உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவை டாஸ்மாக் பார்களில் வசூலை துவக்கியது கரூர் கும்பல்

கோவை டாஸ்மாக் பார்களில் வசூலை துவக்கியது கரூர் கும்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கூடங்களில், கரூரை சேர்ந்தவர்கள் வசூல் வேட்டையை துவக்கியுள்ளனர். ஏரியாவுக்கு ஏற்ப, லட்சக்கணக்கில் பணம் கேட்பதால், 'பார்' ஏலம் எடுத்தவர்கள் புலம்பி தவிக்கின்றனர்.கோவை மாவட்ட வடக்கு பகுதியில் 156, தெற்கு பகுதியில் 129 எண்ணிக்கையில், டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. பார் ஏலம் எடுத்து இருப்பவர்கள், கடை அமைந்துள்ள பகுதிக்கு ஏற்ப, அரசுக்கு 'டிடி'யாக லட்சக்கணக்கில் தொகை செலுத்துகின்றனர். இத்தொகை, கடைக்கேற்ப மாறுபடுகிறது. சமீபகாலமாக, கரூரை சேர்ந்த சிலர், பார் நடத்தும் உரிமையாளர்களை சந்தித்து, 'மாதம் 3 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, கடை கடையாக வசூல் வேட்டையை துவக்கியுள்ளனர். 'தராவிட்டால், கடையை நடத்த விட மாட்டோம்' என, பார் உரிமையாளர்கள் மிரட்டப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.இது தொடர்பாக, மதுக்கடை பார் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: கரூரை சேர்ந்த மூவர், ஒவ்வொரு மதுக்கடை பார்களுக்கும் வருகின்றனர். அரசுக்கு செலுத்த வேண்டிய டிடி தர வேண்டியதில்லை. கடைக்கு 2 அல்லது 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என, 'டார்ச்சர்' செய்கின்றனர். கோவை முழுதும் ஒரு வாரமாக அராஜகம் செய்கின்றனர்.இடத்துக்கு வாடகை, லட்சக்கணக்கில் கொடுக்க வேண்டியுள்ளது; அரசுக்கு டிடி கொடுக்க வேண்டும்; போலீசாருக்கு மாமூல் தர வேண்டும். இது போக, 'பார்ட்டி பண்ட்' என, 'கரூர் டீம்' பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றது. தொழில் செய்ய முடியாமல் அவதிப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramaze
டிச 24, 2024 14:59

அணிலே அணிலே ஓடிவா அழகு அணிலே ஓடிவா கொய்யாமரம் ஏறிவா குண்டுப்பழம் கொண்டுவா பாதிப்பழம் என்னிடம் மீதிப்பழம் உன்னிடம் கூடிக்கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்


SUBRAMANIAN P
டிச 23, 2024 13:51

ஏங்க, என்ன பேசிட்டு இருக்கீங்க.. நடக்குறது திமுக ஆட்சி.. அப்படிதான் இருக்கும், குடுக்க முடிஞ்சா குடுங்க, இல்லன்னா போங்க. வந்துட்டாங்க, புகார் குடுக்க..


Barakat Ali
டிச 23, 2024 10:00

சமீபகாலமாக, கரூரை சேர்ந்த சிலர், பார் நடத்தும் உரிமையாளர்களை சந்தித்து ..... அந்த சிலர் யார் ???? மாடல்காரர்களா ????


ஆரூர் ரங்
டிச 23, 2024 09:06

இடைத்தேர்தலை சந்திக்க ஆயிரம் கோடியாவது வேண்டாமா? அந்தக் காலத்திலிருந்தே அணில்தான் நல்லா உதவுது.


lana
டிச 23, 2024 08:55

இது ஒரு நல்ல தொழில். அடுத்தவன் குடும்பத்தை கெடுத்து நான் நல்லா இருக்க வேண்டும் என்பது. கர்மா யாரையும் விடாது. உங்கள் சந்ததி களுக்கு சொத்து சேர்ப்பதில் காட்டும் ஆர்வம் புண்ணியம் சேர்ப்பதில் இருக்கட்டும்


ராமகிருஷ்ணன்
டிச 23, 2024 16:48

தர்மம், நியாயம், அநியாயம், கர்மா, பாவம், புண்ணியம் என்று சொல்லும் இந்து மதத்தை ஒழிக்க நினைக்கிறோம் என்று திமுகவினர் முனைகின்றனர். அவர்களின் மனசாட்சி உறுத்துவதால் இந்து மதத்தை உதறி விட பார்க்கிறார்கள்.


அப்பாவி
டிச 23, 2024 08:53

அப்பிடியாவது அதிகமா காசு குடுத்து வாங்கி குடிக்கணுமா? அறிவே இல்லியா?


Vijay
டிச 23, 2024 08:30

திமுககாரர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு


subramanian
டிச 23, 2024 08:28

திமுகவின் கட்டுக்கடங்காத அராஜகம் ஒழிக. பேராசை பெரு நஷ்டம் ஏற்படும்.


ஆரூர் ரங்
டிச 23, 2024 07:40

சுப்ரீம் கோர்ட்ல ஜாமீன் வாங்கினது, உடனே மந்திரியாக்கினது வேற எதுக்கு?.


ராமகிருஷ்ணன்
டிச 23, 2024 07:01

அணில் ரேட்டை ஏற்றி விட்டார். குவாட்டருக்கு 20 ரூபாய் வசூல் செய்து சமாளிக்க வேண்டியுள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை