உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காமராஜர் ஆட்சி லட்சியம்; கூட்டணி ஆட்சி நிச்சயம்: புதிய கோஷத்துடன் களமிறங்க தயாராகுது காங்.,

காமராஜர் ஆட்சி லட்சியம்; கூட்டணி ஆட்சி நிச்சயம்: புதிய கோஷத்துடன் களமிறங்க தயாராகுது காங்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

: தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வரும் சட்டசபை தேர்தலுக்கு, 'காமராஜர் ஆட்சி லட்சியம்; கூட்டணி ஆட்சி நிச்சயம்' என்ற, புதிய கோஷத்துடன் களமிறங்க முடிவு செய்துள்ளது. ஜனவரி மாதம் மூன்று லட்சம் நிர்வாகிகளுடன், ராகுல் பங்கேற்கும் மாநாட்டை நடத்த, கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9mlofegz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதும், காங்கிரஸ் சீரமைப்பு மேலாண்மை தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேட்டது, தமிழக காங்கிரசாரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே ஆகியோர் இணைந்து, கிராம, நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமன திட்டத்தை, தமிழக காங்கிரசில், முதல் முறையாக அமல்படுத்தினர். இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களிலும், கட்சிக்கு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். இதற்காக, தமிழகத்தை 13 மண்டலங்களாக பிரித்து, கோஷ்டி தலைவர்களை பொறுப்பாளர்களாக நியமித்தனர். சட்டசபை தொகுதிக்கு, 1,000 நிர்வாகிகள் என, மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், 2.34 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய, அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில், மாநில துணைத்தலைவர் வசந்த ராஜ் தலைமையில், 'வார்ரூம்' அமைக்கப்பட்டு, அனைத்து பணிகளும், டிஜிட்டல் வாயிலாக முடிக்கப்பட்டுள்ளன. இதை அறிந்த ராகுல், கட்சி நிர்வாகிகளை பாராட்டி உள்ளார். தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியில் காங்கிரஸ் ஏற்கனவே ஆட்சி அமைத்தது போல், தமிழகத்திலும் ஆட்சி அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, 'காமராஜர் ஆட்சி லட்சியம்; கூட்டணி ஆட்சி நிச்சயம்' என்ற கோஷத்துடன், ஜனவரி மூன்றாவது வாரத்தில், 3 லட்சம் பேர் பங்கேற்கும் மாநாட்டை, திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளனர். அம்மாநாட்டில் 234 தொகுதிகளில் தலா ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநாட்டை எழுச்சியுடன் நடத்திய பின், தி.மு.க.,வுடன் கூட்டணி ஆட்சிக்கு பேரம் பேசி, கூடுதல் தொகுதிகளை பெற, கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. தி.மு.க., சம்மதிக்காவிட்டால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது என, தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Naga Subramanian
நவ 01, 2025 15:36

"திராவிட ராகுல் காமராஜ் மாடல்" என்ற ஒரு புதிய முழக்கத்தை, காங்கிரஸ்ஸிடமிருந்து எதிர்பார்க்கலாம். அடுத்து மீண்டும் திமுக வந்தால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை முதலமைச்சர் என்ற பதவியை ஏற்படுத்தி, காங்கிரஸ்ஸுக்கு அதில் சிலவற்றை கொடுக்கலாம். இதுதான் ஆட்சியில் பங்கு என்று திமுகவும் பறைசாற்றும்.


Madras Madra
நவ 01, 2025 13:51

காங்கிரஸ் கட்சி கொள்கைகள் காலாவதி ஆகி பல மாமங்கம் ஆகி விட்டது


கண்ணன்,மேலூர்
நவ 01, 2025 13:02

திமுக ஆட்சி நிச்சயம், முட்டுக் கொடுப்பது லட்சியம்!


theruvasagan
நவ 01, 2025 12:00

காமராஜர் வழியில்தான் விடியல் ஆட்சி நடக்கிறது. நாங்க ஆட்சியில் கூட்டணி என்று சொன்னது எங்க கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் அதில் விடியல் கட்சிக்கு அமோகமாக பங்கு கொடுப்பதை பற்றி சொன்னோம் என்று சொல்லி சமாளித்துவிடுவாக.


palaniappan. s
நவ 01, 2025 11:28

ஊழல் காங்கிரஸுக்கும், காமராஜருக்கும் என்ன சம்பந்தம்?


ராமகிருஷ்ணன்
நவ 01, 2025 09:54

காமராஜர் ஆட்சி நிச்சயம், கூட்டணி ஆட்சி நிச்சயமில்லையே.


Haja Kuthubdeen
நவ 01, 2025 09:19

காலம் பூரா திமுகவிற்கு பல்லக்கு தூக்குவதை தவிற வேறு வழியே இல்லை.. கூட்டணி ஆட்சி காமராஜர் ஆட்சி என்பதெல்லாம் வெத்து வேட்டு


Haja Kuthubdeen
நவ 01, 2025 09:16

இதெல்லாம் ராகுல் சோனியா போன்றோருக்கு தெரியுமா!!!???


திகழ் ஓவியன், AJAX ONTARIO
நவ 01, 2025 09:00

நிச்சயம். ஹி ஹி


D Natarajan
நவ 01, 2025 07:58

கடைசி வரை பல்லக்கு தூக்க வேண்டியது தான் . ஒன்றும் கிடைக்காது


Haja Kuthubdeen
நவ 01, 2025 09:22

பல்லக்கு தூக்குவதை கூட ரொம்ப பவ்வியமா தூக்குவாய்ங்க...செல்வ பெருந்தகை தலைவரா இருக்கும் போது காங்கிரஸ் எப்படி போராடும்!!!


புதிய வீடியோ