உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / .அடுத்தடுத்து சிக்கும் பாக்., நபர்கள் பீதியில் பரிதவிக்கும் கர்நாடக மக்கள்

.அடுத்தடுத்து சிக்கும் பாக்., நபர்கள் பீதியில் பரிதவிக்கும் கர்நாடக மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசித்த, 20க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியரை கைது செய்துள்ள போலீசார், விசாரணயை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால், அவர்கள் வட மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அடுத்தடுத்து சிக்கும் பாகிஸ்தானியர்களால், கர்நாடக மக்கள் கிலி அடைந்துள்ளனர்.பெங்களூரு நகரின் பீன்யா, ஜிகனி உட்பட கர்நாடாகாவின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக வசித்து வந்த 20க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களை, போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். முதலில் ரஷீத் சித்தகி மற்றும் அவரது குடும்பத்தின் மூவர் கைதாகினர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இவர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டு, பெங்களூரில் வசிக்கின்றனர். போலியான ஆதார் கார்டு, பாஸ்போர்ட் உட்பட மற்ற ஆவணங்களை தயாரித்துள்ளனர்.இவர்களின் பின்னணியில், பெரிய நெட் ஒர்க் செயல்படுகிறது. இந்த நெட் ஒர்க்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் பர்வேஸ் என்பவர், நகர ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.இவரிடம் விசாரித்ததில் மேலும் பல தகவல்கள் தெரியவந்தது. பாகிஸ்தானியர்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசிப்பதற்கு, தேவையான உதவிகளை அவர் செய்து கொடுத்துள்ளார்.இவர் கொடுத்த தகவலின்படி, கர்நாடகா போலீசார், டில்லி, தமிழகம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சென்று சட்டவிரோதமாக வசித்த பாகிஸ்தானியர்களை கண்டுபிடித்து, பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளனர். இவர்களை போன்று, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாகிஸ்தானியர்கள் சட்டவிரோதமாக வசிப்பதும் தெரிந்தது. இவர்களை கண்டுபிடிக்க, கர்நாடக போலீசார் இன்றோ அல்லது நாளையோ, வடமாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.மக்களுடன் மக்களாக பதுங்கியிருந்த, பாகிஸ்தானியர்கள் கைதாவது, கர்நாடக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பெங்களூரில் தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பள்ளிகள், விமான நிலையம், பிரபலமான பொறியியல் கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இச்சூழ்நிலையில், பாகிஸ்தானியர்கள் கண்டுபிடிக்கப்படுவதால், மக்கள் கிலி அடைந்துள்ளனர். போலீசாரும், அறிமுகம் இல்லாதோருக்கு வீடு வாடகைக்கு கொடுக்கும் முன், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும். ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஒருவேளை சந்தேகத்துக்கு உரிய நபர்களாக இருந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Vijayakumar Vijay
அக் 16, 2024 21:29

முதலில் இவர்களைத் தேடி ஒழிக்க வேண்டும் இல்லையென்றால் மும்பை தாக்குதல் போல் இவர்கள் கைவரிசை காட்டுவார்கள்.இங்குள்ள தீவிரவாதிகளை கைது செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு


Sambandam Sundaramurthy
அக் 16, 2024 19:15

எப்படி வந்தார்கள் இந்தியாவுக்கு விசா இல்லாமல்


Gnanavel
அக் 16, 2024 12:27

குட் மிகுந்த அருமையான நல்ல தரமான பதிலாக நாண் பார்க்கின்றேன்


china durai
அக் 16, 2024 06:36

உடனடியாக மத்திய அரசுக்கு இது இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது அவர்களுடைய பிளான் என்ன என்பதை தீவிரமாக விசாரிக்க வேண்டும்


Ramesh Sargam
அக் 14, 2024 20:59

முதலில் அப்படிப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை கண்டுபிடித்து மிக மிக கடுமையாக தண்டிக்கவும்.


Subash BV
அக் 14, 2024 20:04

These guys are here with the help of opposition political parties, MORE DUE TO CONGRESS. UNDERSTAND THE REASON WHY THESE GUYS OPPOSING CAA AND NRC WITH TOOTH AND NAIL. HINDUS BE ALERT.


Rasheel
அக் 14, 2024 19:16

உள் நாட்டு மாநில ஆதரவு இல்லாமல் எதுவும் நடக்காது. சில கட்சிகளின் பாகிஸ்தானிய ஆதரவு அனைவருக்கும் தெரிந்ததே.


என்றும் இந்தியன்
அக் 14, 2024 16:44

இன்னும் கொஞ்சம் யோசிப்பாயாக குழந்தாய்???காரணம் கண்டு பிடி??? நடப்பது யாருடைய ஆட்சி முஸ்லீம் நேரு காங்கிரஸ் ஆட்சி கர்நாடகாவில்???திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு ஆட்சி டாஸ்மாக்கினாட்டில்???ஆகவே இங்கு பாகிஸ்தானியர்கள் பங்களாதேஷிகளுக்கு ரேஷன் கார்டு ஆதார் கார்டு பாஸ்போர்ட் எல்லாம் இந்தியன் என்று இருக்கும் அடுத்தது Worst Bengal அங்கும் இப்படித்தான்


ஆரூர் ரங்
அக் 14, 2024 12:17

தனி திராவிட நாடு போராட்டத்துக்கு ஆதரவளித்தால் பாகிஸ்தான் விடுதலைக்கும் தான் போராடத்தயார் என்று ஜின்னாவிடம் பேரம் பேசப் போனவர் ஈவேரா. அவனது கன்னட பூமியில் பாக்கி ஆட்கள் குடியேறுவது ஆச்சர்யமில்லை.


தமிழ்வேள்
அக் 14, 2024 12:08

மூர்க்கத்துக்கு பதிலடி மூர்க்கத்தனமாக கொடுத்தால் மட்டுமே அதுங்களுக்கு புரியும் ...அடியும் உதையும் வஞ்சனை வைக்காமல் கொடுத்து வெளுத்து எடுக்கவேண்டும் .....


முக்கிய வீடியோ