உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சட்டையை கிழித்து ஸ்டாலின் தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி

சட்டையை கிழித்து ஸ்டாலின் தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி. சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப்பையில் அரிவாள்களே சாட்சி. பெண்கள் பாதுகாப்பின்மைக்கு, அண்ணா பல்கலையே சாட்சி. போதைப்பொருட்கள் கடத்தலுக்கு, தி.மு.க., அயலக அணியே சாட்சி. போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் தி.மு.க., இளைஞர் அணி கூட்டமே சாட்சி. ஸ்டாலின் மாடல் சமூக அநீதிக்கு வேங்கைவயலே சாட்சி. ஏற்கனவே, 'ஆப்பரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0' அனைத்துமே தோல்வி. இதில் இன்று, 'வெர்ஷன் 2.0 லோடிங்காம்'. அ.தி.மு.க., ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழகத்தை, ஜாமினில் வந்தவர்களுக்கு எல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு, முதல்வரே சாட்சி. வரும் 2026ல் ஒரே வெர்ஷன்தான். அது தமிழ்நாடு அ.தி.மு.க., வெர்ஷன். வருகிற சட்டசபை பொதுத்தேர்தலில், மக்கள் பெரிய 'ஓ' போட்டு, 'பை பை ஸ்டாலின்' என்று சொல்லும்போது, ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு, தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Raj
மே 04, 2025 13:15

தவழ்ந்து சென்று காலில் விழுந்து பதவி வாங்கியது நீதானே. இப்போது அமீத்ஷா காலில் தானே விழுந்து இருக்கீங்க


skv srinivasankrishnaveni
மே 02, 2025 19:08

மக்களே ப்ளீஸ் biggest நோ டு dmk அண்ட் admk என்று முடிவு எடுங்களேன் நல்லாட்சி கிடைக்கவேண்டும் என்றால் பிஜேபி ஆளவேண்டும். அப்போதான் தமிழ்நாட்டின் அவலங்களான லஞ்சம் கற்பழிப்பு கொலை கொள்ளை oliyum


Training Coordinator
மே 01, 2025 07:16

தனது தனித் திறமையை முதல்வருக்கு கற்றுத் தருகிறார்.


kamal 00
ஏப் 30, 2025 18:22

கொடுமை, சட்டையை கிழிங்க.... மக்கள் வாழக்கை யை கிழிக்காதீங்க


vijai hindu
ஏப் 30, 2025 14:06

டேபிள் சந்தில் ஊர்ந்து போனவர் ஸ்டாலின் சட்டை கிழிச்சது அது சரி கீழே தவழ்ந்து போறத பத்தி நீங்க பேசாதீங்க


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 30, 2025 08:36

தவழ்ந்த குழந்தை யாரென்று இந்த உலகம் நன்கு அறியும்!


c.mohanraj raj
ஏப் 30, 2025 07:01

இம்முறை வேறு ஐடியா வைத்திருப்பர்


அப்பாவி
ஏப் 30, 2025 06:56

அவர் சட்டையக் கிழிச்சுக்கற ராசி. நீங்கதான் தவழ்ந்து போற ராசிக்காரர். ஏற்கனவே பாத்திருக்கோமே.


சமீபத்திய செய்தி