உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கொலைக்களமாக மாறுகிறது கொங்கு பகுதி: நயினார் நாகேந்திரன்

கொலைக்களமாக மாறுகிறது கொங்கு பகுதி: நயினார் நாகேந்திரன்

திருப்பூர் மாவட்டம், சேனாதிபாளையம் கிராமத்தில், ஆடு மேய்க்கச் சென்ற, முதிய தம்பதியரான வேலுசாமி - சாமியாத்தாள் ஆகியோர் பட்டப்பகலில், மர்ம முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சிவகிரி இரட்டை கொலை, ஈரோடு மூதாட்டி கொலை என, தொடர்ந்து, கொங்கு பகுதியில் வாரம், ஒரு கொலை சம்பவம் நடப்பது சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதை படம் பிடித்துக் காட்டுகிறது. முதியவர்களுக்கு கூட பாதுகாப்பு அளிக்க இயலாத அளவுக்கு தி.மு.க., அரசு திறனற்ற நிலையில் உள்ளது.பாசத்துக்கும், பண்புக்கும் பெயர் போன, கொங்கு பகுதி கொலைக்களமாக மாறி வரும் நிலையில், எப்போது விழித்துக் கொள்ளும் தி.மு.க., அரசு. வழக்கம்போல், தற்போதும் விசாரணை என, கண் துடைப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல், உடனே கொங்கு பகுதியில் முதியவர்களை தாக்கும் கயவர்களை கைது செய்து, மக்கள் பாதுகாப்பை, முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சொல்லி யாரையும் ஏமாற்ற வேண்டியதில்லை.- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

புரொடஸ்டர்
ஜூன் 12, 2025 09:00

மணிப்பூர் தெரியுமா நாகேந்திரன்?


ஆரூர் ரங்
ஜூன் 12, 2025 09:59

ஆமாம். 70 வருடங்களாக இயல்பு நிலை இல்லை. எல்லா ஆண்டுகளிலும் கலவரம். காங்கிரசு அன்னிய மிஷநரி உதவியுடன் வந்தேறி ஆட்களை அனுமதித்து நிரந்தர கலவர பூமியாக ஆக்கி விட்டார்கள்.


vivek
ஜூன் 12, 2025 13:52

தமிழகம் மணிப்பூரை விட மோசம்..


vivek
ஜூன் 12, 2025 13:58

தமிழ்நாட்டை சொன்னா மணிப்பூர் போயிட்டார்


pmsamy
ஜூன் 12, 2025 07:36

ரோட்ல போய் போராட்டம் பண்ணனும். ஏசி ரூம்ல இருந்து அறிக்கை விட்டா எல்லாம் சரியாயிடுமா


vivek
ஜூன் 12, 2025 13:57

டாஸ்மாக்கில் இருந்து ஊளையிடு


essemm
ஜூன் 12, 2025 06:15

கொங்கு மண்டலம் எப்போதும் அமைதியாகத்தான் இருந்தது. எல்லோரும் ஒற்றுமையுடனும். சகோதர சகோதர்களாகவும். அம்மா. அப்பா தாத்தா. பாட்டி என்ற உரிமையுடனும். ஒற்றுமையாகவும் வாழ்ந்துவந்தோம். என்றைக்கு இந்த திராவிட மாடல் அங்கு காலடி வைத்ததோ. அன்று பிடித்தது கோவைக்கு கெட்ட காலம். அது தொலையும் தூரம் வெகு தொலைவில் இல்லை. 2026 தேர்தலில். 234 தொகுதியிலும் மண்ணைக்கவ்வப்போவது உறுதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை