etc.Just run free buses with a driver.


M Ramachandran
டிச 08, 2025 19:34

ரொம்ப நல்ல எண்ணம். போகிற போக்கில் இன்னும் தள்ளாடி கொண்டிருக்கும் அரசு பேருந்து நிறுவனைத்தை இன்னும் கடனாளி ஆக்கி விட்டு வரும் அரசை திண்டாட வைக்க வேண்டும் என்ற மிக நல்ல எண்ணம். வாழ்க விடியல் வளர்க காஜான கொள்ளை.


Rajasekar Jayaraman
டிச 08, 2025 17:06

என்ன குட்டிகரனும் போட்டாலும் 2026 தேர்தலில் திருட்டு திராவிட அழிவு நிச்சயம் யாராலும் தடுக்க முடியாது எல்லா கொள்ளையர்களும் திகார் மற்றும் புழல்.


kjpkh
டிச 08, 2025 17:01

இலவச பயணம் செய்யத் தகுதிகள். அரசு ஊழியராக இருந்திருக்க கூடாது. அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்களாக வேலை பார்த்து இருக்கக் கூடாது. சொந்த வீடு இருக்கக் கூடாது. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ஆயிரம் ரூபாய் பென்ஷன் வாங்குவாராக இருக்கக் கூடாது. விவசாயிகளாக .இருக்கக் கூடாது. சொந்தமாக சின்ன பெட்டிக்கடை கூட வைத்து இருக்கக் கூடாது. மகன் சம்பாத்தியத்தில் வாழ்பவராக இருக்கக் கூடாது.


Rajasekar Jayaraman
டிச 08, 2025 17:06

சபாஷ்


Anonymous
டிச 08, 2025 17:32

கஞ்சா, பொடி விற்றால் இலவசமா?


கோவிந்தா
டிச 08, 2025 15:10

இலவசம் கொடுத்து ஓட்டு திருட்டு


murugan
டிச 08, 2025 14:16

அவசியமற்ற திட்டம். இலவசமாக இந்த அரசு எதுவும் ஆண் / பெண் இருவருக்கும் கொடுக்கவேண்டாம். ஆனால் கொள்ளை அடிப்பதை நிறுத்தவேண்டும். இது அரசு அல்ல கொள்ளைக்காரக்கூட்டம்.


Ramesh Sargam
டிச 08, 2025 13:24

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பயணம். ஆனால் அவர்கள் கொண்டுசெல்லும் luggage களுக்கு டபுள் கட்டணம் வசூலிக்காமல் இருந்தால் நல்லது. குறைந்த பட்சம் luggage எடுத்துச்செல்ல அனுமதிக்கவேண்டும். அதிக luggage என்றால் கட்டணம் வசூலியுங்கள்.


ஆரூர் ரங்
டிச 08, 2025 13:19

பெரும்பாலான சாதாரண பேருந்துகளில் முதியவர்கள் ஏறமுடியாத மாதிரி உயரமான படிகள் உள்ளன. இதனாலேயே அவர்கள் ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்ல வேண்டிய கட்டாயம் . இச் சலுகையால் அவர்களுக்கு பலனில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை